விண்வெளித்துறை

விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் விக்ரம் சாராபாய் இதழியல் விருதினை இஸ்ரோ அறிவித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2019 3:44PM by PIB Chennai

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக இதழியலில் இரண்டு வகைமையிலான விருதுகளை இஸ்ரோ நிறுவியுள்ளது.

அச்சு ஊடகத்தில் செய்தியாளராக அல்லது சுதந்திர செய்தியாளராக இருப்போரின் கட்டுரைகள் அல்லது வெற்றிச் செய்திகள் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும். இந்தி, ஆங்கிலம் அல்லது மாநில மொழிகளில், இந்தியாவிலிருந்து வெளிவரும் பிரபலமான இதழ்கள், அறிவியல் இதழ்கள் அல்லது சஞ்சிகைகளில் 2019-லிருந்து 2020 வரை வெளியான படைப்புகளிலிருந்து தெரிவு செய்யப்படும்.

முதல் வகையில் இரண்டு பேருக்கு தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும், பதக்கமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும்.

இரண்டாவது வகையில் ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம் என மூன்று ரொக்கப்பரிசுகளும், பாராட்டுப் பத்திரங்களும் வழங்கப்படும்.

தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரம், ஆகஸ்ட் 1, 2020-ல் அறிவிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை https://www.isro.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

 

 

 

                                                   *******


(வெளியீட்டு அடையாள எண்: 1581466) வருகையாளர் எண்ணிக்கை : 319
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati