மத்திய அமைச்சரவை
உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டத்திற்கான ஐந்தாண்டு நீட்டிப்பிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
27 MAR 2019 4:49PM by PIB Chennai
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டம் மற்றும் வெல்கம் அறக்கட்டளை (டபிள்யூ டி) / உயிரி தொழில்நுட்பத்துறை ஆகியவற்றின் முதல் பத்து வருட கால அளவை (2008–09-லிருந்து 2018–29) புதிய ஐந்தாண்டு கால கட்டத்திற்கு (2019-20-லிருந்து 2023-24) நீட்டித்து வெல்கம் அறக்கட்டளையின் அர்ப்பணிப்பை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
மொத்தமுள்ள நிதித்தேவையான 1092 கோடி ரூபாயில், உயிரி தொழில்நுட்பத்துறை ரூ.728 கோடியும், வெல்கம் அறக்கட்டளை ரூ. 364 கோடி அளவிற்கும் பங்களிக்க உள்ளன.
1:1 என்ற பங்களிப்பின் அடிப்படையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நிதி வழங்கியதில் இந்தத் திட்டம் இந்தியாவில் உயிரி மருத்துவ ஆராய்ச்சியில் உலகளவிலான உயர்ந்த தரத்திலான திறனை கட்டமைத்து வளர்ப்பதற்கான நோக்கத்தை பூர்த்தி செய்துள்ளது. இது சமூக தேவைகளை பூர்த்தி செய்வதற்கான முக்கியமான அறிவியல் சார்ந்த முன்னேற்றங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.
வெளிநாடுகளில் பணிபுரியும் தரம் வாய்ந்த அறிவியலாளர்களை இந்தியாவை நோக்கி ஈர்ப்பதற்கு உயிரி மருத்துவ ஆராய்ச்சி தொழில் திட்டம் வழிவகுத்துள்ளது. அதோடு, இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த உயிரி மருத்துவ ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவியுள்ளது.
நீட்டிக்கப்பட்ட காலகட்டத்தில் இந்தத் திட்டம், இந்தத் திறனை தொடர்ந்து கட்டமைப்பதோடு, மருத்துவ ஆராய்ச்சியை வலுப்படுத்தி இந்தியா எதிர்நோக்கியுள்ள சுகாதார சவால்களை சமாளிக்க உதவுகிறது. இந்தப் பலன்களை தருவதில் இந்திய அரசின் மேம்பட்ட பங்களிப்போடு தொடரும் இந்த திட்டம் முக்கியமானதாகும்.
*******
(रिलीज़ आईडी: 1569742)
आगंतुक पटल : 231
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English