விண்வெளித்துறை
விண்வெளியை அமைதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது மற்றும் ஆய்வு செய்வதில் ஒத்துழைப்பு அளிப்பதற்காக இந்தியா மற்றும் துனிசியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
05 AUG 2019 12:15PM by PIB Chennai
விண்வெளியை அமைதி நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது மற்றும் ஆய்வு செய்வதில் ஒத்துழைப்பு அளிப்பதற்காக இந்தியா மற்றும் துனிசியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஜூன் 11, 2019 அன்று பெங்களூரில் கையெழுத்திடப்பட்டது.
விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம், புவியின் தொலையுணர்வு உள்ளிட்ட பயன்பாடுகள்; செயற்கைக்கோள் அடிப்படையில் கடற்பாதையை அறிதல்; விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் கண்டறிதல்; விண்கலம், விண்வெளி மற்றும் நிலம் சார்ந்த செயல்பாடுகள்; விண்வெளி தொழில்நுட்பப் பயன்பாடு போன்ற முக்கிய நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைக்க இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
(रिलीज़ आईडी: 1581431)
आगंतुक पटल : 185