விண்வெளித்துறை

புவிவட்ட செயற்கைக்கோள் செலுத்துவாகனத்தின் (ஜிஎஸ்எல்வி) 4ஆம் கட்டப்பணிகளை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 15 APR 2019 12:35PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2001-2024 கால கட்டத்தில் ஐந்து ஜிஎஸ்எல்வி செலுத்து வாகனங்களை அனுப்புவதற்காக நடைபெற்று வரும் புவிவட்ட செயற்கைக்கோள் செலுத்துவாகனத்தின் 4ஆம் கட்டப்பணிகளை தொடர அனுமதி அளிக்கப்பட்டது.

ஜிஎஸ்எல்வி திட்டத்தின் 4ஆம் கட்டத்தில், புவியை படமெடுத்தல், கடல்சார் பணிகள், தரவு தொடர் தகவல் பரிமாற்றம் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இரண்டு டன் வரையிலான எடையுள்ள செயற்கைக்கோள்களை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நிதிச்செலவுகள் மற்றும் பயன்பாடு :

ஐந்து ஜிஎஸ்எல்வி செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கான இந்தத் திட்டத்திற்கு ரூ.2,729.13 கோடி நிதி தேவைப்படும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பவும், செவ்வாய் கிரகத்திற்கு அடுத்த விண்கலத்தை அனுப்புவதற்கும் உதவிகரமாக இருக்கும்.

                                  *******


(Release ID: 1570644)
Read this release in: English , Urdu , Hindi