நித்தி ஆயோக்

75-வது சுதந்திர தினவிழாக்காலத்தில் புதிய இந்தியாவுக்கான செயல்திட்டத்தை நித்தி ஆயோக் வெளியிட்டுள்ளது.

Posted On: 19 DEC 2018 2:06PM by PIB Chennai

2022 – 2023-க்கு தெளிவான நோக்கங்களை விவரிக்கும்  புதிய இந்தியாவுக்கான  விரிவடைந்த தேசிய செயல்திட்டத்தை நித்தி ஆயோக் இன்று  (19.12.2018) வெளியிட்டது.

 

“75-வது சுதந்திர தினவிழாக்காலத்தில்  புதிய இந்தியாவுக்கான   செயல்திட்டம்இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜேட்லியால் வெளியிடப்பட்டது. நித்தி ஆயோக் துணைத் தலைவர்  டாக்டர் ராஜீவ் குமார், உறுப்பினர்கள் டாக்டர் ரமேஷ் சந்த், டாக்டர் வி கே சரஸ்வத், தலைமை நிர்வாக அதிகாரி திரு.அமிதாப் காந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

2020 வாக்கில் புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் விடுத்த அழைப்பிலிருந்து ஆர்வத்தையும், வழிகாட்டுதலையும் பெற்றுக் கொண்டு இந்த செயல்திட்ட ஆவணத்தை உருவாக்குவதற்கான  பயணத்தை ஓராண்டுக்கு மேலாக நித்தி ஆயோக் மேற்கொண்டது.

கொள்கை உருவாக்கம் மற்றும் அமலாக்கத்திற்குத் தேவைப்படும் புதிய கண்டுப்பிடிப்பு, தொழில்நுட்பம், தொழில் நிறுவனங்கள், திறமையான நிர்வாகம் ஆகியவற்றுக்கான நித்தி ஆயோக்கின் முயற்சிதான் “75-வது சுதந்திர தினவிழாக்காலத்தில் புதிய இந்தியாவுக்கான   செயல்திட்டம்ஆகும்இது விவாதத்தை ஊக்குவிக்கும். நமது கொள்கை அணுகுமுறையை மேலும் மெருகூட்ட

கருத்துக்களை வரவேற்கும்பொதுமக்களின் பங்கேற்பு இல்லாமல், பொருளாதார மாற்றம் ஏற்படாது என்று நாம் நம்புகிறோம். வளர்ச்சி என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்என்று  பிரதமர் தமது முன்னுரையில் கூறியிருக்கிறார்.

    இந்த செயல்திட்டத்தின் தயாரிப்பில்  பங்கேற்பு அணுகுமுறையை  நித்தி ஆயோக் மிக அதிகமாக  பின்பற்றியுள்ளது. வணிகம் செய்வோர், விஞ்ஞானிகள் உள்ளிட்ட கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட மூன்று குழுக்களுடனும் நித்தி ஆயோக் ஆழமான விவாதங்களை நடத்தியது.

   இதைத் தொடர்ந்து துணைத்தலைவர் நிலையில், விஞ்ஞானிகள் புதிய கண்டுப்பிடிப்பாளர்கள், விவசாயிகள், மக்கள் சமூக அமைப்புகள், சிந்தனையாளர்கள், தொழிலாளர் பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், தொழில்துறை பிரதிநிதிகள் உள்ளிட்ட 7 துறைகளின் முக்கியமான நபர்களைக் கொண்ட குழுவுடன், கலந்தாலோசனை நடைபெற்றது.

    ஒவ்வொரு அத்தியாயத்தின் நகலும், ஆலோசனை மற்றும் கருத்துக்களுக்காக மத்திய அமைச்சகங்களுக்கு சுற்றுக்கு விடப்பட்டது. நகல் ஆவணம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டு அவற்றிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் அதில் இணைக்கப்பட்டன. இந்த ஆவணத்தைத் தயாரிக்கும் காலத்தில் மத்திய, மாநில அரசுகள்  மற்றும் மாவட்ட நிலையிலான நிர்வாக அமைப்புகள், 550-க்கும் அதிகமான நிபுணர்கள் என  மொத்தம் 800 பேரிடம் கலந்தாலோசனை செய்யப்பட்டது.  

