தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

சிறு மற்றும் நடுத்தர பத்திரிகைகள் பயன்பெறும் வகையில் விளம்பரங்களுக்கான கட்டணம் 25% அதிகரிப்பு – மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

प्रविष्टि तिथि: 08 JAN 2019 6:28PM by PIB Chennai

மாநில மொழிகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர பத்திரிகைகள் பயன்பெறும் வகையில் மக்கள் தகவல் அலுவலகம் (விளம்பரம் மற்றும் கண்காட்சி இயக்குனரகம்) தரும் விளம்பரங்களுக்கான தற்போதைய கட்டணத்தை 25% அதிகரிக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அமைச்சகம் அமைத்த எட்டாவது கட்டண விகித நிர்ணய குழுவின் சிபாரிசின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  ஜனவரி 08, 2019 முதல் அமலுக்கு வந்த இந்த முடிவு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செல்லும்.

இதற்கு முன்பு 2013-ல்,  2010 ஆம் ஆண்டின்  கட்டணம்  19% அதிகரிக்கப்படும் என்ற அறிவிக்ப்பட்டது.

***

 

விகீ/ அரவி
 


(रिलीज़ आईडी: 1559266) आगंतुक पटल : 235
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali