தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
2018 ஆண்டு இறுதி மீள்பார்வை: தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம்
Posted On:
13 DEC 2018 2:43PM by PIB Chennai
ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலை உத்தரவாதம், சம்பளத்துக்கு உத்தரவாதம் மற்றும் சமூக உத்தரவாதம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கடமைப்பட்டிருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை அமல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பைக் கொண்டு வருவதுடன், சமூகப் பாதுகாப்பு ஏற்படுத்தித் தந்து ஒவ்வொரு தொழிலாளிக்கும் கண்ணியத்தை உணர்த்தியது மற்றும் உருவாக்கியது, வாய்ப்புகளையும் வேலைகளின் தரத்தையும் மேம்படுத்தியது போன்ற முக்கியமான முன்முயற்சிகளை இந்த ஆண்டில் அமைச்சகம் மேற்கொண்டது.
I. தொழிலாளர் நலனில் முக்கிய சாதனைகள் :
தொழிலாளர் விதிகள்: தொழிலாளர் நலன் குறித்த இரண்டாவது தேசிய கமிஷன் பரிந்துரைகளின்படி (i) ஊதியங்கள்; (ii) தொழிற்சாலை உறவுகள்; (iii) சமூகப் பாதுகாப்பு & நலன்; மற்றும் (iv) பணிசார்ந்த பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல்கள் ஆகிய நான்கு தொழிலாளர் விதிகளை உருவாக்க இந்த அமைச்சகம் நடவடிக்கைகள் மேற்கொண்டது. தற்போதுள்ள மத்திய தொழிலாளர் நல சட்டங்களை ஒன்று சேர்த்து, எளிமையாக்கி, சூழ்நிலைக்கேற்ப பொருத்தமான விதிகளை மாற்றி அமைப்பதன் மூலம் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஊதியங்கள் விதி மசோதா: ஊதியங்கள் மசோதா 2017 வரைவு விதிகள் மக்களவையில் 10.08.2017ல் அறிமுகம் செய்யப்பட்டு, தொழிலாளர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வில் உள்ளது. நிலைக்குழுவின் அறிக்கைக்காக அமைச்சகம் காத்திருக்கிறது.
தொழிற்சாலை உறவுகள் குறித்த விதிகள்: நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விதிகள் குறித்த தொழிற்சாலை உறவுகள் மசோதா 2018 கொண்டு வருவதற்காக, அமைச்சரவைக்கான வரைவுக் குறிப்பு, தொழிலாளர் விதிகளுக்கான தொழிற்சாலைகள் உறவு மசோதா 2018-ம் அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைக்காக 08.02.2018ல் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. அந்த அமைச்சகங்களின் கருத்துகள் / கமெண்ட்கள் கோரப்பட்டுள்ளன.
சமூகப் பாதுகாப்பு & நலன் குறித்த விதிகள்: சமூகப் பாதுகாப்பு & நலனுக்கான விதிகளின் பூர்வாங்க வரைவுத் திட்டம் அமைச்சகத்தின் இணையதளத்தில் 16.03.2017ல் வெளியிடப்பட்டு, இதில் தொடர்புடையவர்கள் / பொது மக்களிடம் கருத்துகள் கோரப்பட்டுள்ளது. இத் துறையில் தொடர்புடைய பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பரிசீலனை செய்து, சமூகப் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான வரைவு விதிகள் 2018 என்ற திருத்தப்பட்ட வரைவுத் திட்டம் இந்த அமைச்சகத்தின் இணையதளத்தில் 01.03.2018ல் வெளியிடப்பட்டு, இதில் தொடர்புடையவர்களின் ஆலோசனைகள் / கமெண்ட்கள் கோரப்பட்டுள்ளது.
பணிசார்ந்த பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல்கள் குறித்த விதிகள்: பணிசார்ந்த பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல்கள் குறித்த பூர்வாங்க வரைவுத் திட்டம் தயாரித்து அமைச்சகத்தின் இணையதளத்தில் 23.03.2018ல் வெளியிடப்பட்டு, பொது மக்கள் உள்பட இதில் தொடர்புடையவர்களின் கமெண்ட்கள் / ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (தனிப் பொறுப்பு) பணிசார்ந்த பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச் சூழல்கள் மசோதா 2018 வரைவுத் திட்டம் குறித்து கருத்தாடல் செய்யவுள்ளது.
