புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
2018-ல் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் சாதனைகள்
Posted On:
10 DEC 2018 3:00PM by PIB Chennai
மாசு இல்லாத கோள் என்ற அரசின் உறுதிப்பாட்டையும் பருவநிலை மாற்றத்திற்கான பாரீஸ் ஒப்பந்தத்தின்படி தேசிய அளவில் பங்களிப்புக்கான தீர்மானத்தையும் கவனத்தில் கொண்டு தூய்மையான வளங்கள் அடிப்படையில் மின் உற்பத்தித் திறனை 2030-க்குள் 40 சதவீதம் உயர்த்துவதென இந்தியா உறுதிபூண்டுள்ளது. மேலும் 2022-க்குள் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திறனை 175 ஜிகாவாட் அளவிற்கு அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளது. சூரிய சக்தியிலிருந்து 100 ஜிகாவாட், காற்றாலையிலிருந்து 60 ஜிகாவாட், கழிவுப் பொருட்களிலிருந்து 10 ஜிகாவாட், சிறிய அளவிலான புனல் மின் திட்டங்களிலிருந்து 5 ஜிகாவாட் என்பதாக இந்த உற்பத்தி அமையும்.
ஒட்டு மொத்த மின் உற்பத்தித் திறனில் புதுப்பிக்கவல்ல எரிசக்தியின் பங்கு 31.10.2018-ல் கீழ்காணுமாறு இருந்தது.
ஆதாரம்
|
உற்பத்தித் திறன் (ஜிகாவாட்)
|
சதவீதம்
|
அனல்
|
221.76 ஜிகாவாட்
|
(63.84%)
|
அணு
|
6.78 ஜிகாவாட்
|
(1.95%)
|
புனல்
|
45.48 ஜிகாவாட்
|
(13.09%)
|
புதுப்பிக்கவல்ல
|
73.35 ஜிகாவாட்
|
(21.12%)
|
மொத்தம்
|
347.37 ஜிகாவாட்
|
(100%)
|
- உலகளவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திறனை இந்தியா 5-வது இடத்திலும், காற்றாலை மின் உற்பத்தியில் 4-வது இடத்திலும், சூரிய மின்சக்தியில் 5-வது இடத்திலும் உள்ளது.
- 2017 மே மாதத்தில் 200 மெகாவாட்டுக்கும் 2018 ஜூலையில் மீண்டும் 600 மெகாவாட்டுக்கும் இந்திய சூரிய மின்சக்திக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஏல முறையின்படி ஒரு யூனிட் விலை மிக குறைந்த அளவாக ரூ.2.44 என இருந்தது. 2017 டிசம்பர் மாத்ததில் குஜராத் அரசால் 500 மெகாவாட் திட்டத்திற்கான ஏலத்தின் போது காற்றாலை மின்சக்திக் கட்டணம் மிகக் குறைவாக ஒரு யூனிட்டுக்கு ரூ.2.43 ஆக இருந்தது.
- 31.03.2014-ல் 35.51 ஜிகாவாட்டாக இருந்த புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திறன் 31.10.2018-ல் 73.35 ஜிகாவாட்டாக அதிகரித்திருந்தது (கடந்த நான்கரை ஆண்டுகளில் இது சுமார் 106 சதவீதம் உயர்வாகும்) கூடுதல் மின் உற்பத்தியின் வகை – சூரிய மின்சக்தி 21.7 ஜிகாவாட். காற்றாலை மின்சக்தி 13.98 ஜிகாவாட், சிறிய வகை புனல் மின் உற்பத்தி 0.7 ஜிகாவாட், கழிவுப் பொருட்களிலிருந்து மின் உற்பத்தி 1.5 ஜிகாவாட். ஆண்டுவாரியான கூடுதல் உற்பத்தித் திறன் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளில் (2014-15 முதல் 2018-19 வரை, 31.10.2018 நிலவரப்படி) புதுப்பிக்கவல்ல எரிசக்தி முன்னேற்றம்
|
பிரிவு
|
மொத்த உற்பத்தி மெகாவாட்டில் (31.03.2014) நிலவரப்படி
|
கூடுதல் உற்பத்தித் திறன் மெகாவாட்டில்
|
மொத்த உற்பத்தி மெகாவாட்டில் (31.10.2018) நிலவரப்படி
|
2014-15
|
2015-16
|
2016-17
|
2017-18
|
2018-19
|
காற்றாலை மின்சக்தி
|
21042.57
|
2311.78
|
3423.05
|
5502.37
|
1865.23
|
841.35
|
34986.35
|
சிறிய வகை புனல் மின் சக்தி
|
3803.74
|
251.61
|
218.60
|
105.9
|
105.95
|
21.15
|
4506.95
|
உயிரி மின்சக்தி
|
8041.63
|
355.72
|
364.09
|
187.65
|
552.82
|
44.00
|
9545.91
|
சூரிய மின்சக்தி
|
2631.90
|
1112.08
|
3018.9
|
5526
|
9362.64
|
2661.12
|
24312.58
|
மொத்தம்
|
35519.84
|
4031.19
|
7024.64
|
11321.92
|
11886.64
|
3567.62
|
73351.79
|
|
|
|
|
|
|
|
|
- நாட்டில் 2014-15-ல் உற்பத்தி செய்யப்பட்ட, 61.78 பில்லியன் யூனிட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி வளங்களோடு ஒப்பிடும் போது 2017-18-ல் மொத்தம் 101.83 பில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது (கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 65 சதவீதம் அதிகரிப்பு) 2014-15-ல் 5.5 சதவீதமாக இருந்த புதுப்பிக்கவல்ல எரிசக்தி மூலமான மின்உற்பத்தி தற்போது 8 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு (ஐ.எஸ்.ஏ.)
- சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு இந்தியாவை தலைமையிடமாக கொண்ட முதலாவது சர்வதேச அரசுகளுக்கு இடையேயான அமைப்பாக டிசம்பர் 6 2017-ல் தொடங்கப்பட்டது. அனைவருக்கும் தூய்மையான, குறைந்த செலவிலான மின்சாரம் வழங்குவது என்ற இந்தியாவின் தொலை நோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐ.எஸ்.ஏ. உள்ளது. ஐ.எஸ்.ஏ. கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இதுவரை 71 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவற்றில் 48 நாடுகள் இதற்கு ஏற்பு அளித்துள்ளன.
- ஐ.எஸ்.ஏ.வின் முதலாவது கூட்டம் இந்தியாவில் அக்டோபர் 3, 2018-ல் நடைபெற்றது. இந்தியா, பிரான்ஸ் உட்பட ஐ.எஸ்.ஏ.வின் 37 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.
(Release ID: 1556835)
Visitor Counter : 494