நீர்வளத் துறை அமைச்சகம்

நடப்பாண்டு சாதனைகள்: நீர்வளங்கள், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு

Posted On: 19 DEC 2018 3:27PM by PIB Chennai

தூய்மை கங்காவுக்கான தேசிய இயக்கம் (என்.எம்.சி.ஜி.)

கங்கை புனரமைப்பு

  • கழிவுநீர் வடிகால் உள்கட்டமைப்பு, மலைத் தொடர் மற்றும் மயானபூமி மேம்பாடு, நதி முகப்பு மேம்பாடு, நதி மேற்பரப்பு தூய்மை, பல்லுயிர் பாதுகாப்பு, காடு வளர்ப்பு, ஊரக துப்புரவு பணி மற்றும் பொதுமக்கள் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்காக  நமாமி கங்கா திட்டத்தின் கீழ் ரூ.24,672 கோடி மதிப்பிலான மொத்தம் 254  திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
  • 3076 எம்.எல்.டி புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (எச்டிபிஎஸ்),  தற்போதுள்ள எஸ்.டி.பி.-களில் 887 எம்.எல்.டி மறுசீரமைப்பு, கங்கை யமுனா ஆறுகள் மாசுபடுவதை தடுப்பதற்கான 4942 கிலோ மீட்டர் தூரத்திற்கான கழிவுநீர் சீரமைப்பு தொகுப்புக்கு 254 திட்டங்களில் 131 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
  • நிதி முகப்பு மேம்பாட்டுக்காக, 145 மலைத் தொடர்கள் மற்றும் 53 மயான பூமிகளின் பணிகள் முன்னேற்றத்துடன் நடைபெற்று வருகின்றன. மார்ச் 2019-ல் இவை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

  • ஊரக துப்புரவுப் பணியை பொருத்தமட்டில் கங்கை ஆற்றின் கரையோரமாக உள்ள 4,465 கிராமங்களை திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லா பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன, அங்குள்ள வீடுகளில் 10,88,688 தனிநபர் கழிவறைகள், குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ளன. இதற்காக இந்த அமைச்சகத்திற்கு என்எம்சிஜி 829  கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
  • லண்டன் மற்றும் மும்பை நகரங்களில் வெற்றிகரமாக நிகழ்ந்த இரண்டு கண்காட்சிகளைத் தொடர்ந்து நமாமி கங்கையில் கம்பெனிகளின் பங்களிப்பு வலுவாக மேம்பட்டுள்ளது. கங்கையை தூய்மைப்படுத்தும் பணியில் கம்பெனிகள் தங்களது ஆர்வத்தையும், பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தி உள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பின்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியில் இந்திய அரசுடன் கூட்டாக செயல்படுவதில் ஆர்வம் காட்டியுள்ளன.
  • 2018-19 நிதியாண்டில் (30.11.2018 வரை) கங்கையை தூய்மைப்படுத்துவதற்கான தேசிய இயக்கம் மாநிலங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ரூ.1532.59 கோடியை வழங்கியுள்ளது.

தொழிலக மாசு கட்டுப்பாடு நிர்வாகம்

  • கங்கை ஆற்றின் பிரதான அடிவாரத்தை மொத்தமாக மாசுபடுத்தும் 961 தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டன.
  • நவம்பர் 2018-ன்படி, மொத்தமாக மாசுபடுத்தும் 961 தொழிற்கூடங்களில் 795 தொழிற்கூடங்கள் ஆன்லைன் தொடர் கழிவுநீர் அகற்றல் கண்காணிப்பு அமைப்பு (ஓ.சி.ஈ.எம்.எஸ்), சி.ப்பி.சி.பி சர்வருடன்  இணைக்கப்பட்டுள்ளன.

 

 

 

  ஷாப்பூர் காண்டி அணை திட்டம்

மத்திய நீர்வளத்துறை, நதி மேம்பாடு கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் கீழ் பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களுக்கு இடையே செப்டம்பர் 8, 2018 அன்று பஞ்சாபில் ரவி ஆற்றின் மீது ஷாப்பூர் காந்தி அணை திட்டப் பணிகள் தொடங்குவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 30.08.2014 முதல் இந்த திட்டத்திற்கான பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இப்பணிகள் நவம்பர் 1, 2018 முதல் மீண்டும் தொடங்கியுள்ளன.

