சுரங்கங்கள் அமைச்சகம்

சுரங்கங்கள் அமைச்சகத்தின் ஆண்டறிக்கை: 2018-19

Posted On: 10 JAN 2019 10:52AM by PIB Chennai

சுரங்க ஏல விதிகளில் திருத்தங்கள்

 

1957 ஆம் ஆண்டின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் 2015-ல் திருத்தப்பட்டது.   இந்தத் திருத்தத்தைத் தொடர்ந்து ஏல நடைமுறைகளுக்கான விதிமுறைகளைக் குறிப்பிடும் கனிம ஏலவிதிகள் 2015-ஐ சுரங்கங்கள் அமைச்சகம் 20.05.2015 அன்று அறிவிக்கை செய்தது.

 

நாட்டின் கனிமங்கள் நிர்வாக வரலாற்றில் முதல் முறையாக  பெரிய கனிம நிறுவனங்களுக்கு (நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு தவிர) சலுகை முறையிலான ஏலம் நடத்தப்பட்டது.  53 சுரங்கங்கள் வெற்றிகரமாக ஒதுக்கீடு செய்யப்பட்டன.  கனிமங்கள் ஏலமிடப்பட்டதன் மதிப்பு ரூ.2,25,850.97 கோடி.  குத்தகைக் காலத்தின்போது மாநிலங்களுக்கான வருவாய் ரூ.1,83,181.59 கோடி.  ஏல நடைமுறையில் கூடுதல் வருவாய் ரூ.1,43,169.29 கோடி. 

 

இந்த நடைமுறைகளை மாநில அரசுகளுடன் சுரங்கங்கள் அமைச்சகம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தது.  வெற்றிகரமான ஏலதாரர்களுக்கு சிரமங்கள் இல்லாமல்  இருப்பதற்கு ஏதுவாக, கனிமங்கள் ஏல விதியில் திருத்தங்கள் தேவை என்ற பொதுக் கருத்து உருவானது.  இதன்படி, கனிமங்கள் ஏல விதி 30.11.2017 அன்று திருத்தப்பட்டது. 

 

2017-ன் கனிமங்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விதிகளில் (எம்.சி.டி.ஆர்) திருத்தங்கள்

 

எம்.சி.டி.ஆர் சட்டம் விதி 8ஏ (6)-ன் கீழ், வணிக சுரங்கத்தினருக்கு நீடிக்கப்பட்ட குத்தகைக் காலம் மார்ச் 31, 2020 அன்று காலாவதியாகும்.  இந்த குத்தகைகள் காலாவதி ஆவதால், கனிமங்களின் உற்பத்தி பாதிக்காத வகையிலும் தற்போதுள்ள குத்தகைக்காரர்களிடம் இருந்து புதிதாக குத்தகைக்கு எடுப்போருக்கு சிக்கல் இன்றி மாற்றம் செய்வதை உறுதிப்படுத்தவும், ஏல நடைமுறைகளுக்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

 

வான்வழியாக புவி ஆய்வு

 

நாட்டிற்குள்ளும் அதையொட்டியுள்ள பகுதியிலும் 27 லட்சம் லைன் கிலோமீட்டர் அளவுக்கு  தேசிய வான்வழி வரைப்படத் திட்டத்தை இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு தொடங்கியுள்ளது.  மொத்தப் பகுதியும் 12 ஆக பகுக்கப்பட்டு, 2019-வாக்கில் மூன்றாண்டுகளுக்குள் முடிக்க  திட்டமிடப்பட்டுள்ளது.  இதன் செலவு மதிப்பீடு ரூ.351 கோடியாகும். 

 

2014-15, 2015-16, 2016-17 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில் ஐந்து நட்சத்திர தரவரிசைப் பெற்ற நிறுவனங்கள் எண்ணிக்கை வருமாறு; 

 

ஜூலை 2016-ல் 9 சுரங்கங்கள், 2017 பிப்ரவரியில் 32 சுரங்கங்கள், 2018 மார்ச்சில் 57 சுரங்கங்கள்.  2017-18 மதிப்பீட்டு ஆண்டில் இதுநாள் வரை 966 சுரங்க செயற்பாட்டாளர்கள் இணைய தளம் மூலம்  தங்களின் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.  இவர்களில் 246 குத்தகையாளர்கள் ஐந்து நட்சத்திரத்திற்கு சுய மதிப்பீடு செய்துள்ளனர்.