ஷ்ரம் சுவிதா முனையம்: தொழிலாளர் நலச் சட்டங்களை அமல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பு நிலையை உருவாக்குவதற்கும், இவற்றில் ஒத்திசைவுக்கான சிக்கல்களை எளிமையாக்குவதற்கும் `ஷ்ரம் சுவிதா முனையம்' என்ற ஒருங்கிணைந்த இணைய முனையத்தை தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
- ஆபத்து வாய்ப்பு வரம்பு அடிப்படையில் கணினிமயமாக்கப்பட்ட முறைமைகள் மூலம் தொழிலாளர் ஆய்வை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி தொழிற்சாலை ஆய்வாளர்கள் 72 மணி நேரத்துக்குள் ஆய்வறிக்கையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அறிக்கையைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 05.11.2018-ல் இருந்து 48 மணி நேரமாகக் குறைக்கப் பட்டுள்ளது.
- ESIC மற்றும் EPFO-வுக்கு பொதுவான பதிவு
- ESIC & EPFO -வுக்குப் பொதுவான ECR
2017 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ள பேறுகால ஆதாய (திருத்த) சட்டம், 2017 : ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுமுறை 12 வாரங்கள் என்பதில் இருந்து 26 வாரங்கள் என அதிகரிக்கப்பட்டதால் 18 லட்சம் பெண் தொழிலாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.
பணிக்கொடை பட்டுவாடா (திருத்த) மசோதா, 2018 மக்களவையில் 2018 மார்ச் 15ம் தேதியும், மாநிலங்களவையில் 2018 மார்ச் 25 ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்டம் 2018 மார்ச் 29 முதல் அமலுக்கு வந்துள்ளது.
கப்பல் மறுசுழற்சி தொழில் துறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்: தொழிற்சாலை ஆலோசனை சேவை & தொழிலாளர் நிறுவனங்களுக்கான டைரக்டர் ஜெனரல் (DGFASLI) மற்றும் குஜராத் கடல்சார் வாரியம் (GMB) 11-7-2018ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒனஅறில் கையெழுத்திட்டுள்ளனர்.
சமூக மற்றும் தொழிலாளர் துறையில் சர்வதேச ஒத்துழைப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து: சமூக மற்றும் தொழிலாளர் துறையில் ஒத்துழைப்பு குறித்து பிரேசில், ரஷியக் கூட்டமைப்பு, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு (MoU) மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய தொழில் புரட்சி சூழ்நிலையில் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி மற்றும் வளமையைப் பகிர்ந்து கொள்ளுதல் என்ற பொதுவான நோக்கத்துக்காக பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு, கூட்டு முயற்சி மற்றும் அதிகபட்ச இணக்க செயல்பாடு ஆகியவற்றுக்கான நடைமுறைகளை உருவாக்குவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
தொழிலாளர் கல்வித் திட்டம்: தொழிலாளர் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான தெங்காடி தேசிய வாரியம், முறைப்படுத்தப்பட்ட துறை தொழிலாளர்களுக்கு 899 பயிற்சிக் கல்வி நிகழ்ச்சிகளையும், அமைப்புசாரா பிரிவு தொழிலாளர்களுக்கு 2733 பயிற்சிக் கல்வி நிகழ்ச்சிகளையும், MGNAREGA உள்பட ஊரகத் தொழிலாளர்களுக்கு 670 பயிற்சிக் கல்வி நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளது.
சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் :
கனிமவளச் சட்டம் 1952 விதிகளின்படி, அனுமதிகள், விலக்குகள், சலுகைகள் மற்றும் ஒப்புதல்கள் போன்றவை முன்னர், அதில் தொடர்புடையவர்கள் கணினி மூலமாக அல்லாமல் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் மூலம் வழங்கப்பட்டது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி சூழ்நிலையில், ``ஒப்புதல் முறைமை'', ``அனுமதி / விலக்கு / சலுகை அளித்தல் முறைமை'' மற்றும் ``தேசியப் பாதுகாப்பு விருது (சுரங்கங்கள்) முறைமை'' என்ற மூன்று மென்பொருள் தொகுப்புகள் உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவரப் பட்டுள்ளன. ``டிஜிட்டல் DGMS''- ன் ஒரு பகுதியாக ``விபத்துகள் & புள்ளியியல் முறைமை'' மற்றும் ``கணக்குகள் & பட்ஜெட் முறைமை'' என்ற மேலும் இரண்டு மென்பொருள்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை பரிசோதனை நிலையில் இருக்கின்றன. அதிக வெளிப்படைத்தன்மை & பொறுப்பேற்பு ஆகியவற்றை அதிகரித்தல் மற்றும் பணிகளை வேகமாக முடித்தலுக்கு இந்த மென்பொருள்கள் உதவிகரமாக இருக்கும்.
- தேவைக்கான மென்பொருள் NIC மூலம் உருவாக்கப்பட்டு, ஷ்ரம் சுவிதா முனையத்தை உள்ளடக்கியதாக அமல் செய்யப்படுகிறது. உலோகங்களுக்கான கச்சாப் பொருள் எடுக்கும் சுரங்கங்களில் ஆபத்து வாய்ப்புகள் உள்ள ஆய்வுக்கான முறைமை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இது 2018 -19ல் உருவாக்கப்படும். ஷ்ரம் சுவிதா முனையம் மூலம், அனைத்து வகை சுரங்கங்களில் உள்ள எதார்த்தமான ஆபத்து வாய்ப்புகள் தகுதிநிலைக்கு ஏற்ப முன்னுரிமை அளித்து ஆன்லைன் மூலம் பணி ஒதுக்கீடு செய்வதற்கு ஆய்வுகள் உருவாக்கப்படும்.
- 110 சுரங்கங்களில் ஆபத்து வாய்ப்பு மதிப்பீட்டு ஆய்வு & பாதுகாப்பு மேலாண்மைத் திட்டம் தயாரிப்புக்கு சுரங்கங்கள் பாதுகாப்பு டைரக்டர் ஜெனரல் (DGMS) முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். பாதுகாப்பு மேலாண்மையில் அதிக அளவில் செயல்திறன் மிக்க முறைமையை உருவாக்க உதவியுள்ளது.
- ``சுரங்கங்களில் தூசு தொடர்பான நோய்கள் மற்றும் நீடித்த தடுப்புத் திட்டம் குறித்த பன்முக ஆய்வு'' குறித்து நாக்பூரில் உள்ள தேசிய சுரங்கத் தொழிலாளர் ஆரோக்கிய நிலையத்துடன் (NIMH) கூட்டு ஆய்வுத் திட்டத்தின் மூலம், தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்திலும், ராஜஸ்தான் மாநிலம் கராவ்லி, தோல்புர், ஜோத்பூர், நாகாவ்ர் மற்றும் பரத்பூர் மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் விதிஸா மாவட்டத்திலும், மேற்குவங்கத்தில் பிர்பூம் மாவட்டத்திலும் கள ஆய்வுகள் வெற்றிகரமாக நடத்தப் பட்டுள்ளன. 2539 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 136 பேருக்கு நுரையீரல் திசு அழற்சி இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
- சுரங்கங்களில் அமைப்புசாரா பிரிவில் பணியாற்றும் 9863 பேருக்கு பணிச்சூழல் சார்ந்த ஆரோக்கியம் குறித்த ஆய்வை DGMS நடத்தியது. வெவ்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில நிர்வாகங்களின் உதவியுடன் பல்வேறு பகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 211 பேருக்கு நுரையீரல் திசு அழற்சி இருப்பது கண்டறியப்பட்டது.
