பிரதமர் அலுவலகம்

நாடு முழுவதும் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் வீடியோ இணைப்பு வாயிலாக பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:

Posted On: 12 JUL 2018 5:20PM by PIB Chennai

நமஸ்தே (வாழ்த்துக்கள்).

தொலைவிலுள்ள கிராமங்களிலிருந்து என் தாய்மார்களும் சகோதரிகளும் இன்று என்னை ஆசீர்வதிப்பதற்காக பெரிய எண்ணிக்கையிலேயே ஒன்று திரண்டிருக்கிறார்கள். அத்தகைய நல்ல அதிர்ஷ்டத்தை பெற்ற பிறகு, உழைப்பதற்கான ஆற்றலும் தைரியமும் பெறவாதவர்கள் எவரும் இருக்க முடியுமா?

உங்களின் அன்பும், பாசமும் இந்த நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்றபுதிய பலத்தை எனக்கு எப்போதும் கொடுக்கிறது. நீங்கள் வாக்குறுதிகளில் பணக்காரர்களாகவும், தொழில்முனைவோருக்கு அர்பணிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறீர்கள். ஒரு குழுவாக எப்படி வேலை செய்வது, கூட்டு முயற்சியை எப்படி உருவாக்குவது என்பதை நீங்கள் அறிவீர்கள். குழுவின் உத்வேகம் என்றால் என்ன, வேலையை எப்படி பகிர்ந்து கொள்வது, இணைந்து பணியாற்றுவது குறித்து உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுக்கு கூட தெரியாத விஷயங்களை, பெரும்பாலும் படிப்பதற்கு வாய்ப்பே கிடைக்காத எனது இந்திய ஏழை தாய்மார்கள், சகோதரிகள் அறிவார்கள் என நம்புகிறேன்.

பெண்கள் அதிகாரம் பற்றி பேசுகையில், மிக முக்கியமான விஷயம், அவர்களின் பலம், தகுதி மற்றும் திறமைகளுக்கு அங்கீகாரம் பெற வேண்டும் என்பதுதான். ஒரு பெண்ணுக்கு எதையும் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்குள்ளேயே நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் வாய்ப்பு கிடைக்கும் அந்த நாளில், அவர்கள் அதிசயங்கள் செய்வார்கள், அனைத்து தடைகளையும் அவர்கள் கடந்து செல்வார்கள். பெண்களின் சக்தியைப் பாருங்கள், அவர்கள் கையாளாதவை என்று எதுவும் இல்லை, அவர்களின் நேர மேலாண்மை என்பது எவ்வளவு கச்சிதமானது, சமூக மற்றும் கிராம வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் எதுவாக இருந்தாலும் அதில் மாற்றத்தை கொண்டு வருவதற்காக காலை முதல் இரவு வரை தொடர்ந்து வேலை செய்கிறார்கள். நமது நாட்டின் பெண்கள் திறமையானவர்கள், எதையும் செய்வதற்கான சக்தி அவர்களிடம் உண்டு, போராடுவதற்கான தைரியத்தை பெற்றவர்கள் அவர்கள். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் பண ரீதியாக சுய சார்புள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு பெண் பண ரீதியாக சுய சார்பை அடைந்து விட்டால், தன்னம்பிக்கையுடன் செயல்படுவாள். எந்த விஷயத்தை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என தனது குழந்தைகளுக்கு அவளால் வழிகாட்ட முடியும். அவள் தனது கணவரிடம் கூட, இந்த விஷயத்தை செய்யுங்கள், இதை செய்யாதீர்கள் என்று கூற முடியும். அதனால் தான் பெண்களின் நிதி சுதந்திரமானது, முடிவெடுப்பதில் அவர்களின் பங்களிப்பை உயர்த்துவதற்கான வழியை வகுக்கிறது.

