ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் சாதனைகள் - 2018
Posted On:
08 JAN 2019 6:00PM by PIB Chennai
உரங்கள் துறை
45 கிலோ யூரியா மூட்டை அறிமுகம்:
உரங்கள் துறை கொள்கையின் சுமூகமான அமலாக்கத்தை உறுதி செய்யும் வகையில் யூரியா பிரிவுகளுக்கு அளிக்கப்பட்ட அரசிதழ் அறிவிக்கை தேதியிலிருந்து 2 மாத காலத்திற்குப் பின் 01.03.2018 அன்று 45 கிலோ யூரியா மூட்டையும் குறைந்தபட்ச சில்லரை விற்பனை விலை ரூ.842 ஆக அறிவிக்கப்பட்டது.
உரங்கள் துறையின் முகவர்களுக்கான (தனியார் முகமைகள்/ நிறுவன முகமைகள்) விளிம்புத் தொகை 28.03.2018-லிருந்து ஒரு டன் யூரியாவுக்கு ரூ.180/200-லிருந்து ரூ.354 ஆக உயர்த்தப்பட்டது.
நேரடி பணப்பரிமாற்ற அமலாக்கத்திற்குப் பின் முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நிதி கிடைப்பது அதிகமாகி உள்ளது.
நாடு முழுவதும் சுமார் 23 ஆயிரம் முகவர்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.
புதிய உரக் கொள்கை 2015-ன் சாதனைகள்:
2016-17 மற்றும் 2017-18 காலத்தில் யூரியா உற்பத்தி முறையே 242.01 மற்றும் 240.92 லட்சம் டன்னாக இருந்தது. இது 2012-13 (225.75 லட்சம் டன்) மற்றும் 2013-14 (227.15 லட்சம் டன்) ஆண்டுகளின் உற்பத்தியை விட கணிசமான அளவு அதிகமாகும்.
புதிய உரக் கொள்கை 2015-க்கு திருத்தம் – திறன் இலக்கு விதிமுறைகள்:
உரங்கள் துறை கீழ்க்காணும் திறன் இலக்கு விதிமுறைகளை 28.03.2018 அன்று அறிவித்தது.
- யூரியா உற்பத்தி செய்யும் 11 நிறுவனங்களுக்கான திறன் இலக்கு விதிமுறைகள் 01.04.2018 முதல் அமலுக்கு வருகின்றன.
- மற்ற 14 யூரியா உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதியமைச்சகத்துடன் கலந்தாலோசித்து அபராதத்துடன் தற்போதுள்ள விதிமுறைகள் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும்.
- திறன் இலக்கு விதிமுறைகள் 31.03.2025 வரை தொடரும். நித்தி ஆயோக் அமைப்பால் நிறுவப்பட்டுள்ள நிபுணர் குழு பரிந்துரைத்துள்ள திறன் இலக்கு 01.04.2025-லிருந்து பெறப்படும்.
நேரடி பணப்பரிமாற்றம்:
- உரங்கள் துறை நேரடி பணப்பரிமாற்றத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாக அமலாக்கி உள்ளது. இந்தத் திட்ட அமலாக்கம் மார்ச் 2018-ல் நிறைவடைந்தது.
- சில்லரை வியாபாரிகளால் பயனாளிகளுக்கு விற்பனை செய்யப்பட்ட உரங்கள் அடிப்படையில் உர நிறுவனங்களுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்பட்டது.
- நேரடி பணப்பரிமாற்ற அமலாக்கத்தைக் கண்காணிப்பதற்கென்றே இந்தத் துறையில் திட்டக் கண்காணிப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. நேரடி பணப்பரிமாற்ற செயல்பாடுகளைக் கண்காணிக்க அனைத்து மாநிலங்களிலும் 24 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- நேரடி பணப்பரிமாற்ற அமலாக்கத்தின் தொடக்கமாக எழுப்பப்படும் ஐயங்களுக்கு விரைந்து பதிலளிப்பதற்கு ஏதுவாக 15 உறுப்பினர்களைக் கொண்ட பல மொழி பேசுவோரின் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் துறை:
பிரதமரின் பாரதீய மக்கள் மருந்து விற்பனைத் திட்டம் (30.11.2018 நிலவரப்படி)
- 35 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இவ்வகையில் 4,504 மருந்து விற்பனை மையங்கள் செயல்படுகின்றன.
- 800-க்கும் கூடுதலான மருந்துகள் 150 சிகிச்சை உபகரணங்கள் பொருள் பெட்டகத்தில் இடம் பெற்றிருக்கும்.
