கலாசாரத்துறை அமைச்சகம்
கலாச்சார அமைச்சகம் : நடப்பாண்டு சாதனைகள் 2018
Posted On:
21 DEC 2018 6:00PM by PIB Chennai
நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாப்பு மற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தின் அனைத்து வடிவங்களையும் முன்னெடுத்துச் செல்வதைச் சுற்றியே கலாச்சார அமைச்சகத்தின் பணி அமைந்துள்ளது.
2018-ஆம் ஆண்டில், சர்வதேச அரங்கில் இந்திய கலாச்சாரத்தின் செழுமை மற்றும் பாரம்பரியத்தை காட்சிப்படுத்துவது, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் முயற்சிகளின் மூலமாக அமைச்சகத்தின் பணியை நிறைவேற்றுவது ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை குறிக்கும் ஆண்டு முழுவதுமான கொண்டாட்டங்கள், குருநானக் தேவ்ஜி-யின் 550-வது பிறந்தநாள், ஆஷாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75-வது ஆண்டு நிறைவு, திருமதி. விஜய ராஜே சிந்தியாவின் நூற்றாண்டு விழா, புதுதில்லியில் இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பின் புதிய கட்டிடமான தாரோகர் பவனின் தொடக்க விழா, சர்வதேச நிபுணர்களின் கவனத்தை ஈர்த்த உத்தரபிரதேசத்தில் உள்ள சனவ்லியில் குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் ஒரே இந்தியா, உன்னத இந்தியா நிகழ்ச்சிகள் ஆகியவை இவ்வாண்டுக்கான இந்த அமைச்சகத்தின் நிகழ்வுகள் ஆகும்.
ஜம்மு கஷ்மீர் மாநிலம், இந்தியாவோடு இணைந்து 70 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில், புதுதில்லியில் 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ஆம் தேதியன்று “இந்தியா @ 70: ஜம்மு & கஷ்மீர் சாகா” என்ற கண்காட்சியை கலாச்சார அமைச்சகத்தின் தனிப்பொறுப்பு வகிக்கும் டாக்டர் மகேஷ் சர்மா தொடங்கி வைத்தார்.
******
(Release ID: 1561950)