சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் இடையேயான சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 JUN 2019 8:02PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்திய குடியரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை மற்றும் கிரிகிஸ் குடியரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இடையேயான சுகாதாரத் துறை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்தது.

கூட்டுறவின் பலன்கள் :

கூட்டுறவு உடன்படிக்கை கீழ்க்கண்ட துறைகளில் கூட்டுறவை உள்ளடக்கியதாகும் :-

  • சுகாதாரநலன் அமைப்புகளை வலுப்படுத்துதல் ;
  • தொற்று இல்லா நோய்கள், தொற்றுநோய்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு தடுப்பு ;
  • மருத்துவமனை மேலாண்மை அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் சுகாதார தகவல் அமைப்புகள், மருத்துவமனை மேலாண்மை ;
  • மகப்பேறு மற்றும் குழந்தை நலன் ;
  • மருத்துவ ஆராய்ச்சிகள் ;
  • சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை, இருதய அறுவைசிகிச்சை, புற்றுநோய், எலும்பியல், அவசரசிகிச்சை, போன்றவற்றில் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளுதல் :
  • சுகாதாரத் துறையில் மனித வளங்களின் திறனை மேம்படுத்துதல் ;
  • மருந்து கட்டுப்பாடு மற்றும் மருத்துவக் கருவிகள் வழங்குதல் துறையில் தகவல் மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளுதல் ;
  • மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் மனிதர்கள் மீது சோதிக்கப்படுகையில் அவை, குறித்த நற்பழக்கத் தகவல் மற்றும் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளுதல் ;
  • நோய்களின் ஒருங்கிணைந்த கண்காணிப்பு ;
  • மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனுபவங்களை பரிமாறிக் கொள்வதற்காக பயணத்திற்கு ஏற்பாடு செய்தல் ;
  • இணைய-சுகாதாரம் குறித்த அனுபவ பரிமாற்றம் ;
  • சுகாதார வல்லுநர்கள் இந்திய குடியரசில் தொடர் பயிற்சி பெறும் வகையில், “தகவல் தொழில்நுட்பத்திற்கான இந்திய-கிரிகிஸ் மையத்தில் பயிற்சி மற்றும் தொழில்வல்லுமை வளர்ச்சியை பெறுவதற்கான வாய்ப்புகளை அளித்தல் ;
  • சுகாதார சுற்றுலா ; மற்றும்
  • இரு தரப்பும் முடிவு செய்யும் இதர துறைகளில் கூட்டுறவு.

செயலாக்கம் :

ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கம் செய்திடவும் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கை செயல்படுத்துவதை மேற்பார்வையிடவும் பணிக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும்.

*****



(Release ID: 1574315) Visitor Counter : 125


Read this release in: English , Punjabi , Telugu , Kannada