சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

2018 ஆண்டு இறுதியறிக்கை : சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்

Posted On: 27 DEC 2018 4:29PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திரமோடிக்கு ஐ.நா வின் மிக உயரிய சுற்றுச்சூழல் விருதான புவியின் புரவலர் விருது வழங்கப்பட்டுள்ளது 2018-ஆம் ஆண்டில் இந்தியா சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் ஏற்றுள்ள உறுதிமொழி மற்றும் தலைமைக்கு சான்று பகர்வதாக அமைந்துள்ளது.

சுற்றுச் சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் 2018-ஆம் ஆண்டு செயல்பாடுகளில் முக்கிய அம்சசங்கள் வருமாறு:

உலக சுற்றுச்சூழல் தினம்

· 2018 ஜுன் 5-ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தின கொண்டாட்டத்தில், ஐ.நா சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு இந்தியாவை உலக உபசார நாடாக தேர்வு செய்திருந்தது. இந்தியாவின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தலைமைப் பண்புக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த முக்கிய நிகழ்ச்சி, தில்லி விக்ஞான் பவனில் நடைபெற்றது. சுற்றுச் சூழல் சார்ந்த பல்வேறு கருத்துக்களில் மாநாடுகள் நடைபெற்றன.

பசுமை நற்செயல்கள் இயக்கம்

· பசுமை நற்செயல்கள் இயக்கம், சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்களை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கையாகும். இது, 2018 ஜனவரியில் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. சுற்றுச் சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் தனிநபர்களையும், அமைப்புகளையும் ஈடுபடுத்துவது.

· பசுமை சமுதாய பொறுப்பை நிறைவேற்றுவதற்கென சுற்றுச் சூழல் மன்றங்களில் மாணவர்களை ஈடுபடுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சுற்றுச் சூழல் மன்ற திட்டங்களை அமல்படுத்த ஒருங்கிணைப்பு அமைப்புகள் நியமிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான 10  அம்ச செயல் திட்டத்தை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

தூய்மையான காற்று இயக்கம்

     தில்லியில் 2018 பிப்ரவரி 10-முதல் 23-ஆம் தேதிவரை தூய்மையான காற்றுக்கு என கூட்டு இயக்கம் ஒன்றை சுற்றுச் சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்தார்.

பசுமைத் திறன் மேம்பாட்டுத் திட்டம்

     2018-19ஆம் ஆண்டில் 30-க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. தூய்மைக்கேடு கண்காணிப்பு, கழிவு மேலாண்மை, வன மேலாண்மை, வனவிலங்கு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

பசுமைத் தீபாவளி

     அமைச்சகத்தின்கீழ், 22.10.2018 அன்று பசுமைத் தீபாவளி, தூய்மையான தீபாவளி இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. தில்லி மற்றும் தேசிய தலைநகர மண்டலத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர்.

 

மூங்கிலை மறுவகைப்படுத்துதல்

     1927 இந்திய வனங்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை அடுத்து, மூங்கில் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு செல்ல இருந்த தடை நீக்கப்பட்டது. தற்போது இந்த நடவடிக்கைக்கு அரசு அனுமதி ஏதும் தேவையில்லை. மூங்கில் மேம்பாட்டுக்கென மத்திய அரசு ரூ.1,790 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட தேசிய மூங்கில் இயக்கத்தை தொடங்கியுள்ளது.

பருவநிலை மாற்றம்

· பருவநிலை மாற்ற பிரச்சினை, குறிப்பாக – இதுகுறித்த சர்வதேச பேச்சுக்கள், உள்நாட்டுக் கொள்கைகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றுக்கு அமைச்சகம் பொறுப்பேற்றுள்ளது.  ஐநா பருவநிலை மாற்ற ஒப்பந்த கட்டமைப்புக்கு ஆண்டுக்கு இருமுறை அறிக்கையை சமர்ப்பிப்பது, தேசிய தகவல் தொடர்பு அறிக்கை சமர்ப்பிப்பது ஆகியவற்றுக்கு அமைச்ககம் பொறுப்பேற்கிறது.

· 201-8ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் குறித்த பல முக்கிய இருதரப்பு மற்றும் பலதரப்பு சந்திப்புகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஐநா பருவநிலை மாற்ற அமைப்புக்கான தரப்பினரின் 24-வது மாநாட்டிற்கு ஏற்றவகையில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

· போலந்து நாட்டின் காட்டோவைஸ் என்ற இடத்தில் நடைபெற்ற 24-வது தரப்பினர் மாநாடு, பாரீஸ் ஒப்பந்த செயல்முறைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது.

· இந்த மாநாட்டின்போது, 2018 டிசம்பர் 3-முதல் 14-வரை போலந்தின் காட்டோவைஸ் நகரில் இந்தியா அரங்கை அமைச்சம் அமைத்தது.

· 2018-ல் பருவநிலை மாற்றத்திற்கான தேசிய நிதியத்தின்கீழ், மொத்தம் ரூ.42.16 கோடி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் நடைபெறும் திட்டங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டது.

· பருவநிலை மாற்ற செயல்திட்டத்தின்படி, மொத்தம் ரூ.2.15 கோடி திறன் மேம்பாட்டிற்கென ஒதுக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் செயல்விளக்கத் திட்டங்கள் நடத்தப்பட்டன.

· 2018-டிசம்பர் இறுதியில், ஐ.நா பருவநிலை மாற்ற கட்டமைப்பில் 2-வது புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்யும்.

2018-ல் மேற்கொள்ளப்பட்ட இதர திட்டங்கள் / கொள்கை முடிவுகள்

· ஆறுகளில் சுற்றுச் சூழல் மாசுபடுதல் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.

· முதலாவது இந்தியா-மொரோக்கோ கூட்டுப் பணிக்குழு கூட்டம் 2018 பிப்ரவரியில் நடைபெற்றது.

· மனிதர்கள் – வனவிலங்கு போராட்டத்தை குறைப்பது தொடர்பாக இந்தியா - ஜெர்மனி தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான திட்டம் உருவாக்கப்பட்டது.

· பறவைகள் இடம்பெயர்ந்து செல்வதில் உலகில் உள்ள ஒன்பது ஆகாய மார்க்கங்களில், மத்திய ஆசியா ஆகாய மார்க்கத்திற்கான தேசிய செயல் திட்டம் அமைச்சகத்தால் தொடங்கி வைக்கப்பட்டது.

· வனவிலங்கு பற்றிய தேசிய வாரிய நிலைக்குழு சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும், காணொலி மூலம், விவாதிக்கும் திட்டத்தை வன விலங்குப் பிரிவு தொடங்கியுள்ளது.

· பயிர்க் கழிவுகளை எரித்து காற்று மாசுபடுவதை, குறிப்பாக – தில்லி பகுதியில் காற்று மாசுபடுவதை தடுப்பதற்கான திட்டம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிதேசம், தில்லி பகுதிகளில் ரூ.1,151.80 கோடி மதிப்பீட்டில் 2018-19 முதல் 2019-20 வரையிலான காலத்திற்கு தொடங்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு இந்த ஆண்டுக்கான மத்திய நிதி ரூ.591.65 கோடி வழங்கப்பட்டுள்ளது.

     மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

******

விகீ/சிஜே/க


(Release ID: 1558225) Visitor Counter : 1131


Read this release in: English , Bengali