அணுசக்தி அமைச்சகம்

அணுசக்தி துறை: நடப்பாண்டு சாதனைகள்

Posted On: 14 DEC 2018 1:34PM by PIB Chennai

2018 ஆம் ஆண்டு அணுசக்தி துறை எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சமூக நலனிற்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தேசத்தை உருவாக்க இத்துறை பெரும்பங்காற்றியுள்ளது.

இத்துறையின் முக்கிய சாதனைகள் கீழ்வருமாறு:

கைகா அணுமின் நிலையத்தின் யூனிட் 1 அணு உலை டிசம்பர் 10, 2018 ஆம் தேதி வரை தொடர்ந்து 941 நாட்கள் இயங்கி உலக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஹிஷாம் அணு உலையின் 940 நாள் அது சாதனையை முறியடித்துள்ளது.

குஜராத்தில் கக்ராபூர் மற்றும் ராஜஸ்தானில் 700 மெகாவாட் திறன் கொண்ட கனநீர் அணு உலை நிறுவும் பணி வேகமாக நடந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ர் உலை செயல் பட துவங்கும் அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய உலை செயல்படத் தொடங்கும்.

அணுமின் நிலைய வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக, கல்பாக்கத்தில் உள்ள அதிவேக ஈனுலை மார்ச் 2018, 30 மெகா வாட் திறன்கொண்டு இயங்கியது. பின் அதன் அதிவேக ஜெனரேட்டர் மின்சார விநியோக இணைப்புடன் இணைக்கப்பட்டு 6.1 மெகா வாட் மின்சாரம் அளிக்கிறது.

அப்சரா (யுரேனியம்) அணுஉலை

அப்சரா (யுரேனியம்) அணுஉலை தரம் மேம்படுத்தப்பட்டு தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. நீச்சல்குளம் வகை ஆராய்ச்சி அணு உலை மேம்படுத்தப்பட்ட அப்சராஉயர் திறனுடன் செயல்படத் தொடங்கி உள்ளது. 2018 செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் இந்த உலை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

மருத்துவ சுழற்சியலைவி வசதி சைக்ளோன்-

இந்தியாவிலேய மிகப்பெரிய மருத்துவ சுழற்சியலைவி வசதியான சைக்ளோன்-30, 30 மெகா எலக்டிரான் வோல்ட் கதிர்வீச்சினை உற்பத்தி செய்துள்ளது. கிழக்கு இந்தியாவின் மொத்த கதிரியக்க ஓரிடத்தான் (radioisotope) தேவையையும் பூர்த்தி செய்யும் திறன் இந்த சுழற்சியலைவிக்கு உண்டு.

மேலும், மலிவான விலையில் புற்றுநோய்க்கான மருந்துகள் அளிக்க 21-கதிர்வீச்சு மருந்தியல் நிறுவனங்கள் மற்றும் இண்டு கதிரியக்க அணுக்கரு ஆலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நமது சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்க சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது:

  • நியூட்ரினோ துகள் இயற்பியல் துறையில் மத்திய அணுசக்தி துறை அமெரிக்க பெர்மிலாபுடன் அரசுகளுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்தம் ஏப்ரல் 2018-ல் கையெழுத்திடப்பட்டது.

  • நவீன EPR தொழில்நுட்பம் கொண்ட ஆறு அணுமின் நிலையங்கள் அமைக்க இந்திய அணுமின் கழகம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் மின்சார பயன்பாடு நிறுவனம் இடையே மார்ச் 2018-ல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

  • அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புதுகண்டுபிடிப்புகளுக்காக மத்திய அணுசக்தி துறை மற்றும் கனடா நாட்டின் இயற்கை வளங்கள் துறை இடையே பிப்ரவரி 2018-ல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

  • பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக வியட்நாம் நாட்டின் வினடோம் (வியட்நாம் அணு சக்தி ஆணையம்) நிறுவனத்துடன் மார்ச் 2018-ல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

 

******


(Release ID: 1556602) Visitor Counter : 310
Read this release in: English , Marathi