பெண்களின் நிதி அதிகாரங்கள் அதிகரித்தால், அது சமூக தீமைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பெண்கள் பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும்போது, சமூகத் தீமைகளில் தாங்களே பாதிக்கப்பட்டாலும் அதை சகித்துக் கொண்டு போவதற்கு பதிலாக, சமூக தீமைகளை எதிர்த்து போரிட தயாராவார்கள். இன்று, நீங்கள் எந்தத் துறையை வேண்டுமானாலும் பாருங்கள், அந்தப் பிரிவுகளில் பெண்கள் தான் அதிக எண்ணிக்கையில் வேலை செய்கிறார்கள். நம் தாய்மார்களும் சகோதரிகளும் இல்லாத நமது கால்நடை வளர்ப்புத் துறையை எவரும் கற்பனை செய்து பார்க்க முடியுமா? நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பங்களிப்பு இல்லாமல் விவசாயத்துறையில் வேலை செய்ய முடியும் என்று எவரும் கற்பனை செய்து பார்க்க முடியுமா? இந்த விஷயங்களை மிகக் குறைவான மக்களே அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் கிராமங்களுக்குச் சென்று பார்த்தால், விவசாயம் செய்வதில் நமது தாய்மார்களும் சகோதரிகளும் எவ்வளவு பெரிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரு விதத்தில், கால்நடை வளர்ப்பு என்பது பெண்களையே 100 சதவீதம் நம்பி உள்ளது. இன்று நம் நாட்டில் பால் தயாரிக்கப்படுவதில், நமது தாய்மார்களும் சகோதரிகளும்தான் 100 சதவீத பங்களிப்பை அளிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். கால்நடை வளர்ப்புக்கு கடின உழைப்பு தேவை, நமது தாய்மார்களும் சகோதரிகளும், குறிப்பாக கிராமப்புறங்களில் வசித்து வருபவர்கள், சுய உதவிக் குழுக்களிடமிருந்து உற்சாகத்தை பெற்று, நமது பல தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். இந்த முயற்சியின் நோக்கம் விரிவுபடுத்தப்பட வேண்டும், மேலும் அவர்களின் நன்மைகள் அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும்.

இந்திய அரசின் தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தை செயல்படுத்த, இளம் தொழில்முனைவோர் மற்றும் சுய உதவிக்குழு பணியாளர்கள் மூலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. முற்றிலும் படிக்காத பெண் ஒருவரை நான் பார்த்தேன், ஆனால் அவரால், சுய உதவிக்குழு என்ற வார்த்தையை புரிந்து கொள்ள முடிகிறது, அதை ஆங்கிலத்தில் கூட அவரால் உச்சரிக்க முடிகிறது. அந்த வார்த்தை மிகவும் பிரபலமாகி விட்டது, நான் அந்த வார்த்தையை இந்தி மொழியில் உச்சரித்தால் கூட ஆரவாரம் செய்கிறார். எனவே நான் சொல்வது என்னவென்றால், அந்த வார்த்தை அவ்வளவு பிரபலமாகி விட்டது.

நமது சுய உதவிக்குழுக்கள் பெண்களின் குறிப்பாக, ஏழை பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தன. இந்த குழுக்கள் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவர்களை மேம்படுத்துகின்றன. தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், தீனதயாள் அந்த்யோதயா யோஜனா, 2.5 லட்சம் கிராமங்களில் உள்ள கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களை சென்றடைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை வழங்குவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அனைத்து கிராமங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான பெண்களிடம் கொண்டு சென்று, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திய அனைத்து மாநிலங்களுக்கும் அதன் அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மாவட்ட அளவில் பணிபுரிந்த நமது அதிகாரிகள், அவர்களின் மாவட்டங்களில் செய்த இத்தகைய விஷயங்கள், அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான கதைகள் போன்றவற்றை ஒன்று அல்லது இரண்டு புத்தகமாக எழுத வேண்டுமென நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அது ஒரு அரசாங்க ஆவணமாக இருக்கக்கூடாது, அப்படி அமைந்தால் அந்த அதிகாரியும் அவரது குடும்பத்தினரும் இத்தகைய நல்லதொரு பணியை செய்ததற்காக மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

இதுவரை 45 லட்சம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதில் 5 கோடிக்கும் மேற்பட்ட பெண்களும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என்பதை அறியும் போது, உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். அந்த குடும்பத்தில் கூடுதலாக ஒரு உறுப்பினரும் சம்பாதித்து வருகிறார், இது அந்த குடும்பத்திற்கான மேலும் ஒரு வருவாய் ஆதாரத்தை உருவாக்கி இருக்கிறது. நான் உங்களுடன் இன்னும் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எங்கள் அரசாங்கம் அமைவதற்கு முன்பாக, 2011-14 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தில் முன்னேற்றத்தை நீங்கள் பார்த்தால், 5 லட்சம் சுய உதவி குழுக்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு, வெறும் 50-52 லட்சம் குடும்பங்கள் மட்டுமே அந்த சுய உதவிக் குழுக்களுடன் இணைக்கப்பட்டிருந்தன. 2014 ஆம் ஆண்டு முதல் 2018 வரையிலான காலப்பகுதியில், எங்கள் அரசாங்கம் அமைந்த பிறகு இந்த விஷயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதுடன், இது முக்கியமானதாகக் கருதப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் 20 லட்சத்திற்கும் அதிகமான புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, 2.25 கோடி குடும்பங்கள் அவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அப்படியென்றால், சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து, அவற்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான குடும்பங்கள் பயனடைந்துள்ளன என்பதே அர்த்தம். இது, பணியாற்றுவதில் இந்த அரசாங்கத்தின் வேகத்தையும், பொது நலனுக்காக எத்தகைய உறுதிப்பாடு கொண்டிருப்பதையும் காட்டுகிறது. மேலும், தாய்மார்களின் அதிகாரத்திற்காக நாங்கள் எவ்விதமான உறுதிப்பாட்டை கொண்டிருக்கிறோம் என்பதையும் இது காட்டுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஏழை பெண்கள் குழுக்களுக்கு பயிற்சி முதல் நிதி உதவி வரையிலும், சந்தைப்படுத்துதல் முதல் திறன் மேம்பாடு வரையிலும் அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.

முன்பே நான் சொன்னது போல், இன்று சுய உதவிக்குழுக்களில் நாட்டின் பல்வேறு பிராந்தியத்தில் இருந்து உறுப்பினர்களை நம்மில் கொண்டுள்ளோம். நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்றுள்ள அனைத்து தாய்மார்களையும் சகோதரிகளையும் நான் மீண்டும் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உங்களின் குடும்பங்களில் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் யார்? மற்றும் குறைந்தபட்ச செலவில் நூதானமான முறையில் இப்பணியை செய்து கொண்டிருப்பவர்கள், அவர்கள் முறையான கல்வி பெற்றவர்களாகவும், பெறாதவர்களாகவும் இருந்தாலும் கூட, அவர்களால் வெற்றிகரமாக இதை செய்ய முடிகிறது.

இந்த மக்களது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நம்மால் காண முடிகிறது.  இத்தகைய விஷயங்களில் சுய உதவிக் குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கப்பதை நேரடி எடுத்துக்காட்டுகள் மூலம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சுய உதவி குழு நெட்வொர்க் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது பல்வேறு துறைகளையும் வெவ்வேறு வர்த்தகங்களையும் இணைக்கிறது. அவர்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும், பொருளாதார உதவிகளையும், தேவையான பயிற்சியினையும் அவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது.

சுய உதவிக் குழுக்களின் உதவியுடன், விவசாய துறைக்காகவும், மகளிர் விவசாயிகளுக்காகவும் ஒரு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு, அதன் கீழ் 33 லட்சம் பெண் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, கிராமப்புற அளவில், 24*7 அடிப்படையில் எந்த ஒரு நிமிடத்திலும் ஆதரவு வழங்கக்கூடிய 25,000 க்கும் அதிகமான சமூக வாழ்வாதார வள நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்று, எந்தவொரு துறையிலும், குறிப்பாக வேளாண்மையுடன் சம்பந்தப்பட்ட துறைகளிலும், மதிப்பு கூட்டல், விலையில் கூட்டல் மிக முக்கியமானதாகி உள்ளது. இன்று நம் நாட்டின் விவசாயிகள், மதிப்பு கூட்டலின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதன் நன்மைகளை அறுவடை செய்கிறார்கள். சில மாநிலங்களில், இந்த மதிப்பு சங்கிலி அணுகுமுறை சோளம் மற்றும் மாம்பழ விவசாயம், தோட்டக்கலை மற்றும் பால் வளத் துறை உள்ளிட்ட குறிப்பிட்ட சில பயிர்களுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விஷயங்களுக்கு, இரண்டு லட்சத்திற்கும் மேலான சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஆதரவைப் பெறுகின்றனர்.

