பிரதமர் அலுவலகம்

பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகளையும் ஊழியர்களையும் பிரதமர் சந்தித்தார்

Posted On: 24 MAY 2019 7:16PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, புது தில்லி சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை இன்று சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு. நிருபேந்திர மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு முகமையின் தலைவர் திரு. அஜித் டொவால், கூடுதல் முதன்மைச் செயலாளர் திரு. பி. கே. மிஸ்ரா, செயலாளர் திரு. பாஸ்கர் குல்பே ஆகிய பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றமைக்காக பிரதமருக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் அலுவலகம் முழுவதும் மேற்கொண்ட முயற்சிகள், அர்ப்பணிப்பு ஆகியவற்றை பாராட்டிய பிரதமர், இந்திய மக்களின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்க மேலும் தீவிரமாக செயல்பட தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டுமென அவர்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டார்.

மக்கள் அரசிடமிருந்து பெருமளவில் எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பதாகவும், பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த குழுவினருக்கு இந்த எதிர்பார்ப்புகள் முழுமையாகச் செயல்பாடுவதற்கான உத்வேகத்தையும் சக்தியையும் வழங்கும் என்றும் அவர் கூறினார்.

தனது குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரின் பங்களிப்பையும் அங்கீகரித்த பிரதமர், கடந்த ஐந்தாண்டுகள் தனக்கும் கூட கற்றுக் கொள்வதற்கான அனுபவத்தை வழங்கியது என்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் அலுவலக அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இத்தருணத்தில் தனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் அவர் தெரிவித்துக்  கொண்டார்.

******


(Release ID: 1572639)