ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்நிலைய மேம்பாட்டு கழகம், பிரெஞ்ச் தேசிய ரயில்வே மற்றும் ஏ எஃடி என்கிற பிரெஞ்ச் நிறுவனங்களுக்கிடையே முத்தரப்பு ஒப்பந்தம்

ஏ எஃடி என்கிற பிரெஞ்ச் நிறுவனம் இந்திய ரயில்நிலைய வளர்ச்சித்திட்டத்திற்கு பிரெஞ்ச் தேசிய ரயில்வே நிலைய மையங்கள் மற்றும் இணைப்புகள் வாயிலாக, தொழில்நுட்ப பங்குதாரராக, ஐ.ஆர்.எஸ்.டி.சி.க்கு 7,00,000/- யூரோ வரை நிதியுதவி வழங்க ஒப்புதல்

Posted On: 11 JUN 2019 10:41AM by PIB Chennai

இந்திய ரயில் நிலைய மேம்பாட்டுக் கழகம்  (ஐ.ஆர்.எஸ்.டி.சி), பிரெஞ்ச் ரயில்வே, ஏ.எப்.டி. என்ற முகமை ஆகியவைகளுக்கிடையே பிரெஞ்சு முத்தரப்பு ஒப்பந்தம் (10.06.2019) அன்று கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் இந்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் திரு.சுரேஷ் அங்கடி, பிரான்ஸ் நாட்டுக்கான ஐரோப்பிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்  திரு ஜீன் பாப்டைஸ்ட் லெமோயின், இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதர் திரு எச் ஈ அலெக்ஸாண்டர் ஸீக்லர் மற்றும் இருதரப்பு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

  இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏ எஃப்டி என்கிற பிரெஞ்ச் முகமை இந்திய ரயில்நிலைய வளர்ச்சித் திட்டத்திற்கு பிரெஞ்ச் தேசிய ரயில்வே நிலைய மையங்கள் மற்றும் இணைப்புகள் வாயிலாக, தொழில்நுட்ப பங்குதாரராக, 7,00,000/-  யூரோ வரை ஐ.ஆர்.எஸ்.டி.சி-க்கு நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஐ.ஆர்.எஸ்.டி.சி அல்லது இந்திய ரயில்வே துறைக்கு எந்த கடன் சுமை இருக்காது.

     நிகழ்ச்சியில்  பேசிய ரயில்வேத் துறை இணை அமைச்சர் திரு.சுரேஷ் அங்கடி, “இந்தியா மற்றும் பிரான்சுக்கு இடையே ரயில்வே துறையில் நீண்டகாலமாக வலுவான மற்றும் வளமான கூட்டுறவு உள்ளது. கடந்த ஆண்டுகளில் பிரான்ஸ் ரயில்வேயானது, தில்லி மற்றும் சண்டிகரிடையே வேகத்தை மேம்படுத்துதல், லூதியானா மற்றும் அம்பாலா நிலையங்களில் வளர்ச்சி பற்றிய ஆய்வுகளை இந்திய ரயில்வேயுடன் இணைந்து நடத்தி உள்ளது.  இந்த முயற்சி இந்தியா மற்றும் பிரான்சுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் என்றும், இந்திய ரயில்வே நிலையங்களின் தரத்தை உலக அளவில் நிலைநாட்ட உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.



(Release ID: 1573994) Visitor Counter : 180