கலாசாரத்துறை அமைச்சகம்
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் மூன்றாண்டு சாதனைகள்
Posted On:
08 JAN 2019 5:49PM by PIB Chennai
2016, 2017 & 2018 ஆகிய ஆண்டுகளில் மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் அதன் அமைப்புகளின் முக்கிய சாதனைகள்
- கட்டணம் செலுத்தி சுற்றுலாப்பயணிகள் காணுகின்ற நினைவுச் சின்னங்களுக்கு ரொக்கத்தொகை இல்லாமல் இ-டிக்கெட் முறை தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் அவசியம் காண வேண்டிய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொன்மைக்கால இடங்களுக்கான இணையப்பக்கத்திற்கு 100 நினைவிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- மத்திய அரசால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்கள் / இடங்கள் அனைத்திலும் புகைப்படம் எடுக்க இந்திய தொல்பொருள் ஆய்வு அமைப்பு அனுமதித்துள்ளது.
- இந்திய தொல்பொருள் ஆய்வு அமைப்பின் நினைவிடங்கள் இஸ்ரோ உதவியுடன் செயற்கைக்கோள் வரைபடங்கள் ஆக்கப்பட்டுள்ளன.
- திருடுபோன பழங்காலப் பொருள்கள் (17) வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
- தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வரலாற்று சிறப்புமிக்க பண்டைக்கால இடங்கள் அனைத்தும் பாலித்தீன் பயன்படுத்தாத இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்பொருள் ஆய்வுக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச புத்தபூர்ணிமா தினக் கொண்டாட்டம். ஆசாத் ஹிந்த் அரசு அமைக்கப்பட்டதன் 75-வது ஆண்டு கொண்டாட்டம் – பிரதமர் முன்னிலையில்.
- காந்தி பாரம்பரியம் : அகமதாபாத் முதல் தண்டி வரையிலான பாதையையும், இரவு தங்கிய 21 இடங்களையும் மேம்படுத்தும் பணி பூர்த்தியடைந்துள்ளது.
- சுமார் 37 நாடுகளில் இந்திய திருவிழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
- மும்பையில் உள்ள விக்டோரியன் கோத்திக் கலைக்கூடத்தை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
- நேதாஜியின் கோப்புகள் வெளியீடு
- “இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் பட்டேல்” டிஜிட்டல் கண்காட்சியைப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அக்டோபர் 31, 2016-ல் தொடங்கி வைத்தார்.
- தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு விழா அக்டோபர் 2, 2018-ல் தேச அளவிலும், சர்வதேச அளவிலும் தொடங்கியது.
- குருநானக் தேவ்-ன் 550-வது பிறந்த ஆண்டு விழா. பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயியை கவுரவிக்கும் வகையில், நாணயம் வெளியீடு. இந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீர் இணைந்ததன் 70-வது ஆண்டினை நினைவுகூரும் சிறப்பு கண்காட்சி.
- 2018 – 19 மற்றும் 2019 – 20 நிதியாண்டுகளில் செயல்படுத்த ரூ.325 கோடி ஒதுக்கீட்டுடன் 1.8.2018 அன்று சேவாபோஜ் யோஜனா என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
- தில்லியில் இந்தியப் பிரதமர்கள் பற்றிய அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
******
வி.கீ/எஸ்எம்பி/கோ
(Release ID: 1559368)