சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
வக்ஃபு வாரிய நிலம் சட்ட விரோதமாக மாற்றப்படும் பிரச்சனை
Posted On:
20 DEC 2018 11:48AM by PIB Chennai
வக்ஃபு சொத்துக்கள் (அதிகாரபூர்வமின்றி வைத்திருப்போரை வெளியேற்றுதல்) மசோதா 2014, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை நிலைக்குழுவின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் தற்போது பரிசீலனையில் உள்ளதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று (19.12.2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அமைச்சர், மாநில அரசுகளால் இயற்றப்படும் வக்ஃபு சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் மாநில வக்ஃபு வாரியங்களின் செயல்பாடு குறித்து அவ்வப்போது மத்திய அரசு கண்காணித்து ஆய்வு செய்து வருகிறது என்றார்.
தமிழ்நாட்டில் 1335 வக்ஃபு வாரிய சொத்துக்களும், புதுச்சேரியில் 5 வக்ஃபு வாரிய சொத்துக்களும் தனியார் அல்லது பொது மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Release ID: 1556848)
Visitor Counter : 229