புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2018-ஆம் ஆண்டில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் சாதனைகள் & முன்முயற்சிகள்

Posted On: 20 DEC 2018 11:50AM by PIB Chennai

நாட்டின் மாறிவரும் சமூக – பொருளாதார சூழலில், புள்ளிவிவரத் தொகுப்பிற்கு தேவைப்படும் புள்ளியியல் நடைமுறைகளை மேம்படுத்த 2018-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான முன்முயற்சிகள் வருமாறு:

  1. அடிப்படை ஆண்டை மாற்றியமைப்பதற்கான முன்முயற்சிகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.    2011-12ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட பின்னோக்கு மதிப்பீடுகளை 28.11.2018 அன்று அமைச்சகம் வெளியிட்டது.
  2. சார்-தேசிய கணக்குகளுக்கான குழு ஒன்று ஐ.ஐ.எம் முன்னாள் பேராசிரியர் ரவீந்திரா ஹெச். தொலாக்கியா தலைமையில் அரசால் அமைக்கப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அடிப்படை ஆண்டை மாற்றியமைப்பதற்காக மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் பொருளாதார புள்ளிவிவரங்களை தொகுப்பதற்கான தற்போதைய விதிமுறைகளை மாற்றியமைக்கவும், புதிய விதிமுறைகளை வகுக்கவும் இக்குழு அமைக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு குழு இதற்கு முன் 1972ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  3. அதிகாரப்பூர்வ புள்ளிவிவர தர உறுதிக்கான பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை 2018 ஏப்ரலில் அமைச்சகம் வெளியிட்டது. இதன்படி, ஐ.நா புள்ளிவிவர ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய தேசிய தர உத்தரவாத கட்டமைப்பின்படி,  புள்ளிவிவரங்கள் தொடர்பான தரத்தை மேம்படுத்த அரசாங்க அமைப்புகள் தாமாக முன்வந்து செயல்படுத்த வேண்டும்.
  4. நுகர்வோர் விலைக் குறியீடு, தொழில் உற்பத்திக் குறியீடு, மொத்த விலைக் குறியீட்டு எண் போன்ற குறியீடுகளின் தரத்தை மேம்படுத்துவதில் அரசு அமைப்புகளுக்கு உதவும் நோக்கில், சமூகப் பொருளாதார குறியீட்டுக்கான பொதுவான விதிமுறைகளை 2018 ஏப்ரலில் அமைச்சகம் வெளியிட்டது.
  5. நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை கண்காணிப்பதற்காக தேசிய வெளிப்பாட்டு கட்டமைப்பு ஒன்றை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதற்கான பணிகளை முறையாக ஆய்வு செய்து சீரமைப்பதுடன், தேசிய வெளிப்பாட்டு கட்டமைப்பை திருத்தியமைப்பதற்கான உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்கவும் 24.10.2018 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  6. கண்காணித்தல், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின் விளைவு தொடர்பான திறன் வளர்ச்சிக்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு மற்றும் குறிக்கோள்களை கண்காணிப்பதில் ஒருங்கிணைந்து செயல்பட, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறைக்கும் ஐ.நா நிரந்தர ஒருங்கிணைப்பாளரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  7. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களில் புதுமையை புகுத்துவது தொடர்பாக ஹுப்ளியில் நடைபெற்ற எழில்மிகு இந்தியா ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையும் கலந்து கொண்டது.  இதில், சீர்திருத்தம் தொடர்பாக பொறியியல் மாணவர் குழுக்கள் உருவாக்கிய தீர்வு முறைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

 

*********


(Release ID: 1557366) Visitor Counter : 267


Read this release in: English , Hindi