குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

ஆண்டு இறுதி ஆய்வறிக்கை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகம்

Posted On: 14 DEC 2018 7:10PM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான ஆதரவு மற்றும் செயலாக்கத் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, 02.11.2018 அன்று அறிமுகம் செய்துவைத்தார்.

நாடு முழுவதும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சி, விரிவாக்கம் மேம்படுத்துவதற்கான 12 முக்கிய திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மேம்பாட்டுக்கான 5 அம்சங்களையும் பிரதமர் அறிவித்தார். அவை:-

· வங்கிக்கடன் வசதி

· சந்தைப்படுத்துதல் வசதி

· தொழில்நுட்ப மேம்பாடு

· எளிதாக தொழில் தொடங்குதல்

· பணியாளர்களுக்கான பாதுகாப்பு வசதி

 

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம்

     கடந்த 5 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை முக்கியத் துறையாக உருவாகியுள்ளது.  வேலைவாய்ப்புகளை அளிக்கும் முக்கியத் துறையாக இத்துறை விளங்குகிறது.  பெரிய தொழில்களுக்கு இத்துறை துணையாக இருப்பதுடன், நாட்டின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு அதிகளவில் தொண்டாற்றி வருகிறது.  இதை மனதில் கொண்டு இத்துறையின் வளர்ச்சி மற்றும் தொண்டுகளைக் கருதி, வேலைவாய்ப்பை பெருக்குவதில், பொருளாதார மேம்பாட்டையும் கருதி, 2018 பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு 2017-18-ல் ரூ.6481.96 கோடி-யிலிருந்து 2018-19-ல் ரூ. 6552.61 கோடியாக உயர்த்தி அறிவித்திருந்தார்.

     தேசிய எஸ்.சி / எஸ்.டி துறைக்கு நிதி ஒதுக்கீடு ரூ.60 கோடியிலிருந்து ரூ.93.96 கோடியாக உயர்த்தப்பட்டது.  எஸ்.சி / எஸ்.டி தொழில்முனைவோரின் வணிகத்தை மேம்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் வெற்றியடைந்த கதை

     பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் – 2019-20 ஆம் ஆண்டிலும் தொடரும்.

     பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், கடன் தொடர்பான மானியம் வழங்கும் முக்கியத் திட்டமாகும்.  குறு, சிறு மற்றும் நடுத்தத்தர தொழில்களுக்கான அமைச்சகம் 2008-09 முதல் இந்தத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.  விவசாயம் அல்லாத துறையில் குறுந்தொழில்கள் வழியாக சுயதொழில்களுக்கான வாய்ப்பை உருவாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.  பாரம்பரிய கைவினைஞர்கள், ஊரக மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் வேலையில்லாத இளைஞர்களுக்கு இத்துறை உதவி செய்து வருகிறது.

     பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 28.02.2018 அன்று, பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை 12-வது திட்டத்திற்கு அப்பாலும் மூன்று ஆண்டுகளுக்கு 2017 முதல் 18 வரை, 2019 முதல் 20 வரை, ரூ.5500 கோடி மொத்த முதலீட்டுடன் செயல்படுத்த ஒப்புதல் வழங்கியது.

     பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ், பயன்களைப் பெறுவதற்கு 01.07.2016 அன்று, ஆன்லைன் முகநூல் பக்கம் https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome/index.jsp அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ், மகளிர் தொழில் முனைவோருக்கான உதவி

பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின்கீழ், மகளிர் தொழில்முனைவோருக்கு 2016-17 ஆம் ஆண்‘டில் 14,768 தொழில்களைத் தொடங்குவதற்கு அரசு நிதியுதவி வழங்கியது.

இதில் அதிகபட்சமாக 1,484 திட்டங்கள் அஸ்ஸாமிலும், 1,387 திட்டங்கள் உத்தரப்பிரதேசத்திலும், 1,247 திட்டங்கள் தமிழ்நாட்டிலும், 942 ஒடிஷாவிலும் மற்றும் 918 திட்டங்கள்  பீகாரிலும் செயல்படுத்தப்பட்டன.  இவை நீங்கலாக மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

ஆயுஷ் அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

     கடந்த 10 ஆண்டுகளாக ஆயுஷ் துறைக்கான உள்நாட்டுச் சந்தையில் தேவை படிப்படியாக உயர்ந்து வருகிறது.  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் ஆயுஷ் அமைச்சகங்களின்கீழ், பயன்பெறுவதற்காக இவை இரண்டும் கூட்டு சேர்ந்து இத்துறையில் தொழில்களை மேம்படுத்த இணக்கம் தெரிவிக்கப்பட்டது.  இரண்டு அமைச்சகங்களும் ஆயுஷ் துறை மற்றும் பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் அமைச்சகத்திலும் தொழில் முனைதலுக்கான மண்டல பயிலரங்குகளை நடத்தி வருகின்றன.  சிறு தொழில் மேம்பாட்டு இந்திய வங்கியிடமிருந்து பலன்களை பெறுவதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஆயுஷ் தொழில்களைத் தொடங்குவதற்காக புதிய திட்டங்களை வகுத்திருந்தது.  