- மருந்து உற்பத்திக்கான பொதுத்துறை நிறுவனங்களின் குழுவின் விற்பனை பெட்டகத்தில் 625 மருந்துகள் மற்றும் 32 சிகிச்சை உபகரணங்கள் இடம் பெற்றிருக்கும்.
அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான சுகாதார சேவை:
- 2013 ஆம் ஆண்டின் மருந்து விலைக்கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் 2018-ல் 357 புதிய மருந்துகளின் சில்லரை விலையை தேசிய மருந்துப் பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ளது.
- இதய நோய்க்கான ஸ்டெண்ட் விலை 85 சதவீதம் குறைப்பு
- ரத்தக் குழாய் சார்ந்த ஸ்டெண்டுகளுக்கான உச்ச வரம்பு விலை 12.02.2018-லிருந்து திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதய நோய்க்கு அனைத்து வகையான ஸ்டெண்டுகளும் தற்போது ரூ.7,953-லிருந்து ரூ.28,849 வரையிலான விலைக்கு கிடைக்கின்றன.
- இதன் மூலம் லட்சக்கணக்கான இதய நோயாளிகள் ரூ.1 லட்சம் வரை சேமிக்க முடியும்.
- வாடிக்கையாளர்களுக்கு ஒட்டு மொத்தமான சேமிப்பு ரூ.4547 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனத் துறை
- “இந்தியாவில் உற்பத்தி” என்பதில் கவனம் செலுத்த பாதுகாப்பு, கடல்சார் தொழில்களில் பயன்படுத்தப்படும் உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயாரிக்கப்படுகின்ற பொருட்கள், தொழில்நுட்பங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுடன் மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (சிப்பெட்) உடன்பாடு செய்துகொண்டுள்ளது.
- 2018-19-ல் (2018 நவம்பர் வரை) நீண்ட கால மற்றும் குறுகிய கால திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் 28,774 மாணவர்களுக்கு சிப்பெட் பயிற்சி அளித்துள்ளது. 2018-19 காலத்தில் நவம்பர் வரை சுமார் 50,118 பிளாஸ்டிக் தொழில்களுக்கான தொழில்நுட்பம் சார்ந்த சேவைப் பணிகளையும் / தற்காலிக பணிகளையும் சிப்பெட் செய்துள்ளது.
இந்துஸ்தான் ஆர்கானிக் ரசாயன நிறுவனம்
- இந்துஸ்தான் ஆர்கானிக் ரசாயன நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகளின் நிலை (30.11.2018 நிலவரப்படி)
- என்2ஓ4 தவிர ரசாயனி பிரிவின் அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
- இந்த நிறுவனத்தின் 20 ஏக்கர் நிலத்தோடு, 131 ஊழியர்கள் இஸ்ரோ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
- ரசாயனி நிறுவனத்தின் 442 ஏக்கர் நிலம் பி.பி.சி.எல்.-க்கு விற்கப்படுவதில் 251 ஏக்கருக்கான பரிவர்த்தனை பூர்த்தியடைந்துள்ளது. எஞ்சிய 191 ஏக்கர் நிலம் மாநில அரசின் அளவை அறிக்கைக்கு அனுமதி கிடைத்த பின் விற்கப்படும்.
- ரசாயனி நிலத்தில் மேலும் 442 ஏக்கரை (+/- 10%) பி.பி.சி.எல்.-க்கு விற்கவும் நவி மும்பையில் உள்ள கர்ஹாரில் 1000 சதுர மீட்டர் நிலத்தை நால்கோ நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விடவும் 09.10.2018 அன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
- ரசாயனியைச் சுற்றி எஞ்சியுள்ள (சுமார் 258 ஏக்கர்) நிலமும், பான்வெல் என்ற இடத்தில் உள்ள 8 ஏக்கர் நிலமும் விற்கப்படுவதற்கு பி.பி.சி.எல்., எம்.ஐ.டி.சி. போன்ற அரசு முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்தியா கெம் - 2018
- இந்தியா கெம் என்பதன் 10-வது கூட்டம் 04-06 அக்டோபர், 2018 வரை வெற்றிகரமாக மும்பையில் நடைபெற்றது. இதன் மையப் பொருள் “ரசாயனமும், பெட்ரோ ரசாயனமும் – இந்தியாவுக்கு ஆதாயம்” என்பதாகும்.
- 24 நாடுகளிலிருந்து பங்கேற்பு
- கூட்டாளி மாநிலங்கள்: மேற்கு வங்கம், குஜராத், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்.
- பங்கேற்ற மாநிலங்கள்: மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட்.
- 285 நிறுவனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
*****
வி.கீ/எஸ்எம்பி/ரேவதி
(Release ID: 1559263)
Visitor Counter : 314