பீகார், பாடலிபுத்ராவில் இருந்து அம்ரிதா தேவி அவர்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அங்கு ஏழை பெண்களின் குடும்பங்களின் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என்பதை அறிந்துள்ளோம். பீகாரில் இருந்து இன்னும் சில எடுத்துக்காட்டுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2.5 லட்சத்திற்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அதிகப்படியான பயிற்சியினை பெற்றுக் கொண்டு, அதன் மூலம் அரிசி விவசாயத்தை செய்து வருகின்றனர். இதேபோல், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் புதிய முறைகளில் காய்கறிகளை உற்பத்தி செய்கிறார்கள். இது தவிர, பீகாரில் அரக்கு வேலைப்பாடுடன் கூடிய வளையல் (மெழுகு நிரப்பப்பட்டவை) உற்பத்தி மையங்கள் கொத்து கொத்தாக நிறுவப்படுகின்றன. உற்பத்தியாளர்கள் குழு ஒன்றும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. பீகாரின் வளையல்கள் நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிரசித்தி பெற்றுள்ளன என்பது பெருமைக்குரிய விஷயமாகும். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மீனா மாஞ்சி, சிறிது காலத்திற்கு முன்னர், தனது வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு செங்கல் எவ்வாறு உதவியது என்பதைக் கூறினார். அங்கு, செங்கல் உற்பத்திக்காக பல யூனிட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2,000 சுய உதவிக் குழுக்கள் அதனுடன் இணைந்துள்ளன. அவர்களின் வருடாந்திர இலாபமானது கோடிக்கணக்கான ரூபாயை எட்டி விட்டது என்பதை நாம் அறியும் போது, அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை அளிக்கும். இதேபோல் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் பெகன் பஜார்கள் நிறுவப்பட்டுள்ளன. இங்கு, சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் 200 வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

சத்தீஸ்கர் தொடர்பான தனிப்பட்ட அனுபவம் ஒன்றையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு நான் சத்தீஸ்கர் சென்று பார்வையிட்டேன். அங்கு ஒரு மின்-ரிக்சாவில் சவாரி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த மின்-ரிக்ஷா ஒரு பெண்ணால் இயக்கப்பட்டது. சத்தீஸ்கரின் அந்த பகுதி, நக்சல் தீவிரவாதத்தால் முன்னர் பாதிக்கப்பட்டிருந்தது. அங்கு எந்த போக்குவரத்து வசதியும் இல்லை. இருப்பினும், அரசாங்கம் இந்த சிக்கலை தீர்க்க முயன்றது. அந்த முயற்சியின் விளைவாக தற்போது பல மின்-ரிக்ஷாக்கள் இயக்கப்படுகின்றன. நாட்டின் பல்வேறு கிராமப்புறங்களிலும் தொலைதூர பகுதிகளிலும் போக்குவரத்து வசதிகள் இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ், வாகனங்கள் வாங்குவதற்கு இப்பகுதி கிராமப்புற மக்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இது போக்குவரத்தை எளிதாக்குவது மட்டுமின்றி கிராமப்புற குடும்பங்களுக்கு வருமானம் தரும் நல்ல ஆதாரமாக மாறியுள்ளது.

பாருங்கள், இத்திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்றதன் மூலம் உதவிகளை எவ்வாறு பெற்றார்கள் என்பது பற்றி ரேவதியிடமிருந்தும், வந்தனாவிடமிருந்தும் நாம் பல விஷயங்களை கேள்விப்பட்டோம்,. பயிற்சியின் மூலம் எத்தகைய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பது அவர்களே ஓர் எடுத்துக்காட்டு.