2022-ல் புதிய இந்தியாவை உருவாக்குவது 2030-க்குள் இந்திய பொருளாதாரத்தை ஐந்து ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முன்னேற்றுவது என்ற இலக்குகளை எட்ட தனியார் முதலீட்டாளர்களும் மற்றவர்களும் முழுமையான பங்களிப்பு செய்து கொள்கைச் சூழலை மேலும் மேம்படுத்த இந்த செயல்திட்ட ஆவணம் மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த ஆவணத்தில் உள்ள 41 பகுதிகள் இயக்குவோர், அடிப்படைக் கட்டமைப்பு, அனைவரையும் உள்ளடக்குதல், நிர்வாகம் என நான்கு பிரிவுகளின் கீழ், ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இயக்குவோர் பற்றிய முதல் பிரிவு வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு, விவசாயிகள் வருவாயை இருமடங்காக்குதல், அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுப்பிடிப்புகளுக்கான சூழலை மேம்படுத்துதல், ஃபின்டெக், சுற்றுலா போன்ற துறைகளை மேம்படுத்துதல், ஆகியவற்றின் பொருளாதார செயல்பாடுகளுக்கான  கருவிகளில் கவனம் செலுத்துகிறது.

இந்தப் பிரிவின் சில பரிந்துரைகள்.

  • 2018-23 காலத்தில் சராசரியாக  ஜிடிபி வளர்ச்சி விகிதத்தைசதவீத  அளவிற்கு  உயர்த்த சீரான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது. இது 2017-18-ல் 2.7 ட்ரில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 2022-23 வாக்கில் சுமார் நான்கு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு  பொருளாதாரத்தை    உயர்த்தும். நிர்ணயிக்கப்பட்ட மொத்த மூலதன உருவாகத்தை 2022-க்குள் தற்போதுள்ள 29 சதவீதத்திலிருந்து  36 சதவீதமாக உயர்த்துவதற்கு மூலதன விகிதத்தை அதிகரித்தல்.
  • வேளாண் துறையில் தேசிய வேளாண் சந்தைகளை விரிவாக்குவது, வேளாண் உற்பத்தி சந்தைக்குழுச் சட்டத்தை வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடைகள் சந்தைச் சட்டமாக மாற்றியமைப்பது ஆகியவற்றின் மூலம் விவசாயிகளைவிவசாயத் தொழில் முனைவோராகமாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிப்பது.
  • செலவுகளைக் குறைத்தல், நிலத்தின் தரத்தை மேம்படுத்துதல், விவசாயிகளின் வருவாயை அதிகரித்தல், ஆகியவற்றுக்கு இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பது. நிலத்தின் சுற்றுச்சூழல் தன்மையை  மீண்டும் நிலைநிறுத்த பரிசோதிக்கப்பட்ட முறையாக இது உருவாகியுள்ளது.
  • அதிகபட்ச வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும்தொழிலாளர் சட்டங்கள் முழுமையாக முறைப்படுத்தப்படுவதையும் ஊதிய உயர்வு மற்றும் தொழிற்பயிற்சிகளை உருவாக்குவதற்குப் பெருமுயற்சி செய்வதையும் உத்தரவாதப்படுத்துதல்.
  • கனிம வளங்களைக் கண்டுபிடிக்க மற்றும் உரிமம் தரும் கொள்கையைத் திருத்தியமைக்கஇந்தியாவில் கண்டுப்பிடிப்புஎன்ற இயக்கத்தைத் தொடங்குதல்

இந்திய வணிகத்தின்  போட்டித்தன்மையை விரிவாக்குவதற்கும் குடிமக்கள், வாழ்க்கையை எளிதாக நடத்துவதை உறுதிப்படுத்துவதற்குமான வளர்ச்சியின்  அடித்தளங்கள் பற்றி  இரண்டாவது பிரிவான  உள்கட்டமைப்பு கூறுகிறது.

இந்தப் பிரிவில் மிக முக்கியமான பரிந்துரைகள்

  • ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள ரயில் மேம்பாட்டு ஆணையம் (ஆர்.டி..) அமைக்கப்படுவதை விரைவுபடுத்துதல். ரயில்வேக்கு ஒருங்கிணைக்கப்பட்ட, வெளிப்படையான செயலூக்கம் உள்ள விலை நிர்ணய முடிவுகளை எடுக்க ஆர்.டி.. ஆலோசனை கூறும்.
  • கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் மூலம், சரக்குகள் போக்குவரத்தின் பங்களிப்பை இருமடங்காக்குதல். முழுமையாக அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கப்படும் வரைஆரம்பகாலத்தில் சாத்தியக்கூறுக்கான நிதிஉதவி வழங்குதல், பலவகையான போக்குவரத்தை ஒருங்கிணைக்கவும், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட போக்குவரத்தை மேம்படுத்தவும், தகவல் தொழில்நுட்ப முறையிலான தளத்தை உருவாக்குதல்,.
  • 2019-ல் பாரத் நெட் திட்டம் பூர்த்தியடைந்தவுடன், 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளும், டிஜிட்டல் வழியாக இணைக்கப்படும். 2022-23-க்குள் மாநிலம், மாவட்டம், கிராம ஊராட்சி நிலையில்,அரசின் அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் முறையில் வழங்க திட்டம்.

இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் திறன்களை மேம்படுத்துவது 3-வது பிரிவான அனைவரையும் உள்ளடக்கிய என்பதன் உடனடிப் பணியாகும். இந்தப் பிரிவில் சுகாதாரம், கல்வி, மக்கள் தொகையில் பாரம்பரியமாக விளிம்பு நிலையில் உள்ளவர்களைப் பிரதான நீரோட்டத்திற்குக் கொண்டுவருதல், ஆகியவை மூன்று முக்கிய அம்சங்களாகும்.

இந்தப் பிரிவில் சில முக்கிய பரிந்துரைகள்

  • நாடு முழுவதும் 1,50,000 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் நிறுவுதல் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தை தொடங்குதல் உட்பட வெற்றிகரமான ஆயுஷ்மான் பாரத் திட்ட அமலாக்கம்.
  • மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய நிலையில், பொது சுகாதாரத்திற்கு கவனக்குவிப்பை உருவாக்குதல், ஒருங்கிணைந்த மருத்துவ பாடத்திட்டத்தை வகுத்தல்.
  • 2020-க்குள் குறைந்தபட்சம் 10,000 அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களை  நிறுவுவதன் மூலம்  புதிய கண்டுபிடிப்புகளுக்கான சூழலை உருவாக்குவது உட்பட பள்ளிக்கல்வி முறை மற்றும் திறன்களின்  தரத்தை மேம்படுத்துதல்.
  • ஒவ்வொரு குழந்தையின் கல்வித்திறனைக் கண்டறிவதற்காக  மின்னணு முறையிலான தேசிய கல்விப் பதிவேட்டை உருவாக்குதல்.
  • கிராமப்பகுதிகளில் ஏற்கனவே செய்யப்பட்டது போல் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு நகரப்பகுதிகளில் குறைந்த செலவில் வீட்டுவசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மேலும், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சமபங்கு உறுதி செய்யப்படும்.

4-வது பிரிவான நிர்வாகம் என்பது நிர்வாகக் கட்டமைப்பை எவ்வாறு முறைப்படுத்துவது, சிறந்த பயன்களைத் தரும் வகையில், நடைமுறைகளை உருவாக்குவது ஆகியவை பற்றியதாகும்.

இந்தப் பிரிவில் சில முக்கியமான பரிந்துரைகள்.

  • மாறுபட்ட சூழலில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருளாதாரத்தில் அதிகரித்து வரும் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப சீர்த்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு முன்னோட்டமாக இரண்டாவது நிர்வாக சீர்த்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகளை அமலாக்குவது.
  • தீர்ப்பாய அமைப்புகளை தரப்படுத்துதல், நீதிமன்ற தலையீட்டுக்கு அவசியம் இல்லாத வகையில் குறைந்த செலவிலும்  விரைவாகவும், தீர்ப்பாய நடைமுறைகளை மேற்கொள்ளுவதற்கு தீர்ப்பாய நடுவர்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்தல்இதற்கு வசதியாக இந்திய தீர்ப்பாய கவுன்சில் என்ற புதிய சுயேச்சையான அமைப்பை உருவாக்குதல்.
  • நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீர்வு காணுதல்முறையான  நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து பணிச்சுமையின் பகுதியை மாற்றியமைத்தல்.
  • கழிவுப் பொருட்களிலிருந்து செல்வத்தை உருவாக்கும் நோக்குடன்  குப்பைக் கிடங்குகள், பிளாஸ்டிக் கழிவுகள், நகர்ப்புறக் கழிவுகள் ஆகியவற்றைக்  கையாளும்  முன்முயற்சிகளுக்காகத் தூய்மை இந்தியா இயக்கத்தின் நோக்கத்தை விரிவுப்படுத்துவது.

இந்த செயல்திட்டத்தின் முழு விவரங்களை http://niti.gov.in/the-strategy-for-new-india  என்ற இணையதளத்தில் காணலாம்

 ----------



(Release ID: 1556689) Visitor Counter : 701