லக்வார் திட்டம்

மத்திய நீர்வளம், நதி மேம்பாடு, கங்கை புனரமைப்பு, கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி மற்றும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட். ஹரியானா, தில்லி மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர்களுக்கு இடையே ஆகஸ்ட் 28, 2018 அன்று யமுனை கரையின் மேற்பகுதியில் ரூ.3966.51 கோடி செலவில் லக்வார் பல்நோக்கு திட்ட கட்டுமானப் பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நீர்வளங்கள் தகவல் அமைப்பு மேம்பாடு – 2018 சாதனைகள்

  1. 319 புதிய நீர்நிலை கண்காணிப்பு தளங்கள் முழுமையாக இயக்கி வைக்கப்பட்டுள்ளன.
  2. வெள்ளம் பற்றிய 23 முன்னறிவிப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
  3. தானியங்கி தகவலை கையகப்படுத்துவதற்கும், செயற்கைக் கோளை அடிப்படையாக கொண்ட ஒளிபரப்பு அமைப்புக்கான டெலிமெட்ரி சாதனங்கள் 87 தளங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
  4. 85 தளங்களில் டெலிமெட்ரி சாதனங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
  5. ரஞ்சித் சாகர் அணையில் உட்புகும் வார்ப்புகள்   மேம்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் மேம்படுத்தப்பட்ட 271 வார்ப்புகள் மழைக் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு, விவரங்கள் சேகரிப்புக்காக சீரமைக்கப்பட்டுள்ளன.
  6. பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் வார்ப்புகள்  மேம்படுத்தப்பட்டுள்ளன.
  7. 2018-19 மழைக்காலத்தில் வெள்ளம் பற்றிய 6791 முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

காவிரிப் படுகைவரை கோதாவரி நீரை மாற்று வழியில் திருப்பி விடுவதற்கான திட்டம்:

  1. தேசிய கண்ணோட்டத் திட்டத்தின் தீபகற்ப கூறுக்கான திட்டத்தின்படி சுமார் 20,796 எம்.சி.எம். தண்ணீர் மகாநதி மற்றும் கோதாவரி ஆறுகளிலிருந்து பின்வரும் ஒன்பது இணைப்புகள் வழியாக திருப்பிவிடப்படவுள்ளன.
    (i) மகாநதி-கோதாவரி இணைப்பு,

(ii) ஈஞ்சம்பள்ளி – நாகார்ஜூனா சாகர் இணைப்பு,

(iii) ஈஞ்சம்பள்ளி –புளிசிந்தாலா இணைப்பு,

(iv) போலாவரம் – விஜயவாடா இணைப்பு (ஆந்திரபிரதேச அரசு       

   அமல்படுத்தியுள்ளது)

(V) அலமட்டி - பெண்ணார் இணைப்பு,

(vi) ஸ்ரீசைலம் – பெண்ணார் இணைப்பு,

(vii) நாகார்ஜுனசாகர் – சோமசீலா இணைப்பு,

(viii) சோமசீலா – பெரிய அணைக்கட்டு இணைப்பு,

(ix) காவிரி –வைகை-குண்டார், கிருஷ்ணா – பெண்ணார் – இணைப்பு

காவிரி, வைகை மற்றும் குண்டார் பள்ளத்தாக்குகள்.

  • மகாநதியின் குறுக்கே மனைபத்திரா அணை மற்றும் கோதாவரி குறுக்கே ஈஞ்சம்பள்ளி அணை ஆகியவற்றுக்கு ஒருமித்த கருத்து ஏற்படாததால்,  நிலுவையில் உள்ளன. இந்தப் பள்ளத்தாக்குகளிலிருந்து கணிசமான அளவு நீர் பெருமளவில் இதர பகுதிகளை மூழ்கடிக்கும் என்பதால் சத்தீஷ்கர் மாநிலத்தின் பயன்படுத்தப்படாத தண்ணீரின் பங்கை கோதாவரி பள்ளத்தாக்கின்  இந்திராவதி துணை பள்ளத்தாக்கு பகுதிக்கு கோதாவரி – காவேரி இணைப்புத் திட்டத்திற்கு காவேரி ஆற்றின் வழியாக திருப்பி விடுவதற்கான மாற்றுத் திட்டம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. கோதாவரி (அக்னிபள்ளி) – காவேரி  (பெரிய அணைக்கட்டு) இணைப்புத் திட்டத்தின் தொழில்நுட்ப செயலாக்க அறிக்கை சம்பந்தப்பட்ட மாநிலங்களில் டிசம்பர் 2017 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரைவு அறிக்கை  தயாரிப்பதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்புடைய மாநிலங்களுக்கு பிப்ரவரி 2018-ல் அனுப்பப்பட்டுள்ளது. ஐதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் நடைபெற்ற நீர்வளம் பற்றிய மண்டல மாநாடுகளில் இந்த திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • நீர்வளம் மற்றும் சாலை மேம்பாட்டுத் துறை அமைச்சர் இது குறித்து சத்தீஸ்கர் மாநில நீர்வளத்துறை அமைச்சருடன் கோதாவரி – காவேரி (பெரிய அணைக்கட்டு) இணைப்புத் திட்டத்திற்கான மாற்று ஆய்வுத் திட்டம் குறித்து விவாதித்தார். இதற்கான மாற்று அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
  • மகாநதி  - கோதாவரி இணைப்பு செயல்பாட்டுக்கு வந்ததும், ஒன்பது இணைப்புகளில் எஞ்சியுள்ளவை செயலாக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

 

 

*****


(Release ID: 1557549) Visitor Counter : 461


Read this release in: English , Bengali