ஆயுஷ்

மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு நாளை புதுதில்லியில் தொடங்குகிறது – ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஆயுஷ் சேவைகள் இணைப்பது குறித்து விவாதிக்கப்படும்

Posted On: 05 FEB 2019 10:22AM by PIB Chennai

மாநிலங்களின் சுகாதார மற்றும் ஆயுஷ் அமைச்சர்கள் மாநாடு நாளை (06.02.2019) புதுதில்லியில் தொடங்க உள்ளது. இந்த மாநாட்டினை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

தேசிய ஆயுஷ் இயக்கம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஆயுஷ் சேவைகளை ஒருங்கிணைத்தல், மருத்துவ  குணமிக்க செடிகள், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி கல்வி நிறுவனங்கள், ஆயுர்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய மருந்துகளின் தரக்கட்டுப்பாடு, மருந்துகள் குறித்த மத்திய அமைச்சக திட்டங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார மற்றும் ஆயுஷ் அமைச்சர்கள் மற்றும் மூத்த அலுவலர்களுக்கு இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

******


(Release ID: 1562657) Visitor Counter : 287
Read this release in: Malayalam , English , Hindi