நிர்ணயித்த கால வேலைவாய்ப்பு:
அனைத்துத் துறைகளிலும் ``தொழிலாளர்களுக்கு நிர்ணயித்த கால வேலைவாய்ப்பு'' என்ற பிரிவை தொழிலாளர் வேலைவாய்ப்பு (நிலையாணைகள்) சட்டம், 1946-ல் தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகம் சேர்த்துள்ளது. அதன்படி அறிவிக்கை எண் G.S.R. 235(E) - என்ற விதிமுறைகளை 16.3.2018ல் வெளியிட்டுள்ளது. ஒருபுறம் உலகமயமாக்கல் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள சவால்கள்கள், தொழில் செய்வதில் புதிய நடைமுறைகள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை சமாளிப்பது என்றும், மறுபுறம் நிரந்தரப் பணியாளர்களைப் போன்ற சட்டபூர்வ ஆதாயங்கள் அப்படியே விகிதாசார அடிப்படையில் ``நிர்ணயித்தகால வேலைப் பணியாளர்களுக்கும்'' கிடைக்கும் என்பதன் மூலம் அந்தத் தொழிலாளர்களுக்குப் பலன் கிடைப்பதாகவும் இது இருக்கும் என்பது இதனுடைய நோக்கமாகும்.
II. EPFO எடுத்த முக்கிய நடவடிக்கைகள்
- ஒருங்கிணைந்த முனையத்தின் உறுப்பினர் இடைமுகத்தில் வாரிசு நியமன (படிவம் 2) ஆன்லைன் திட்டம் 2018 பிப்ரவரி மாதத்தில் கொண்டுவரப் பட்டது. ஆன்லைனில் வாரிசு நியமனம் செய்வதில் ஆதார் அடிப்படையிலான eSign முறையைப் பயன்படுத்தி, அவருடைய முன்னிலையில் நியமனம் கையெழுத்திட்டதாக, உறுப்பினர் சமர்ப்பிக்கும் வாரிசுநியமனம் உறுதி செய்யப்படுகிறது. 10.10.2018 தேதியின்படி 26,885 ஆன்லைன் e-வாரிசு நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
- 2018 மார்ச் மாதம் ஓய்வூதியர்களுக்கான முனையம் தொடங்கப்பட்டது. பென்சன் வழங்கல் உத்தரவு எண், ஓய்வூதியர்களுக்கான பட்டுவாடா உத்தரவு விவரங்கள், ஓய்வூதியர்களின் பாஸ்புத்தகத் தகவல் மற்றும் ஓய்வூதியம் கிரெடிட் செய்யப்பட்ட தேதி மற்றும் ஜீவன் பிரமான் டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் தகவல் உள்பட ஓய்வூதியர்களின் வாழுதல்நிலை குறித்த சான்றிதழ் சமர்ப்பிப்பு போன்ற விவரங்களை EPFO ஓய்வூதியர்கள் அனைவரும் இதன் மூலமாகப் பெறலாம்.
- கணக்கு உருவாக்கும்போது, பணி வழங்குநர் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்ட பான் அட்டையைப் பதிவேற்றம் செய்ய வேண்டியிருந்தது. பான் அட்டையின் ஸ்கேன் செய்த பதிவை, பதிவு செய்யும் போது சமர்ப்பிக்கும் தேவையை நீக்குவதற்காக, வருமான வரித் துறையிடம் இருந்து நேரடியாக விவரங்களை சரிபாக்கும் ஆன்லைன் முறைமை உருவாக்கப் பட்டுள்ளது. 10.10.2018 தேதியின்படி இந்த வசதியை 80,706 தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.
- தொழில் செய்வதற்கு உகந்த சூழ்நிலையை எளிமையாக்குவதற்காக, கணக்கிடுதல் மற்றும் சேதங்களுக்கு பணம் வழங்குதலுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி & இதர விதிகள் சட்டத்தின் பிரிவு 14 B-யின் கீழ் மற்றும் பிரிவு 7Q- படி வட்டி கணக்கிடுதலுக்கான செயல்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கால தாமதமாக பணத்தைச் செலுத்துதலுக்கு கணக்கிடுவதற்காக இது உருவாக்கப் பட்டுள்ளது.
