நீர்வளத் துறை அமைச்சகம்

மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் தண்ணீர் பிரச்சனைக்கு சிறப்பான மற்றும் விரைவான தீர்வு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனைகள் (திருத்த) மசோதா, 2019

Posted On: 10 JUL 2019 6:07PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் மற்றும் நதிப் பள்ளத்தாக்கு குறித்த பிரச்சனைகளுக்கும் தீர்வுறுதிக்கான மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனைகள் (திருத்த) மசோதா, 2019-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வுறுதிக் காண்பதை இது மேம்படுத்தும். சட்ட முறைப்படி தீர்வு கிடைக்கவும் தற்போதுள்ள நிறுவன அமைப்பை வலுவாக்கவும் மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனைகள் சட்டம்,      1956–ல், திருத்தம் கொண்டவர இந்த மசோதா உதவும்.

****


(Release ID: 1578220)