பிரதமர் அலுவலகம்

விஷ்வ உமையாதம் வளாகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

Posted On: 04 MAR 2019 7:45PM by PIB Chennai

அகமதாபாத் ஜஸ்பூரில் விஷ்ய உமையாதம் வளாகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (04.03.2019) அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நமது சமுதாயத்தை வலுப்படுத்துவதில், சாதுக்களும், மடாதிபதிகளும் ஆற்றிய பங்கை யாரும் மறந்துவிட முடியாது என்று குறிப்பிட்டார்.  விலைமதிப்பில்லாத அறிவுரைகளை அவர்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள் என்று  தெரிவித்த பிரதமர், தீமைக்கு எதிராகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் வலிமையையும், அவர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள் என்றார்.

      கடந்த காலம் நமக்கு தந்த சிறந்தவற்றை உள்வாங்கிக் கொள்ளவும், அதே நேரத்தில் மாறும் காலத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் ஆற்றலையும் சாதுக்களும், மடாதிபதிகளும்  கற்றுத் தந்திருப்பதாக பிரதமர் கூறினார்.

      மக்கள் நலனுக்கான முன்முயற்சிகளைப்  பற்றி குறிப்பிட்டப் பிரதமர், மத்திய அரசுக்கு எதையும் சிறிய அளவில் செய்வது ஏற்புடையது அல்ல என்றும், சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பெரிய அளவில் அரசு எப்போதும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

      சமுதாய அளவில், இளைய தலைமுறைக்கு மிக உயர்தரமான கல்வியைத் தரவேண்டும் என்று வலியுறுத்துவது மிக முக்கியமானது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

      மா உமியா-வில் நம்பிக்கை உள்ளவர்கள், பெண் சிசுக் கொலையை ஒரு போதும் ஆதரிக்கமாட்டார்கள் என்று பிரதமர் உறுதிபடக் கூறினார்.

      பாலினப் பாகுபாடு அற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க உதவுமாறு மக்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

-------



(Release ID: 1574931) Visitor Counter : 114


Read this release in: Assamese , English , Urdu , Marathi