சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு), இரண்டாவது அவசரச் சட்டம் 2019 பிறப்பிப்பதற்கான ஆலோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 19 FEB 2019 8:43PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கீழ்க்காணும் ஆலோசனைகளுக்கு ஒப்புதல் வழங்கியது.

  1. அரசியல் சட்டத்தின் பிரிவு 123 துணைப்பிரிவு 1-ன் கீழ், இணைப்பு –III (பக்கங்கள் 9 – 12)-ன் படி முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு), இரண்டாவது அவசரச் சட்டம் 2019 பிறப்பிப்பத்தல்.
  2. மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு), மசோதா  2018-ல் தேவைப்படும் அதிகாரப்பூர்வ திருத்தங்களை செய்தல்.

பயன்கள்:

   தங்கள் கணவர்களால்  திடீரென்றும் மாற்றமுடியாதபடியும் மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையைத் தடுத்து, திருமணம் ஆன முஸ்லீம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த அவசரச் சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுவயது குழந்தைகளைப் பாதுகாத்தல், வாழ்வாதாரத் தொகை பெறுதல் ஆகிய உரிமைகள் கிடைக்கவும் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1565509) வருகையாளர் எண்ணிக்கை : 189
இந்த வெளியீட்டை படிக்க: English , Kannada