கனரகத் தொழில்கள் அமைச்சகம்

கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்: நடப்பாண்டு சாதனைகள் 2018

Posted On: 27 DEC 2018 12:21PM by PIB Chennai

இந்தியாவின் எதிர்கால இயக்கத்திற்கான தொலைநோக்குப் பார்வையை பிரதமர் திரு. நரேந்திர மோடி, இவ்வருடம் செப்டம்பர் மாதம் புதுதில்லியில் நடைபெற்ற உலக இயக்க உச்சி மாநாட்டில் கோடிட்டுக் காட்டினார். அவர் பொதுவான, தொடர்புடைய, வசதியான, நெருக்கடியற்ற, எழுச்சியான, தூய்மையான, துல்லியமான கூறுகளை எடுத்துக் கூறினார்.

     2020-ஆம் ஆண்டிற்கான தேசிய மின்சார இயக்க முனைப்புத் திட்டம், நான்கு முக்கிய கூறுகளை தன்னகத்தே கொண்டதாகும். இவை தொழில்நுட்ப வளர்ச்சி, தேவையை உருவாக்குதல், முன்னணித் திட்டங்கள், வலிமையான உள்கட்டமைப்பு ஆகியவையே ஆகும்.

     பசுமை வாகனங்களை ஊக்கப்படுத்தவும், சுற்றுப்புறச் சூழல் மாசினை தடுக்கும் நோக்கத்தோடும், அனைத்துவகை மின்சார வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்படும்.

  • இத்திட்டத்தின்கீழ், தொழில்நுட்பத்தைப் பொறுத்து 1,800 முதல் 29,000 வரை ரூபாய் மதிப்புள்ள பேட்டரியால் இயக்கப்படும் இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
  • மூன்று சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை, 3,000 ரூபாய் முதல் 61 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிலான வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
  • மாத இறுதியில் தயாரிப்பாளர்கள் அரசிடமிருந்து இந்த ஊக்கத் தொகையினை கேட்டுக் பெறுகின்றனர்.

தேசிய வாகன வாரியத்தின்படி, கனரக தொழில் அமைச்சகத்தின்கீழ், 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதிவரை சுமார் 264 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு, இத்திட்டத்தினால் 2,26,557 வாகனங்கள் பயனடைந்துள்ளன.

   இந்திய அரசின் பசுமை முயற்சிகளில் ஒன்றான இந்தத் திட்டம், எதிர்காலத்தில் சாலைப் போக்குவரத்துத் துறையில், சுற்றுப்புறச் சூழல் மாசினை குறைப்பதில் மாபெரும் பங்களிப்பை வழங்கும்.

 

*******


(Release ID: 1558830) Visitor Counter : 214


Read this release in: English , Bengali