தீன தயாள் அந்த்யோதயா திட்டத்தின் கீழ், கிராமப்புற இளைஞர்களிடையே திறன் மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இளைஞர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது, இதனால் இப்பகுதி இளைஞர்கள் தங்களின் நம்பிக்கை மற்றும் அபிலாஷைகளின்படி முன்னேற முடியும். மேலும் மக்கள் வாழ்வில் இது நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருகிறது. நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது, இதனால் இளைஞர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே பயிற்சி பெற முடியும். இந்த மையங்களில், கிராமப்புற இளைஞர்களுக்கு பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மே மாதம் வரை, கிட்டத்தட்ட 600 கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நாட்டில் பணியாற்றி வருகின்றன. இந்த மையங்கள் மூலம் கிட்டத்தட்ட 28 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 19-20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இருந்து சானிடரி நாப்கின்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சுதா பாகல் அவர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டோம். மத்தியப் பிரதேசத்தின் 35 மாவட்டங்களில் சானிடரி பேடுகள் உற்பத்தி செய்யும் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இப்பணியில் 5,500 க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்திலிருந்து இன்னொரு உதாரணத்தை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கிட்டத்தட்ட 500 அஜீவிகா ப்ரஷ் கடைகள் மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ளன, மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு டன் மசாலா பொருட்கள் இந்த கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு வகையில், அஜீவிகா அங்கு ஒரு நிலையக் குறியீடு ஆனது. நாங்கள் ரேகா அவர்களிடம் பேசிய போது, சுய உதவிக் குழுக்கள் மூலமாக எவ்வாறு வங்கித் துறையில் சோதனை முயற்சி நடத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

கிராமப்புற அல்லது தொலைதூர பகுதிகளில், வங்கி மற்றும் நிதி சேவைகள் வழங்குவதற்காக, சுய உதவி குழுக்களின் உறுப்பினர்கள் வங்கி மித்ரா மற்றும் வங்கி சகி என நியமிக்கப்பட்டனர். இன்று, நாட்டிலுள்ள கிட்டத்தட்ட 2,000 சுய உதவிக் குழுக்கள் வங்கி மித்ரா அல்லது வங்கி சகி எனப் பணியாற்றுகின்றன. அவர்கள் மூலம் ரூ.350 கோடி பரிவர்த்தனை கடந்து விட்டது.

பாருங்கள்! வேலை எப்படி சமூக வள நபராக ஆக்குகிறது? பல பெண்கள் ஏற்கெனவே நீண்ட காலமாக இந்த விஷயத்தில் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர்கள் தாங்களாகவே இந்த விஷயத்தைச் செய்கிறார்கள், மேலும் சமூக வள நபர்களாக புதிய கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மற்ற பெண்களையும் ஊக்குவிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் 2 லட்சம் சமூக வள நபர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டு, இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

தீன தயாள் உபாத்யாயா யோஜனா திட்டத்தின் கீழ், அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் ஏற்பாடு செய்வதற்கான சலுகை உள்ளது. மக்கள் தங்கள் வியாபாரத்தை விரிவாக்க வங்கி கடன்கள் உதவுகின்றன. அதுமட்டுமல்ல, கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டுமெனவும் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் அளித்த கடன்களை திருப்பிச் செலுத்துவதில் எந்த தாமதமும் ஏற்பட்டதில்லை என்பதை நான் பார்க்கிறேன். கிட்டத்தட்ட 99% கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. இதுதான் நமது ஏழை குடும்பங்களின் மதிப்புகள். இதுவே எங்கள் ஏழை குடும்பங்களின் வளமையின் வலிமை.

