சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
புதுதில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் பெரும்திட்ட செயல்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
28 FEB 2019 10:35PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை உலகத்தரத்திலான மருத்துவப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான பெருந்திட்டத்தின் செயல்பாட்டுக்கு கொள்கை ரீதியில், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
விவரம்
- அடுத்த இருபது ஆண்டுகளில் இக்கழகத்தின் உள்கட்டமைப்பை அதிகப்படுத்துவதற்கு வளர்ச்சியின் மூலமாக தேவையான இடப்பகுதியை உருவாக்குவது, அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் நிலப்பகுதியின் மறு ஒருங்கமைப்பு ஆகியவற்றுக்கு பெருந்திட்டம் வழிவகுக்கிறது.
- சிகிச்சை பெறுவோரின் நலன், பயிற்றுவித்தல், ஆராய்ச்சி, நிர்வாகம் மற்றும் கிழக்கு அன்சாரி நகர் (பிரதானம்) வளாகத்தில் பரிசோதனைகள் உள்ளிட்ட ஆதரவு சேவைகள் மற்றும் கிழக்கு அன்சாரி நகர் (பிரதான வளாகம்) அவசர சிகிச்சை மைய விரிவாக்கம் முதல் (புது ராஜ்நகர் வளாகம்) குடியிருப்புகளுக்கான வசதிகள் வரையிலான கட்டமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் உள்கட்டமைப்பை மறு வளர்ச்சி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
-----
(Release ID: 1567031)
Visitor Counter : 98