 

இந்தியப் புவியியல் ஆய்வு (ஜி.எஸ்.ஐ)

 

தனிச்சிறப்புமிக்க வரைபடம் தயாரிப்புக்கு 2018-19 வருடாந்திர திட்ட  இலக்கான 22,865 சதுர கிலோமீட்டரில் நவம்பர் 2018 வரை 8652 சதுர கிலோமீட்டர் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. (அளவு 1:25,000)

 

தேசிய  புவிவேதியியல் வரைபடம் தயாரிப்புக்கு 2018-19 வருடாந்திர திட்ட  இலக்கான 1,78,356 சதுர கிலோமீட்டரில் நவம்பர் 2018 வரை 62,032 சதுர கிலோமீட்டர் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. (அளவு 1:50,000)

 

தேசிய  புவித்தன்மை வரைபடம் தயாரிப்புக்கு 2018-19 வருடாந்திர திட்ட  இலக்கான 78,150 சதுர கிலோமீட்டரில் நவம்பர் 2018 வரை 42,804.5 சதுர கிலோமீட்டர் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. (அளவு 1:50,000)

 

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்  கடல்சார் கனிமம் கண்டறிய 2018-19 வருடாந்திர திட்ட  இலக்கான 24,000 சதுர கிலோமீட்டரில் நவம்பர் 2018 வரை 24,583 சதுர கிலோமீட்டரில் பூர்வாங்கப் பணிகள் முடிவடைந்துள்ளன.

 

நிலச்சரிவுக்கான சந்தேகம் உள்ள இடங்களைக் கணக்கிட 2018-19-ல்  45 திட்டங்களை ஜி.எஸ்.ஐ செயல்படுத்தவுள்ளது.  2018-19 வருடாந்திர திட்ட  இலக்கான 77,000 சதுர கிலோமீட்டரில் நவம்பர் 2018 இறுதிவரை 30,900 சதுர கிலோமீட்டரில் பணி நிறைவடைந்துள்ளது.

 

தாதுப் பொருட்கள் கண்டறிதல், அடிப்படைத் தகவல் திரட்டுதல், அடிப்படை புவிஅறிவியல், புவி தகவல்கள் குறித்த அறிக்கைகள் அனைத்தையும் ஜி.எஸ்.ஐ. டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.  22,641 அறிக்கைகள் ஓ.சி.பி.ஐ.எஸ். இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

 

தேசிய அலுமினிய நிறுவனம் (நால்கோ)

 

2017-18 செயல்பாட்டின் சிறப்பு அம்சங்கள்:

 

2017-18 நிதியாண்டில் மொத்த லாபம் ரூ.1342 கோடி.  இது முந்தைய ஆண்டின் லாபமான ரூ.669 கோடியை விட, 100 சதவீத வளர்ச்சியாகும். 

இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த வருவாய் ரூ.9,376 கோடியாகும். (நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவே உயர்ந்த அளவு) சென்ற ஆண்டைக் காட்டிலும், இது 26 சதவீத வளர்ச்சி.

 

ஏற்றுமதி மூலமான வருவாய் மதிப்பு  ரூ.4,076 கோடி. (நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவே உயர்ந்த அளவு) சென்ற ஆண்டைக் காட்டிலும், இது 12 சதவீத வளர்ச்சி.

 

இந்த நிறுவனம் ஈவுத் தொகையாக அளித்தது ரூ. 1102 கோடி. (நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவே உயர்ந்த அளவு) சென்ற ஆண்டைக் காட்டிலும், இது 114 சதவீத வளர்ச்சி.

 

2017-18-ன் மூலதனச் செலவு ரூ.1080 கோடி.  2009-10 நிதியாண்டிலிருந்து இதுவே அதிகபட்ச அளவாகும். 

 

2017-18 –ல் சமூக பொறுப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.27.88 கோடி. செலவிடப்பட்டது ரூ.29.01 கோடி.

 

பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்குக் கல்வி அளிப்போம் என்ற மாண்புமிகு பிரதமரின் அழைப்புக்கு இணங்க 2017-18 நிதியாண்டில் நால்கோ 100 ஏழை மற்றும் தகுதியுள்ள சிறுமிகளைத் தத்தெடுத்துள்ளது. 

 

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் பற்றிய தேசிய மாநாடு

 

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் ஜூலை 13, 2018 அன்று சுரங்கங்கள் அமைச்சகம் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் குறித்த நான்காவது தேசிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது.  மாநிலங்களைச் சேர்ந்த சுரங்கத் துறை அமைச்சர்கள் மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள், சுரங்கத் தொழில் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

 

முதன்முறையாக இந்த மாநாட்டில் கண்காட்சி இடம்பெற்றது. 2018-19 ஆம் ஆண்டில் ஏலத்தில் வைப்பதற்கு தயாராக உள்ள கனிமப் படிவங்களைக் காட்சிப்படுத்த மாநிலங்கள் அரங்குகளை அமைத்திருந்தன.  

 

சுரங்கத் துறை அமைச்சர்கள், தொழில் நிறுவனத் தலைவர்களுடன் வட்டமேசை மாநாட்டையும் நடத்தினர்.  இதில், சட்டப்படியான அனுமதிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. கனிமத் துறையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளும் கோரப்பட்டன.

                           ********************

 

வி.கீ/எஸ்எம்பி/வேணி



(Release ID: 1559740) Visitor Counter : 470


Read this release in: English , Bengali