லட்சுமி அவர்களும், அவர்களுடன் சேர்ந்த 30 பெண்களும் சேர்ந்து, அப்பள விற்பனையின் மூலம் எவ்வாறு லாபத்தை ஈட்டுகிறார்கள் என்பதை நாங்கள் கேள்விப்பட்டேன். சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் சரியான விலைக்கு கிடைக்கும் என்பதில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என இன்று உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்தத் தயாரிப்புகளுக்கு சரியான முறையில் சந்தையை அமைத்துத் தர, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆண்டுதோறும் இரண்டு சாரஸ் கண்காட்சிகளை ஏற்பாடு செய்ய இந்திய அரசு அனுமதி வழங்கி வருகிறது. இது நேர்மறையான முடிவுகளை வழங்கும். சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது, அதன் மூலம் அவர்களின் வருமானம் பெருக வழிவகுக்கிறது. மேலும், சுய உதவி குழுக்கள் GEM அரசாங்க மின்-சந்தை மூலம் நன்மைகள் பெறுகின்றன. வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்காக, டிஜிட்டல் முறையில் அரசாங்கம் கொள்முதல் செய்வதை ஊக்குவிக்குகிறது. இப்போது அரசு டெண்டர் இந்த செயல்முறை மூலம் வழங்கப்படுகிறது. மேலும் பொது கொள்முதல்களும் இந்த முறையிலேயே செய்யப்படுகின்றன.

எனவே, சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த எனது சகோதரிகேள, அரசாங்க இணையதளத்தில் உங்களின் அனைத்துத் தயாரிப்புகளையும் பதிவு செய்து கொள்ள வேண்டுமென உங்களிடம் வலியுறுத்துகிறேன். இதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏதாவது தேவைப்பட்டால் அந்தப் பொருட்கள் உங்களிடம் கிடைக்கும் என்பதை அறிய முடியும். பாருங்கள்! நீங்கள் ஆடுகளை மேய்த்து, கம்பளி உண்டாக்கினால், நான் உங்களுக்கு ஒரு அறிவுரையை கொடுக்க விரும்புகிறேன். நான் குஜராத்தில் இருந்தபோது ஒரு சிறிய சோதனை நடத்தினேன். செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வளர்க்கும் மக்களுக்கு ஒரு டிரிம்மர் கருவியை நான் கொடுத்ததுதான் அந்த பரிசோதனை. முடிதிருத்தும் தொழிலாளிகள் தாடியை டிரிம் செய்ய பயன்படுத்தும் அதே போன்ற கருவியை வழங்கினேன். ஆடு வளர்க்கும் ஒருவருக்கு டிரிம்மர் இயந்திரத்தை பரிசாக கொடுத்து விட்டு, செம்மறி மற்றும் வெள்ளாட்டு ரோமங்களை வெட்ட இனி கத்திரிக்கோலுக்குப் பதிலாக டிரிம்மர் இயந்திரங்களை பயன்படுத்துமாறு சொன்னேன். டிரிம்மர் இயந்திரங்களை பயன்படுத்தினால், செம்மறி மற்றும் வெள்ளாட்டின் நீளமான ரோமங்களை பெற முடியும், இது கத்திரிகோலை பயன்படுத்தினால் சாத்தியமில்லை என அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

டிரிம்மர் பயன்படுத்தியதன் விளைவாக, அவர்களின் வேலைப்பளு குறைந்ததுடன், ஆட்டிற்கு ஏற்படும் வலியையும் குறைத்தது என்பதை நீங்கள் அறியும் போது ஆச்சரியப்படுவீர்கள். நீண்ட போக்குடைய கம்பளிகளுக்காக அவர்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கத் தொடங்கியது. உங்கள் குழுவில் சகோதரிகளுக்கு இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்தால், கதகதப்பான மற்றும் கம்பளி ஆடைகள் தொடர்பான பல்வேறு வேலைகள் உங்களுக்கு கிடைக்கப் பெறும். நீண்ட நீளம் கொண்ட கம்பளிகளை நீங்கள் வைத்திருந்தால், உங்களுக்கு நிறைய வருமானம் கிடைக்கும். இந்த திசையில் நீங்கள் சிந்திக்க வேண்டும். கால்நடைகளில் இருந்து பால் கறந்து விற்பதன் மூலம் நீங்கள் நல்ல வருவாயை பெற முடியும். இது ஒரு சிறந்த தொழில் யுக்தி என்பதை முன்பு குப்வாடாவில் பார்த்திருக்கிறேன்.

