குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகிறார்

Posted On: 20 FEB 2019 5:24PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் நாளை (பிப்ரவரி 21) சென்னையில் பயணம் மேற்கொள்கிறார்.

     சென்னையில் உள்ள தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார் சபாவில் மகாத்மா காந்தியின் சிலையை குடியரசுத் தலைவர் திறந்துவைப்பார்.

     பின்னர், பிப்ரவரி 22 அன்று ஆந்திரப்பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர், நெல்லூர் மாவட்டம் வெங்கடாச்சலத்தில் நடைபெறவுள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் 18-வது ஆண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.  பிறகு, வெங்கடாச்சலத்தில் உள்ள அக்ஷர வித்யாலயாவிற்கும் அவர் பயணம் மேற்கொள்வார்.

************


(Release ID: 1565606)
Read this release in: English , Urdu , Hindi