வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 28 FEB 2019 10:45PM by PIB Chennai

கான்பூரில் உள்ள முக்கியமான பொது முனைகள் மற்றும் நகரப் பகுதிகளை இணைக்கும் இரு வழித்தடங்களைக் கொண்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல், பயண நேரம், பயணத்திற்கான பொருட்செலவு மற்றும் சுற்றுப்புறச் சூழல் மாசு ஆகியவற்றைக் குறைப்பதற்கும், வாகனப் போக்குவரத்தைக்  குறைத்து பயணத்தை மேம்படுத்துவதற்கும், மெட்ரோ ரயில் திட்டம் உதவியாக இருக்கும். இது போக்குவரத்து சார்ந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதோடு, வழித்தடங்களுக்கு அருகே குடியிருப்பு மற்றும் வர்த்தக வளாகங்களின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.

சிறப்பியல்புகள்

மெட்ரோ ரயில் திட்டத்தின் முக்கிய கூறுகளாவன –

1) 23.785 கி.மீ. நீளம் கொண்ட ஐ.ஐ. டி-யிலிருந்து நவ்பஸ்தாவுக்கான வழித்தடம்,  22 ரயில் நிலையங்களைக் கொண்டு ஒரு பகுதி உயர்நிலையிலும், மற்றொரு பகுதி சுரங்கப்பாதையிலும் அமைக்கப்படும்.

2) 8.60 கி.மீ. நீளமுள்ள விவசாயப் பல்கலைக்கழகத்திற்கும் பர்ரா-8 வழித்தடத்துக்கும் இடையேயான பாதை நான்கு உயர்நிலை மற்றும் நான்கு சுரங்க ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும்.

3) 11,076.48 கோடி  ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் இத்திட்டம் ஐந்து வருடங்களில் முடிக்கப்படும்.

---


(Release ID: 1566892) Visitor Counter : 153


Read this release in: English , Urdu