பிரதமர் அலுவலகம்

காட்மாண்டுவில் பசுபதிநாத் தர்மசாலா தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் சுருக்கம்

Posted On: 31 AUG 2018 9:30PM by PIB Chennai

  மாண்புமிகு பிரதமர் ஒலி அவர்களே, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ரவீந்தர் பிரசாத் அதிகாரி அவர்களே,  பசுபதி பகுதி மேம்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் பிரதீப் தக்கல் அவர்களே,  மற்றும் இங்கே பங்கேற்றுள்ள பிரமுகர்களே, வெகு தூரத்தில் இருந்து வருகை தந்துள்ள போலே பாபாவின் பக்தர்களே , நேபாளத்தின் எனதன்பு சகோதர, சகோதரிகளே,

 

   பாபா விஸ்வநாத்தின் பூமியான காசியின் மைந்தனாகிய நான் பசுபதிநாத் அவர்களின் சன்னிதியில் உள்ள உங்களுக்கு இன்று வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நேபாள மொழியையும், குஜராத் மக்களையும், புரிந்துகொள்வது மிகவும் எளிது என்று சற்று நேரத்திற்கு முன்  பிரதமர் ஒலி அவர்கள் கூறினார்.

   எனதருமை சகோதர சகோதரிகளே, நான் காட்மாண்டுக்கு வரும் போதெல்லாம் நேபாள மக்களின் அன்பையும், ஆர்வத்தையும் ஆழமாக உணர்கிறேன். இது எனக்கானது மட்டுமல்ல, இதே அன்பும் ஆதரவும், இந்தியா மீதும், நேபாளத்திற்கு இருப்பதைக் காணமுடியும்.

   நான்கு ஆண்டுகளுக்கு முன் ஷ்ரவன மாதத்தின் கடைசி திங்கட்கிழமை பசுபதிநாதர் பாதத்தில் வழிபடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். சில மாதங்களுக்கு முன் நான் இங்கே வந்தபோது, பசுபதிநாத், முக்திநாத், ஜானகிதாம் ஆகிய முக்கியமான மூன்று புண்ணியத்தலங்களைப் பார்வையிடும் பேறு பெற்றேன்.   இன்று மீண்டும் பாபா பசுபதிநாதரின்  பாதத்தில் எனது பிரார்த்தனைகளை சமர்ப்பித்து பக்தியுடன் வழிபடும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இந்த உணர்வுகள் எனக்கானது மட்டுமல்ல, ஆன்மீக வாழ்க்கையையும், சமயச் சடங்குகளையும் மேற்கொண்டு இந்தியாவிலும் உலக அளவிலும் உள்ள லட்சோப லட்சம் சிவபெருமான் பக்தர்களுக்கும் உரியதாகும். இவர்கள்  தங்களின் வாழ் நாளில் ஒருமுறையாவது பசுபதிநாதரை தரிசிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள்.  சிவபெருமானுக்கும், சிவபெருமான் பக்தர்களுக்கும் இடையே உள்ள உறவு போல் இந்தியா – நேபாளம் இடையே உள்ள உறவு, நேரம், தூரம் அல்லது சிக்கலான தருணம், ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் மிகவும் வலுவாக உள்ளது.

    காட்மாண்டுவுக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இடைவெளி உள்ள போதும், பசுபதிநாதரின் கதைகள் தமிழ்நாட்டில் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, சொல்லப்பட்டு வருகின்றன.

 

और बाबा पशुपतिनाथ ने सुदूर दक्षिण भारत के अपने अनंत भक्तों को पीढ़ी-दर-पीढ़़ी सैकड़ों साल से गणेश और कार्तिक की तरह अपने आप इस मंदिर में स्थान दिया है। और इसलिए आज मेरे परम मित्र प्रधानमंत्री ओली जी के साथ मिलकर नेपाल-भारत मैत्री पशुपति धर्मशाला को विश्वभर के यात्रियों के लिए, टूरिस्टों के लिए, शिव भक्तों के लिए समर्पित करते हुए मेरी प्रसन्ता की कोई सीमा नहीं है। दुनियाभर से यहां आने वाले श्रद्धालुओं की सुविधा के लिए सवा सौ करोड़ भारतवासियों की तरफ से पशुपतिनाथ जी के चरणों में यह एक छोटी सी भेंट देने का सौभाग् मुझे मिला है।