- பிரதம மந்திரி ரோஜ்கர் புரோட்சஹன் திட்டத்தின் (PMRPY) கீழ் தொழிலாளர்களுக்கான பங்கு தொகையை (EPF மற்றும் EPS இரண்டுக்கும்) மூன்று ஆண்டு காலத்துக்கு மத்திய அரசு முழுமையாகச் செலுத்துகிறது. 2018 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து இது அமலுக்கு வந்துள்ளது. புதிய தொழிலாளர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கும், மூன்று ஆண்டுகள் நிறைவடையாத தொழிலாளர்களுக்கு அந்தக் காலம் முடியும் வரையில் மீதம் உள்ள காலத்துக்கும் இது பொருந்தும். 2018 ஏப்ரல் 1 க்கு முன்பு PMRPY திட்டத்தின் கீழ், தொழிலாளியின் மொத்த பங்களிப்பில் (ஊதியத்தில் 12%) EPS பங்கை (ஊதியத்தில் 8.33%) அரசு செலுத்தி வந்தது.
- EPF திட்டம் 1952-ல் நிர்வாகக் கட்டணங்கள் ஊதியத்தில் 0.65%-ல் இருந்து 0.50% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு செய்யாத, செயல்பாடு இல்லாத நிறுவனம் ஒவ்வொன்றுக்கும் மாதத்துக்கு குறைந்தபட்சம் 75 ரூபாய் என்றும், மற்ற நிறுவனங்களுக்குக் குறைந்தபட்சம் மாதத்துக்கு 500 ரூபாய் என்றும் நிபந்தனையுடன் இவ்வாறு குறைக்கப் பட்டுள்ளது.
- PPO-க்களுடன் இணைக்கப்பட்ட ஆதார் எண் சரியாக இல்லாத காரணத்தால் டிஜிட்டல் வாழ்வுநிலை சான்றிதழ் (DLC-கள்) நிராகரிக்கப்படும் பிரச்சினையை சரி செய்வதற்காக புதிய செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களின் குறைகளைக் குறைத்து, அவர்களுக்கு தடையற்ற சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது உருவாக்கப் பட்டுள்ளது.
- அலுவலகத்துக்குள் மாறுதல் கேட்புரிமைகள் மற்றும் மறு ஆய்வு கேட்புரிமைகளைத் தவறாக ஆய்வு செய்யப்படுவதால் ஏற்படும் நிராகரிப்புகளை சரி செய்து சரியான விவரங்களை சேர்த்தும் ஒரு புதிய செயல்முறை 05.10.2018ல் தொடங்கப்பட்டது. கேட்புரிமை செட்டில்மெண்ட் நடைமுறையை ஒழுங்குபடுத்தி, சந்தாதாரர்களுக்கு நல்ல சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு இது உதவும்.
- UMANG APP மூலம் ஆதாருடன் UAN -ஐ இணைப்பதற்கு ஆன்லைன் நியமனம் (e-Nomination) மற்றும் பயோமெட்ரிக் அத்தாட்சி முறைகளைப் பயன்படுத்தி EKYC முனையத்தில் ஆதாருடன் UAN -ஐ ஆன்லைனில் இணைப்பது ஆகிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
- EPFO -வில் இப்போது 190 தொழில் துறைகள் (EPF சட்டத்தில் 1வது ஷெட்யூலில் குறிப்பிடப்பட்டுள்ளவை) சேர்க்கப்பட்டு, 11.3 லட்சம் நிறுவனங்களில் 20 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் கையாளப்படுகின்றன.
III. ESIC மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள்
மருந்தகம் மற்றும் கிளை அலுவலகம் (DCBO): உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கும் முறையை வலுப்படுத்தும் வகையில், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு தொடர்பு மையத்தை ஏற்படுத்தும் பணியை ESIC தொடங்கியுள்ளது. மருந்தகம் மற்றும் கிளை அலுவலகம் (DCBO) என்ற வகையில் படிப்படியாக இவை தொடங்கப்படும். முதல்நிலை மருத்துவ வசதிகளும், பண ஆதாயங்கள் கிடைப்பதும் இதன் மூலம் எளிதாக்கப்படும்.
மாற்றி அமைக்கப்பட்ட தொழில் நிறுவன பயன்பாட்டு மருந்தகம் (மாற்றியமைத்த EUD) : முன்னோடித் திட்ட அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்ட தொழில் நிறுவன பயன்பாட்டு மருந்தகம் (மாற்றியமைத்த EUD) அமைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. ESIC-ன் அடிப்படை ஆரோக்கிய சேவைகளை விரிவுபடுத்துவதில், இதுதொடர்பானவர்களின் பங்கேற்பை பலப்படுத்தும் நோக்கில் இது செய்யப் படுகிறது.
அட்டல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜ்னா: வேலைவாய்ப்பு பாங்கு மாற்றம் மற்றும் இந்தியாவில் இப்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீண்டகால வேலைவாய்ப்பு என்பது குறுகிய கால வேலைவாய்ப்பாக ஒப்பந்தம் மற்றும் தற்காலிக அடிப்படை என மாறிவிட்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஈ.எஸ்.ஐ. சட்டம் 1948-ன் கீழ் காப்பீடு செய்த நபர்களுக்கு IP-கள்) ``அட்டல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜ்னா'' என்ற திட்டத்துக்கு ஈ.எஸ்.ஐ. கார்ப்பரேசன் ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களுக்கு வேலையில்லாத காலம் மற்றும் புதிய வேலை தேடும் காலத்துக்கு அவர்களுக்கான நிவாரணத் தொகையை அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த இந்தத் திட்டம் வகை செய்கிறது.
மாற்றி அமைக்கப்பட்ட காப்பீட்டு மருத்துவர்கள் (IMP) திட்டம், 2018 : ஈ.எஸ்.ஐ. கார்ப்பரேசன் மாற்றி அமைக்கப்பட்ட காப்பீட்டு மருத்துவர்கள் (IMP) திட்டம், 2018-க்கு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்துள்ளது. முன்னோடித் திட்ட அடிப்படையில் IMP திட்டத்தை அதிக ஈர்ப்புள்ளதாக ஆக்குவதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.
- மாற்றி அமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ், கைவசம் உள்ள மருத்துவப் பட்டியலின்படி மருந்துகளை IMP பரிந்துரை செய்வார்.
- இதனுடன் கூடுதலாக நோயுற்றகால பயனாக 7 நாட்களுக்கு ஓய்வு அளிக்க IMP, செல்போன் ஆப் மூலமாக பரிந்துரை செய்யலாம். விட்டுவிட்டு ஓராண்டில் அதிகபட்சம் 30 நாட்கள் வரை இதற்குப் பரிந்துரைக்கலாம். மருத்துவ நடுவர் / DCBO டாக்டரால் இந்தப் பரிந்துரை எப்போவாதவு சரிபார்க்கப்படும் என்ற நிபந்தனை இதற்கு உண்டு. இதற்கான ஆதாயம் IP-யின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
“UMANG: ESIC – Chinta Se Mukti” செல்போன் ஆப்:
IP மையமாகக் கொண்ட தகவல் சேவைகள் கிடைக்கும் வகையில், UMANG தளத்தின் (புதிய சூழலுக்கான ஒருங்கிணைந்த செல்போன் அப்ளிகேசன்) மூலம் ESIC – Chinta Se Mukti’ செல்போன் ஆப் தொடங்கப் பட்டுள்ளது. ESIC தகவல் தொகுப்பில் தனது செல்போன் எண்ணைப் பதிவு செய்துள்ள IP, Google Play Store-ல் இருந்து செல்போன் அப்ளிகேஷன், இணையதளம் போன்ற பல சேனல்களில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்த ஆப் மூலம் பல வகையான தகவல்களைப் பெற முடியும். ஸ்மார்ட் போன்கள், டேப்லட் கணினிகள், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் மூலம் இதை அணுகலாம்.
ESI திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு வரம்பை விரிவுபடுத்துவது (ESIC 2.0 கீழ்)
- இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்களின்படி ESIC-2.0-ன் படி, இந்தியா முழுவதிலும் ஈ.எஸ்.ஐ. திட்டத்தை அமல் செய்ய ஈ.எஸ்.ஐ. கார்ப்பரேசன் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே 325 மாவட்டங்களில் முழுமையாகவும், 178 மாவட்டங்களில் பகுதியளவும் ஈ.எஸ்.ஐ. திட்டம் அமல் செய்யப் பட்டுள்ளது.
IV. வேலைவாய்ப்பு உருவாக்குவதை ஊக்குவிக்க மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள்:
-
- தேசிய வேலைவாய்ப்பு சேவை (NCS) : தேசிய வேலைவாய்ப்பு சேவைத் திட்டம் வேலைவாய்ப்பு வழங்குபவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வேலை இல்லாதவர்களை ஒரே தளத்தில் கொண்டு வருகிறது. 30.11.2018 தேதியின்படி, தீவிரமாக வேலை தேடும் 98,92,350 பேரும், வேலைவாய்ப்பு வழங்கும் 9,822 நிறுவனங்களும் இந்த முனையத்தில் உள்ளனர். வேலை தேடுபவர்கள் தபால் நிலையங்கள் மூலமாகப் பதிவு செய்யும் வசதியை அளிப்பதற்காக தபால் துறையுடன் NCS கை கோர்த்துள்ளது.
தேடும் வேலையைப் பொருத்தமாக அளிப்பது, வேலைவாய்ப்பு கலந்தாய்வு, தொழல் திறன் வளர்ச்சி பயிற்சிகள் பற்றிய தகவல்கள், பணியுடன் இணைந்த பயிற்சிகள், உதவித் தொகையுடன் கூடிய பயிற்சிகள் போன்று, வேலைவாய்ப்புடன் தொடர்புடைய பல வகையான சேவைகளை NCS அளிக்கிறது.
ii. முன்மாதிரி வேலைவாய்ப்பு மையங்கள் : மாநிலங்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் சேர்ந்து 107 முன்மாதிரி வேலைவாய்ப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
iii.காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்புகள் (புதிய வரிசைத் தொகுப்பு):
- வேளாண்மை-அல்லாத தொழில் பொருளாதாரத்தில் கணிசமான பிரிவில் அடுத்தடுத்த காலாண்டுகளில் வேலைவாய்ப்பு சூழ்நிலையில் ஏற்படும், தொடர்புடைய மாற்றங்களை அளவீடு செய்யும் நோக்கில், வாய்ப்பு மற்றும் வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் QES (புதிய வரிசைத் தொகுப்பு)-ஐ தொழிலாளர் மையம் உருவாக்கியுள்ளது. இதில் 8 முக்கிய துறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவையாவன –
- iv. தொழில் சார்ந்த ஊதிய கணக்கெடுப்பு (OWS):
- வெவ்வேறு பணிகளுக்கு ஊதியப் பட்டியலின்படி அளிக்கும் வருமானம் குறித்து தகவல்களை சேகரிக்க உதவும் வகையில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பணிசார்ந்த ஊதிய கணக்கெடுப்புகளை தொழிலாளர் மையம் நடத்துகிறது. தொழிற்சாலைகளுக்கு இடையிலான மற்றும் தொழிற்சாலைகளுக்கு உள்பட்ட நிலையில் வருமானங்களின் வேறுபாடுகள் குறித்த அறிவியல்பூர்வ ஆய்வுகளுக்கு, தோட்டத் தொழில், சுரங்கம், உற்பத்தி மற்றும் சேவைத் துறை தொழில்களில், இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
v. பகுதி வரையறை கணக்கெடுப்பு:
- காலாண்டு வேலைவாய்ப்பு கணக்கெடுப்பின் (QES) முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதன் கால இடைவெளி, முடிவுகள் மற்றும் செயல்வரம்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பெரிய அளவில் பகுதி வரையறை கணக்கெடுப்பு (AFS) நடத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 10 தொழிலாளர்களுக்கும் குறைவாக உள்ள நிறுவனங்கள் குறித்த கணக்கெடுப்பாக இது இருக்கும். பொருளாதாரத்தில் வேளாண்மை அல்லாத துறைகளில் வேலைவாய்ப்பின் போக்கை பிரதிபலிப்பாக, கணக்கெடுப்பின் முடிவுகள் இருக்க வேண்டும் என்பதற்கு இது நடத்தப் படுகிறது.
vi. பிரதமரின் முத்ரா திட்டம் பற்றிய கணக்கெடுப்பு:
- பிரதமரின் முத்ரா திட்டத்தின் (PMMY) கீழ் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் பற்றி மதிப்பீடு செய்வதற்காக கணக்கெடுப்பு நடத்தும் பொறுப்பு தொழிலாளர் & வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொழிலாளர் மையத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
******
(Release ID: 1556604)
Visitor Counter : 880