உங்கள் கதைகள் மற்றும் உங்கள் அனுபவங்களை நான் புரிந்து கொள்கிறேன். அவர்கள் சொல்வதை யார் கேட்டாலும், திறந்த மனதுடன் செவிகொடுத்து நேர்மறையான மனநிலையுடன் அவர்கள் சொல்வதை கேட்டால், ஒவ்வொரு கதையிலும் மிகுந்த உற்சாகத்தை உண்டாகும் என்று நான் நம்புகிறேன். நம் நாட்டில் இந்த தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எந்த அளவுக்கு சக்தி உள்ளது? அவர்கள் வெறும் சிறிதளவு ஆதரவு மட்டுமே கிடைத்தால், அவர்களால் எப்படி அவர்களின் சுயமான உலகை உருவாக்க முடியும்? அவர்கள் தலைமைத்துவத்தை வழங்கிடவும், புதிய இந்தியாவிற்கான அடிக்கல் அமைப்பதில் கடினமாக உழைப்பதிலும், அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட முடியும்.

இந்த கதைகள் ஒவ்வொன்றும் புதியவற்றைச் செய்வதற்கான ஒரு வழி மற்றும் உற்சாகத்தை வழங்குகின்றன. விரக்தியை பரப்பும் மக்களின் பஞ்சம் இல்லை. தீமையை பரப்பும் மக்களின் பஞ்சம் இல்லை. ஆனால் நேர்மையின் பாதையை விட்டுவிடாதீர்கள். கடுமையாக உழைக்கிறவர்களை வணங்க வேண்டாம். நாம் நாட்டை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நமது சொந்த பலத்தில் முன்னேறவும், நமது சொந்த வாழ்க்கையை முன்னேற்றவும், நமது குடும்பங்களை முன்னெடுத்துச் செல்லவும், நமது குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்கும், கஷ்டங்களை எதிர்கொள்ளும் வாழ்க்கைக்கு வழிநடத்தும், இவை அனைத்தும் பலம் தருகின்றன. அனைவருக்கும் விரக்தியை எதிர்த்து போராட இது நாட்டின் பலம் ஆகும்.

இந்த கதைகள் ஒவ்வொரு பெண்ணுக்குள் ஒரு வழியையும், புதிதாக எதையாவது செய்ய வேண்டுமென்ற உத்வேகத்தையும் வழங்கும். இங்கு விரக்தியை பரப்பும் மக்களுக்கு யாருமில்லை. தீமையை பரப்பும் மக்களுக்கும் பஞ்சமில்லை. ஆனாலும், நேர்மையின் பாதையை தயவுசெய்து கைவிட்டு விடாதீர்கள். கடினமாக உழைப்பவர்களை பார்த்து வணங்குவதை நாம் ஒருபோதும் நிறுத்திக் கொள்ளக் கூடாது. நம் சொந்த பலத்தின் மூலம் நாட்டை முன்னோக்கி நாம் எடுத்துச் செல்ல வேண்டும். நம் சொந்த முயற்சியில் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். நம் குடும்பங்களை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். நம் குழந்தைகளுக்கு கல்வியை வழங்க வேண்டும். வேறுபாடுகளை கடந்து வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த விஷயங்கள் தான் விரக்திகளுக்கு எதிராக போராடும் வலுவை அனைவருக்கும் கொடுக்கும். இதுதான் நம் நாட்டின் பலமும் கூட.

நீங்கள் கூறியதை கவனித்த பிறகு எனக்குள் அதை நன்றாக உணர்ந்தேன். நீங்கள் கூறியவைகளில் இருந்து ஆற்றலையும், உத்வேகத்தையும் பெற்றேன். உங்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்ட இன்றைய இந்த நிகழ்ச்சியில், உங்களில் பலரும் சில விஷயங்களை சொல்ல விரும்பி இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்; எல்லோருக்கும் ஒரு கதை உண்டு; அனைவருக்கும் ஒரு அனுபவம் உண்டு; எல்லோரும் சிரமங்களை விட்டு வெளியேற ஒரு வழியை கண்டுபிடித்துள்ளனர். அது உங்கள் சொந்த சாதனை. இதுதான் உங்களின் கடின உழைப்பு மற்றும் தைரியம். இந்த எண்ணங்களுக்கான காரணம் உங்களை மட்டுமே சாரும், வேறு யாரையும் அல்ல. அதனால்தான் உங்களைக் காட்டிலும் சிறந்த உத்வேகம் அளிப்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

