தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்திய சினிமாவின் தேசிய அருங்காட்சியகத்தை பிரதமர் ஜனவரி 19-ம் தேதி திறந்து வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 JAN 2019 4:24PM by PIB Chennai

   மும்பையில் இந்திய சினிமாவின் தேசிய அருங்காட்சியகத்தை பிரதமர்  ஜனவரி19-ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த அதிநவீன அருங்காட்சியகம் ரூ.140.61 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் நூற்றாண்டுகால வரலாற்று பார்வையாளர்களுக்கு கதை சொல்லும் பாவனையில் காட்சிப் பொருட்கள், வரைபடங்கள், கருவிகள், கலந்துரையாடல் காட்சிகள், பல ஊடக காட்சிகள் மூலம் எடுத்துரைக்கப்படும்.

    திரு ஷியாம் பெனகல் தலைமையிலான அருங்காட்சியக ஆலோசனைக் குழு வழிகாட்டுதலில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. திரு பிரசூன் ஜோஷி தலைமையிலான புதுமைப் படைப்புக் குழு இந்த அருங்காட்சியகத்தை  மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.

  மும்பை திரைப்படப் பிரிவு வளாகத்தில் புதிய அருங்காட்சியக கட்டிடம் மற்றும் 19ம் நூற்றாண்டு வரலாற்று அரண்மனையான குல்ஷான் மஹால் ஆகிய இரண்டு கட்டிடங்களில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

---------

விகீ-சிஜே-கீதா


(வெளியீட்டு அடையாள எண்: 1560392) வருகையாளர் எண்ணிக்கை : 260
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati