வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
2018-ல் தொழில், வர்த்தக அமைச்சகத்தின் சாதனைகள்
5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் -
புதிய இந்தியாவின் தொலை நோக்குப் பார்வை
Posted On:
11 DEC 2018 6:01PM by PIB Chennai
புதிய இந்தியாவின் தொலை நோக்குப் பார்வை:
2025-க்கு முன்னால் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கு இந்தியாவின் முன்னோக்கிய பயணத்திற்கு குறிப்பிட்ட சில துறை அளவில் தலையிடுவதற்கான செயல் திட்டத்தை தொழில் வர்த்தக அமைச்சகம் உருவாக்கி வருகிறது. இதில் சேவைகள் துறையின் பங்களிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும், உற்பத்தித் துறையின் பங்களிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும், வேளாண் துறையின் பங்களிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலராகவும் இருக்கும்.
சேவைத் துறையில் 12 முக்கிய பிரிவுகளுக்கு ஊக்கமளிக்க 1 பில்லியன் அமெரிக்க டாலருடன் தொகு நிதியத்தை இந்த அமைச்சகம் உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தின் தேவைகளை மனதில் கொண்டு புதிய தொழில் கொள்கையை வெளியிடுவதற்கான பணியை இது செய்து வருகிறது. 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற நிலைக்கு இந்தியாவைக் கொண்டு வருவதற்கான இலக்கை எட்டுவதற்கு வர்த்தகத் துறையும், தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.
வேளாண் பொருட்கள் ஏற்றுமதி கொள்கை, 2018
2022-க்குள் இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை 60 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு உயர்த்த முதன் முறையாக வர்த்தக அமைச்சகம் வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக் கொள்கையை உருவாக்கியுள்ளது. இது வேளாண் அமைச்சகத்தின் 100 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கு எட்டுவதற்கு உதவும். மேலும் உலகளவிலான வேளாண் பொருட்களில் இந்தியாவின் பங்கினை 2 மடங்காக்கவும் உலக மதிப்பு தொடர்ச்சியில் இந்திய வேளாண் பொருட்களின் தரத்தை உயர்த்தவும் இந்திய விவசாயிகளை ஒருங்கிணைக்கவும் இது உதவும்.
அதிகரிக்கும் ஏற்றுமதிகள்
கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதிகள் மிக உயர்ந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க தலையீடுகள், குறிப்பிட்ட ஏற்றுமதி மேம்பாட்டுக்கான முன்முயற்சிகள், அதிகபட்ச வெளிப்படைத்தன்மை, பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு ஆகியவை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2017-18-ல் (அக்டோபர் – செப்டம்பர்) 14.76 சதவீத ஏற்றுமதி வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.
உலோகங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் வர்த்தக் கழகம் (எம்.எம்.டி.சி.)
எம்.எம்.டி.சி. என்பது இந்தியாவுக்கு அன்னியச் செலாவணியை அதிகபட்சமாக ஈட்டித் தரும் 2 அமைப்புகளில் ஒன்றாகும். மேலும் இது வர்த்தகத்தில் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமாகும். இந்த ஆண்டு முதல் பாதியில் எம்.எம்.டி.சி. தனது செயல்பாடுகளிலிருந்து ரூ.12,511 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.9,969 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்தை விட தற்போதைய வளர்ச்சி 26 சதவீதம் அதிகமாகும். இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.29.76 கோடி நிகர லாபம் என்பதோடு ஒப்பிடும் போது இந்த ஆண்டு ரூ.41.62 கோடியாக அதிகரித்துள்ளது. இது 40 சதவீத உயர்வாகும். 2018-19 நிதியாண்டில் 2-வது பாதியில் இந்த நிறுவனத்தின் செயல்பாடு மேலும் மேம்பாடு அடையும்.
வணிகம் செய்வதற்கு எளிதாக இருக்கும் தரவரிசையில் இந்தியா மேம்பட்டுள்ளது
வணிகம் செய்வதற்கு எளிதாக இருக்கும் நாடுகளுக்கான உலக வங்கியின் தரவரிசைப் பட்டியலில் இந்தாண்டு இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77-வது இடத்தை பெற்றுள்ளது. எந்தவொரு பெரிய நாடும் 2011-க்கு பிறகு இவ்வளவு முன்னேற்றமடையாத வகையில் இந்தியா 2 ஆண்டுகளில் அதிகபட்சமாக தரவரிசையில் 53 இடங்கள் முன்னேறி உள்ளது. எளிதாக வணிகம் செய்யும் நாடுகள் அறிக்கையின்படி 2014-ல் தெற்காசிய நாடுகளில் 6-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளது.
கட்டுமான அனுமதிகள் வழங்குவதில் 2017-ல் 181-வது இடத்திலிருந்து இந்தியாவின் தரவரிசை 2018-ல் 52-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஒரே ஆண்டில் 120 இடங்கள் முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. எல்லைகளுக்கு அப்பாலான வர்த்தகத்தில் 2017-ல் இருந்த 146-வது இடத்திலிருந்த இந்தியா 66 இடங்கள் முன்னேறி 2018-ல் 80-வது இடத்திற்கு வந்துள்ளது.
