குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

ஷமோலி – ரவீந்திரநாத் தாகூரின் பாரம்பரிய இல்லத்தை குடியரசு துணைத் தலைவர் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Posted On: 16 AUG 2019 2:50PM by PIB Chennai

அரசும், சமுதாய அமைப்புகளும் ஒன்று கூடி காணத்தக்க மற்றும் காண இயலாத கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.

ரவீந்திரநாத் தாகூரின் பாரம்பரிய இல்லமான ஷமோலியைத் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்த பிறகு குடியரசு துணைத் தலைவர் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றினார்.

வங்காளத்திற்கு முன்னரும், இன்று வரையிலும் அனைவருக்கும் மேலான தன்னிரகற்ற இலக்கிய பிம்பமாக தாகூர் இருந்துள்ளார் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.

இந்தியாவிற்கும் குறிப்பாக வங்காளத்திற்கும் அவர் ஒரு மாபெரும் நிறுவனம் என்பதோடு உலகத்திற்கு ஒரு குரலாகவும், இந்தியாவின் ஆன்மீக பாரம்பரியத்திற்கு ஒரு பிரதிநிதியாகவும், இருந்துள்ள அவர், இந்தியாவின் பெருமையான சிறப்பான ஆளுமை என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.

சாந்தினிகேதன், மாறி வரும் காலத்தை வெற்றிகரமாக தழுவிக் கொண்ட அதே நேரத்தில் தனது உட்சாரத்தையும் பாதுகாத்துக் கொண்டுள்ளது. ஷமோலி என்ற இந்த பாரம்பரிய இல்லத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பது என்பது சிறப்பான அதன் வரலாற்றை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதோடு, அறிவு மற்றும் ஞானம் ஜனநாயகமயமாக வேண்டும் என்று நம்பிய இந்தியாவின் இறவாத கவிஞருக்கு செலுத்தும் அஞ்சலியும் கூட என்று அவர் குறிப்பிட்டார்.

*****


(Release ID: 1582190) Visitor Counter : 190