ஆனாலும், நிறையப் பேச வேண்டும்  என எண்ணி இருந்து, ஆனால் வாய்ப்பு கிடைக்காத அந்த சகோதரிகள், உங்கள் எண்ணங்களை என்னிடம் தெரிவிக்க விரும்புகிறேன். அந்த எண்ணங்களை நான் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பகிர்ந்து கொள்கிறேன், ஏனெனில் இதுபோன்ற எடுத்துக்காட்டுகளில் இருந்து நாடு உத்வேகம் பெறுகிறது.

சண்டையிடுகிறவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்வார்கள். ஆனால் வேலை செய்யும் மக்கள் உத்வேகம் பெறுவார்கள். இப்போது நாம் அந்த வேலையை முன்னோக்கி நகர்வோம். எனவே உங்களிடம் வலியுறுத்துகிறேன், மொபைல் ஃபோனைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தாலும், மொபைல் ஃபோன்களைப் பற்றி தெரிந்திருக்காவிட்டாலும், உங்கள் பகுதியில் ஒரு பொதுவான சேவை மையத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் நரேந்திர மோடி செயலியின் பயன்பாட்டைப் பார்த்திருப்பீர்கள், நீங்கள் அந்த மையங்களுக்குச் சென்று உங்கள் சுய உதவிக் குழுவின் புகைப்படத்தை கொடுங்கள். உங்கள் சுய உதவிக் குழுவில் உள்ள அந்த சகோதரிகள் வெற்றியை எவ்வாறு அடைந்தார்கள், எத்தகைய கஷ்டங்களை கடந்து வந்தார்கள், அவர்கள் செய்த நல்ல காரியங்கள் என்னென்ன  என்பது தொடர்பாக, அந்த செயலில் நீங்கள் உங்கள் சுய உதவிக் குழுக்களின் சகோதரிகளுடன் ஒரு நேர்காணலைப் பதிவு செய்யுங்கள். இந்த அனைத்து விஷயங்களையும் நீங்கள் அந்த செயலியில் பதிவேற்றுங்கள். அதன் மூலமாக, நான் அதை படித்துப் பார்ப்பேன். அந்த செயலில் நீங்கள் பதிவேற்றினால், அதை மற்றவர்களும் பார்ப்பார்கள். மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசுவதற்கான நேரம் கிடைக்கும்போது, சிலரின் கருத்துக்களை இந்த உலகத்துடன் பகிர்ந்து கொள்வேன்.

நீங்களாகவே அதை செய்து முடிக்கலாம். அதன் மூலம் உங்களைப் போன்ற கோடிக்கணக்கான சகோதரிகளுக்கு தைரியத்தை உங்களால் தர முடியம். தற்போது பொது சேவை மையங்கள் மிகவும் பிரபலமடைந்து விட்டன. நாட்டில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பொது சேவை மையங்கள் உள்ளன. இப்போது  நமது மகள்கள் பொது சேவை மையங்கள் நடத்தி வருகிறார்கள். அது போன்ற மையங்களுக்கு நீங்கள்  சென்று உங்களின் வெற்றிக் கதைகளை கட்டாயம் அனுப்ப வேண்டும். அதை இந்த ஒட்டுமொத்த நாடும், உலகம் முழுவதும் பார்க்கும். தொலைதூர மற்றும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் நமது சகோதரிகள் எத்தகைய சிறந்த வேலையை செய்து வருகிறார்கள் என்பதை மக்கள் பார்ப்பார்கள். இன்று உங்களை நான் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததை சிறப்பாக உணர்கிறேன். என்னை ஆசீர்வதிப்பதற்கு, நீங்கள் பெருந்திரளான மக்களாக உருவெடுத்திருக்கிறீர்கள். நான் உங்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்உங்களுக்கு பல பல வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி.


(Release ID: 1556685)
Read this release in: English , Marathi , Hindi , Assamese