வ.எண்
|
வகைகள்
|
2017
|
2018
|
மாற்றம்
|
1
|
கட்டுமான அனுமதிகள்
|
181
|
52
|
+129
|
2
|
எல்லைக்கு அப்பாலான வர்த்தகம்
|
146
|
80
|
+66
|
3
|
வணிகம் தொடங்குதல்
|
156
|
137
|
+19
|
4
|
கடன் பெறுதல்
|
29
|
22
|
+7
|
5
|
மின்சாரம் பெறுதல்
|
29
|
24
|
+5
|
6
|
ஒப்பந்தங்களை அமலாக்குதல்
|
164
|
163
|
+1
|
ஒட்டு மொத்த தரவரிசை
|
100
|
77
|
+23
|
புதிய வளர்ச்சிப் பாதையில் வெளிநாட்டு நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ.)
2019 நிதியாண்டின் முதல் காலாண்டில் 12.7 பில்லியன் அமெரிக்க டாலர் எஃப்டிஐ வந்துள்ளது. இது 2018 நிதியாண்டின் காலாண்டை விட 23 சதவீதம் அதிகமாகும். 2017-18 நிதியாண்டில் 61.96 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வந்த எஃப்.டி.ஐ. விட தற்போது முதன் முறையாக இந்தியாவுக்கு அதிகபட்ச எஃப்.டி.ஐ. வந்துள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ பாகங்கள் உற்பத்தியில் 2016-17-ல் இருந்த எஃப்.டி.ஐ. சமபங்கு 2017-18 நிதியாண்டில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜவுளித்துறை உற்பத்தியில் 2016-17வுடன் ஒப்பிடும் போது எஃப்.டி.ஐ. சமபங்கு 2017-18 நிதியாண்டில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி
உலகளவிலான புதிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (2015-16) இந்தியா 15 இடங்கள் முன்னேறி உள்ளது (ஆதாரம்: உலக அறிவுசார் சொத்து அமைப்பு) பொருள் போக்குவரத்து செயல்பாட்டு குறியீட்டில் (2015-16) 19 இடங்கள் முன்னேறி உள்ளது. (ஆதாரம்: உலக வங்கி)
உலகளவிலான போட்டித் திறன் குறியீட்டில் (2014-16) இந்தியா 32 இடங்கள் முன்னேறி உள்ளது. (ஆதாரம்: உலகப் பொருளாதார அமைப்பு).
2017 அக்டோபரில் இருந்த 4610 என்ற புதிய தொழில் முயற்சிகளோடு ஒப்பிடுகையில் 2018 நவம்பரில் 14,545 புதிய தொழில் முயற்சிகளுக்கு தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுப் பிரிவு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,30,424 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வேலை தேடுவோருக்கு பதிலாக வேலை வழங்குவோருக்கான நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என ஜனவரி 16, 2016-ல் பிரதமர் கூறியதற்கு ஏற்ப பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
19 அம்ச புதிய தொழில் முயற்சிக்கான செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எளிதாக காப்புரிமைக்கு விண்ணப்பித்தல், வரிவிலக்குகள், புதிய தொழில் முயற்சியை எளிதாக்குதல், ரூ.10 ஆயிரம் கோடி தொகு விகிதம் போன்றவை இதில் அடங்கும்.
வர்த்தக அமைச்சகத்தின் முயற்சிகள் காரணமாக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான வட்டி மானியம் 2 சதவீதமாக விரிவுபடுத்தப்பட்டது. அரசு இ சந்தை மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு திட்டங்களின் மூலம் வர்த்தகத் துறை 80 மாவட்டங்களில் நவம்பர் 2, 2018-ல் கண்காட்சிகளை அமைத்திருந்தது. வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம், அரசு இ சந்தை ஆகியவற்றிலிருந்து வர்த்தகத் துறையால் நியமிக்கப்பட்ட தொடர்பு அதிகாரிகள் இவற்றில் கலந்து கொண்டனர்.
தோல் மற்றும் காலணி தயாரிப்பு பிரிவில் 94,232 வேலைவாய்ப்பற்ற நபர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி 2017-18-ல் அளிக்கப்பட்டது. இவர்களில் இந்திய காலணி மற்றும் தோல் பொருட்கள் மேம்பாட்டுக்கான துணைத் திட்டத்தில் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் 71,125 பயிற்சியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தொழில் துறையில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது. 2018-19-க்கான பயிற்சித் திட்ட காலத்தில் மேலும் 25,643 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஆர்.சி.இ.பி.
பிராந்திய அளவில் விரிவான பொருளாதார பங்குதாரர்கள் அமைப்பின் (ஆர்.சி.இ.பி.) தலைவர்கள் பங்கேற்ற 2-வது உச்சி மாநாடு நவம்பர் 14, 2018 அன்று நடைபெற்றது. பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு இந்த தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். நவம்பர் 12,13 2018-ல் நடைபெற்ற இந்த அமைப்பின் அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் மேலும் 3 சாசனங்கள் இறுதி செய்யப்பட்டன. இதுவரை மொத்தமுள்ள 16 சாசனங்களில் 7 வெற்றிகரமாக இறுதி செய்யப்பட்டுள்ளன.
தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையும், தொழில் வர்த்தக அமைச்சகமும் புதிய தொழில் கொள்கையை உருவாக்கும் நடைமுறையை 2017 மே மாதத்தில் தொடங்கின. இதற்கு அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும். இது தற்போதுள்ள 27 ஆண்டு கால கொள்கைக்கு மாற்றாக இருக்கும். கடைசியாக தொழில் கொள்கை 1991-ல் அறிவிக்கப்பட்டது. புதிய தொழில் கொள்கை தேசிய தொழில் உற்பத்தி கொள்கையை உள்ளடக்கியதாக இருக்கும்.
******
(Release ID: 1556834)
Visitor Counter : 400