     2018 மார்ச் 8, 2018 உலக மகளிர் தினத்தையொட்டி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், இந்தியாவில் மகளிர் தொழில் முனைவோருக்கு www.udyamsakhi.org.  தனி முகநூல் பக்கத்தை ஏற்படுத்தியது.

     இந்தியாவில் ஏறத்தாழ 80 லட்சம் பெண்கள் தங்களுக்கு சொந்தமான தொழில்களை இந்தியாவில் தொடங்கி  நடத்தி வருகின்றனர்.  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம் இந்தியப் பொருளாதாரத்தில் பெண்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதில் உறுதிபூண்டுள்ளது.

     குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த்,  சூரிய சர்கா திட்டத்தை 27.06.2018 அன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார்.  2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில் ரூ.550 கோடி பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டுடன், 50-க்கும் மேற்பட்ட தொழில்கள் இணைந்த தொகுப்புடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.  இத்திட்டம் நேரடியாக சுமார் ஒரு லட்சம் பேருக்கு கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் சூரிய சர்கா தொழிற்கூடங்கள் கிராமப்புறத் தொழில்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  சூரிய சர்கா இயக்கத்தின் திட்டம் 2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முறைசாராத சூரிய சக்தி தொழில்கள் மூலம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், இனிப்பு புரட்சியில் உலக சாதனை   

     தேன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் தேன் உற்பத்தி இயக்கத்தைத் தொடங்கியது.

     குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள தேனி பண்ணையிலிருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் 186 கிலோ தேன் எடுக்கப்பட்டது.

மிதமான நடையில் கதர்

     இந்த ஆண்டு முதல் முறையாக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் லக்மி பேஷன் வீக் இதழுடன் இணைந்து கதரை ஒரு நிலைத்தத் மேம்பட்ட துணியாக காட்சிப்படுத்த முனைந்துள்ளது.  இந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற லக்மி பேஷன் வீக் விழாவில் இவ்வகை துணிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நிகழ்ச்சி

     2018 ஏப்ரல் அன்று கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் தனது மொபைல் ஆப்பை துவக்கியது.  4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய கதர் விற்பனை நிலையங்களுடன் இந்த ஆப் இணைக்கப்பட்டுள்ளது. கைபேசியில் தொடர்பு கொண்டவுடன், கதர் அங்காடிகள் செயல்படும் இடம், அங்கு கிடைக்கும் பொருள் ஆகியவற்றை நுகர்வோருக்கு உடனடியாக வழங்கும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

நலிந்த கதர் நிறுவனங்கள் மறுசீரமைப்பு

     நலிந்த கதர் நிறுவனங்களை சீரமைக்கும் முயற்சியாக கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம், அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், சந்தைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளது.

     கதர் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உதவிகள் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.  கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறையில் விற்பனை 2015-16-ல் ரூ. 41,894.56 கோடி, 2017-18-ல், ரூ. 60,451.28 கோடியாக உயர்ந்துள்ளது.

சர்வதேச இயக்கங்கள்

தொழில்நுட்ப மைய அமைப்புகளின் திட்டம்

     குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் தொழில்நுட்ப மைய அமைப்புகள் திட்டத்தை ரூ.220 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது.  உலக வங்கியின் 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியுடன், 15 புதிய  உபகரண அறைகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் அமைக்கவும், தற்போதுள்ள 18 உபகரண அறைகளை மேம்படுத்தவும் இந்த கடனுதவி பயன்படுத்தப்படுகிறது.

 

இந்தியா-கொரியா தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தின் தொடக்கம்

இந்தியா-மொராக்கோ இடையிலான ஒத்துழைப்பு அதிகரிப்பு

குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையில் இந்தியா-ரஷ்யா நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

போலந்தில் 8-வது ஐரோப்பிய சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மாநாட்டில் இந்திய சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பிரதிநிதிகள் பங்கேற்பு

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் ஈ-செய்திக் கடிதம்

     குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், மாதந்தோறும் வெளிவரும் ஈ-செய்திக் கடிதத்தை – “எம்.எஸ்.எம்.ஈ இன்சைடர்” புதுதில்லியில் 18.09.2018 அன்று அறிமுகம் செய்தது.  

ஈ-முயற்சிகள்

     குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் சம்பர்க் முகநூல் பக்கத்தை குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், புதுதில்லியில் ஜூன் 27 ஆம் தேதி ஐநாவின் சிறு நடுத்தர தொழில்கள் தினத்தன்று தொடங்கிவைத்தார். 

விருதுகளும், பரிசுகளும்

பிரகதி மைதானத்தில் இந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதியன்று நடைபெற்ற சர்வதேச தொழில் கண்காட்சியின் முடிவில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.   கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்திற்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

*********

 


(Release ID: 1565737) Visitor Counter : 335


Read this release in: English , Bengali