சைவசமயக்குரவர்களின் தேவாரத்தில் பசுபதிநாதருக்கு முக்கியமான இடம் உள்ளது. தலைமுறை தலைமுறையாக பல நூற்றாண்டுகளாக தென்னிந்தியாவின் தொலைதூரத்தில் வாழ்கின்றவர்களுக்கு கணேஷ், கார்த்திகேயன் மீது பக்தி இருப்பது போல், பாபா பசுபதிநாதருக்கும் பக்திக்கான இடம் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள  சிவபக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும்  பயன்படும் வகையில், எனது சிறந்த நண்பர் பிரதமர் ஒலி அவர்களுடன்  இணைந்து நேபாளம்  - இந்தியா நட்புறவின் அடையாளமாக பசுபதி தர்மசாலாவை இன்று அர்ப்பணிப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். 125 கோடி இந்தியர்கள் சார்பாக  பசுபதிநாதரின் பாதங்களில் இந்த சிறிய காணிக்கையைச் செலுத்தும் வாய்ப்பினை அதிர்ஷ்டவசமாக  நான் பெற்றிருக்கிறேன்.

 

நண்பர்களே,  பசுபதிநாத், முக்திநாத், ஜானகிதாம் ஆகியவை நேபாளத்தின் பன்முகத்தன்மையை  ஒருங்கிணைக்கின்றன.   அதே சமயம், ஒவ்வொரு கணமும் இந்தியாவுடனான நேபாளத்தின் உறவுகளுக்கு இவை புதிய வலுவைத் தருகின்றன. பகவான் விஸ்வநாதரும், பசுபதிநாதரும் காசியையும், காட்டுமாண்டுவையும் இணைக்கின்றனர்.  நான்  சோமநாதர் பூமியிலிருந்து வருகிறேன். சோமாநாதரிலிருந்து விஸ்வநாதர் வரையும், விஸ்வநாதரிலிருந்து பசுபதிநாதர் வரையிலான  உறவைப் போல் அன்னை சீதாவும், பகவான் ராமரும், ஜனக்பூரோடு அயோத்தியாவை இணைக்கின்றனர்.  பகவான் ஜகந்நாதரும், முக்திநாதரும், பூரியையும், மஸ்தாங்கையும் இணைக்கின்றனர்.  அழகிய பாக்மதி பள்ளத்தாக்கில் பகவான் பசுபதிநாதர் வீற்றிருக்கிறார். இங்கே ஒரு பக்கத்தில் தவளகிரியும்,  அன்னபூர்னாவும் இருக்க, மறுபக்கத்தில் சாகர் மாதாவும், கஞ்சன்ஜங்காவும் இருக்கின்றன. உலகம் முழுவதிலுமிருந்து வருகின்ற சிவபிரானின் பக்தர்களுக்கு இது அழகிய, விசித்திரமான அனுபவத்தைத் தருகிறது. ஒரு வகையில், புனிதமான இந்த காட்மாண்டு பூமி, இந்து மதத்தையும். புத்த மதத்தையும் இணைக்கும் இடமாக உள்ளது.

 

     நேபாளம் – இந்தியா நட்புறவின் அடையாளமான பசுபதிநாத் தர்மசாலா என்பது ஒரு கட்டிடமோ அல்லது தங்குமிடமோ அல்லது ஓய்வெடுக்கும் இடமோ அல்ல. நட்புறவின்  தூணாகவும், பொருளாதார நடைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் எரிசக்தி மையமாகவும் மாறும் என்று நான் நம்புகிறேன்.  இந்த நம்பிக்கையோடு நேபாளப் பிரதமருக்கு மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

----------------------

 



(Release ID: 1556670) Visitor Counter : 193


Read this release in: English , Marathi