ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே அமைச்சகத்தின் சாதனைகள் – 2018
Posted On:
29 DEC 2018 1:15PM by PIB Chennai
பாதுகாப்பையும் பயணிகள் சேவையும் கவனத்தில் கொண்டு இந்திய ரயில்வே ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைந்துள்ளது. சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் சிறந்த ஊழியர்களை கொண்டு இந்த சாதனைகளை அமைச்சகம் எட்டியுள்ளது.
பாதுகாப்பை மேம்படுத்துதல்:
பாதுகாப்பை மையமாக கொண்டு, ரயில்வே அமைச்சகம் அனைத்து மண்டலங்களிலும் விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் பாதுகாப்பு சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்து இருந்தது. இதை தவிர, ரயில்வே அமைச்சகம் ஸ்மார்ட் கோச் (அதிநவீன ரயில்பெட்டி), ரோல்லிங் ஸ்டாக்-யை இணைய வழி கண்காணித்தல், 2018-2019 முதல் முற்றிலுமாக எல்.எச்.பி வடிவ ரயில் பெட்டி உற்பத்திக்கு மாறுவது, மேலும் ஆளில்லா லெவல் கிராசிங்குகளை முழுவதுமாக ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் 2017-2018-வுடன் ஒப்பிடுகையில் விபத்துகளின் எண்ணிக்கை 104 லிருந்து 73 ஆக குறைந்துள்ளது.
ரயில் தடங்கள் பராமரிப்பிலும் புதிய முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் அதிகப்படியாக 4405 கி.மீ தூரத்திற்கு ரயில் தடம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உடைந்த தண்டவாளங்களைக் கண்டறிதல், விபத்து மற்றும் அவசர உதவிகளுக்காக ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மனிதச் சார்பின்றி இருக்கும் தொழில்நுட்பம் அதிகரிப்பு, பூமிக்கு அடியில் ஊடுருவிச் செல்லுகின்ற தொலைக்கண்டுணர்வி (ராடார்), ரயில் க்ரிண்டிங் கருவி, நீளமான ரயில் பானல் கையாளுதல், யூ.எஸ்.எப்.டி, லேசர்-ஐ மையமாக கொண்டு ஒருகிணைந்த ட்ராக் ரெகார்டிங் கார் போன்ற தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய தரத்தில் அதி வேக ரயில் பெட்டி உற்பத்தியை ஐ.சி.எப் மேற்கொண்டு ட்ரைன் (ரயில்) – 18- யை தயாரித்துள்ளது. மேலும், உலகில் சிறந்த இயந்திரங்களின் உற்பத்தியாளர்களில் குஜராத்தில் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டு, மே 2019-க்குள் உற்பத்தி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுத்தவரை திக் வெப் சுவிட்சஸ், உருக்கக் கூடிய சிஎம்எஸ் கிராசிங், ரெயில் மற்றும் உருக்கக் கூடிய கருவிகளில் அல்ட்ரா சோனிக் டெஸ்ட்டிங் தொழில்நுட்ப மேம்பாடு, ரெயில் பால மேலாண்மை அமைப்பு போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
உள்கட்டமைப்பு வளர்ச்சி பிரிவில், பிரத்யேக சரக்கு தாழ்வாரங்கள் மூலம் திறனை அதிகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பயணிகள் சேவையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஜி.பி.எஸ்.-யை மையமாக கொண்ட பயணிகள் தகவல் முறை, பயணிகளுக்கான அறிவிப்பு முறை, ஒவ்வொரு பிரிவிலும் குப்பைத் தொட்டிகள், காபி விற்கும் கருவிகள், கலைநயமிக்க நிறங்கள் கொண்ட பெட்டிகள், சிசிடிவி, பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் பிரெயில் அறிவிப்புப் பலகைகள் போன்ற வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ரயில் பெட்டிகளை மேம்படுத்தும் வகையில் ஸ்வார்ன், உத்கிருஷ்த் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ரெயில் பெட்டிகளில் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் மின்சாரத்தை மிச்சம் செய்ய முடிகிறது.
கணினி வழியாக பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தூய்மையைப் பொறுத்த வரை மார்ச் 2018 வரை 488 ரெயில் நிலையங்களில் தூய்மைப்பணி ஒருங்கிணைக்கப்பட்ட இயந்திர மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது இது 697 நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2016,17,18 ஆம் ஆண்டுகளில் தனிநபர் மூலம் தூய்மைத் தரத்தை பயணிகள் எவ்வாறு மதிப்பிடுகின்றனர் என்பதை குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ராஜ்தானி, சதாப்தி, டுரண்டோ மற்றும் நீண்ட தூரம் செல்லும் பிற ரயில்களில் சுத்தம் செய்வதற்கான ஓ.பி.எச்.எஸ் என்ற சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சேவையை கிளீன்-மை-கோச் என்று குறுஞ்செய்தி அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். தானியங்கி ரெயில் பெட்டி கழுவும் கருவிகள், பயோ டாய்லெட், பயோ வேக்குவம் டாய்லெட் போன்ற சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ரயில்வே துறையின் பாரம்பரியத்தை பராமரிக்கும் வகையில் பல்வேறு கொள்கை அளவிலான சீர்திருத்தங்கள் 2018-ல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பாரம்பரியத்தை பராமரிக்கும் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்க தனி தலைவர் பதவி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய ரயில்வே அமைச்சகம் கூகுல் நிறுவனத்தின் கலை மற்றும் கலாச்சார முன்மாதிரி திட்டத்துடன் இணைந்து, உலகம் முழுவதும் இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை அனைவரும் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளது.
நுகர்வோரை மையமாக வைத்து சரக்கு ரயில்களுக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் மின்னணு மூலம் ரயில்வே ரசீதுகளை பரிமாற்றம் செய்வது, நுகர்வோருக்கு வசதியாக சரக்கு முன்மாதிரி திட்டம் போன்ற சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
செப்டம்பர் 5, 2018 முதல், வடோதராவில் உள்ள தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனம் தனது முதல் கல்வி ஆண்டை தொடங்கி 2 பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்தது. இதில் 103 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்திய ரயில்வேயின் ஊழியர்கள் குறைத் தீர்ப்பு முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கடந்த 12 மாதங்களில் நாடு முழுவதும் 9025 சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டதன் மூலம் 12 லட்சம் ஊழியர்கள் பயனடைந்தனர். மேலும், ஊழியர்களின் நலனுக்காக கைபேசி செயலி, ஊழியர்களின் ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வு மற்றும் வளர்ச்சி தொடர்பான விற்பனையாளர் பதிவு சார்ந்த நடவடிக்கைகளை நெறிபடுத்துதல் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிற ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வளர்ச்சித் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வேத் துறை மேற்கொண்டு வருகிறது.
***
வி.கீ/அரவி/ரேவதி
(Release ID: 1558560)
Visitor Counter : 548