நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
16வது மக்களவையை கலைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
24 MAY 2019 7:21PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, 18.05.2014 அன்று நிறுவப்பட்ட 16வது மக்களவையைக் கலைப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் தீர்மானத்திற்கு தனது ஒப்புதலை இன்று வழங்கியது.
பின்னணி:
மக்களவை, அதற்கு முன்பாகக் கலைக்கப்படவில்லையெனில், அதன் முதல் கூட்டம் நடைபெற்ற தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் என அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 83(2) வரையறுத்துள்ளது. 16வது மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 4, 2014 அன்று நடைபெற்றது. அன்று மக்களவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். எனவே, ஜூன் 3, 2019க்கு முன்பாக குடியரசுத் தலைவர் கலைக்காதவரை நடப்பு மக்களவையின் காலம் அன்று வரை நீடிக்கிறது.
முதல் மக்களவையில் இருந்து 15வது மக்களவைக்கான தேர்தல்களின் இறுதி நாட்கள், மக்களவை அமைக்கப்பட்ட நாட்கள், முதல் கூட்டம் நடைபெற்ற நாட்கள், மக்களவையின் காலம் இறுதியாகும் நாட்கள், கலைக்கப்பட்ட நாட்கள் ஆகியவை குறித்த அறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற்ற நாட்கள், மக்களவை அமைக்கப்பட்ட நாள், முதல் கூட்டம் நடைபெற்ற நாள், இறுதி நாள் மற்றும் கலைக்கப்பட்ட நாட்களின் விவரங்கள்
(முதல் மக்களவையிலிருந்து 15வது மக்களவை வரை
|
தேர்தல் நடைபெற்ற இறுதி நாள்
|
மக்களவை அமைக்கப்பட்ட நாள்
|
முதல் கூட்டம் நடைபெற்ற நாள்
|
அரசமைப்புச் சட்டப் பிரிவு 83(2)இன் கீழ் மக்களவையின் இறுதி நாள்
|
கலைக்கப்பட்ட நாள்
|
1
|
2
|
3
|
4
|
5
|
6
|
முதல் மக்களவை
|
21.02.1952
|
02.04.1952
|
13.05.1952
|
12.05.1957
|
04.04.1957
|
இரண்டாவது மக்களவை
|
15.03.1957
|
05.04.1957
|
10.05.1957
|
09.05.1962
|
31.03.1962
|
மூன்றாவது மக்களவை
|
25.02.1962
|
02.04.1962
|
16.04.1962
|
15.04.1967
|
03.03.1967
|
நான்காவது மக்களவை
|
21.02.1967
|
04.03.1967
|
16.03.1967
|
15.03.1972
|
*27.12.1970
|
ஐந்தாவது மக்களவை
|
10.03.1971
|
15.03.1971
|
19.03.1971
|
18.03.1977
|
*18.01.1977
|
ஆறாவது மக்களவை
|
20.03.1977
|
23.03.1977
|
25.03.1977
|
24.03.1982
|
*22.08.1979
|
ஏழாவது மக்களவை
|
06.01.1980
|
10.01.1980
|
21.01.1980
|
20.01.1985
|
31.12.1984
|
எட்டாவது மக்களவை
|
28.12.1984
|
31.12.1984
|
15.01.1985
|
14.01.1990
|
27.11.1989
|
ஒன்பதாவது மக்களவை
|
26.11.1989
|
02.12.1989
|
18.12.1989
|
17.12.1994
|
*13.03.1991
|
பத்தாவது மக்களவை
|
15.06.1991
|
20.06.1991
|
09.07.1991
|
08.07.1996
|
10.05.1996
|
பதினோராவது மக்களவை
|
07.05.1996
|
15.05.1996
|
22.05.1996
|
21.05.2001
|
*04.12.1997
|
பன்னிரண்டாவது மக்களவை
|
07.03.1998
|
10.03.1998
|
23.03.1998
|
22.03.2003
|
*26.04.1999
|
பதிமூன்றாவது மக்களவை
|
04.10.1999
|
10.10.1999
|
20.10.1999
|
19.10.2004
|
*06.02.1904
|
பதினான்காவது மக்களவை
|
10.05.2004
|
17.05.2004
|
02.06.2004
|
01.06.2009
|
18.05.2009
|
பதினைந்தாவது மக்களவை
|
13.05.2009
|
18.05.2009
|
01.06.2009
|
31.05.2014
|
18.05.2014
|
பதினாறாவது மக்களவை
|
12.05.2014
|
18.05.2014
|
04.06.2014
|
03.06.2019
|
|
பதினேழாவது மக்களவை
|
19.05.2019
|
|
|
|
|
* 1. இடைக்கால தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தல் நடைபெறும் முன்பாகவே மக்களவை கலைக்கப்பட்டது.
2. இரண்டாம் வரிசையில் உள்ள இறுதி நாட்கள் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையிலானவை.
********
(Release ID: 1572638)
Visitor Counter : 533