பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

பீகார் மாநிலத்தில் புதிய 4 வழி மேம்பாலம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 17 DEC 2018 8:57PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்கள் குழு 5.634 கிலோ மீட்டர் தூரத்திற்கு கங்கை நதியின் மேல் புதிய 4 வழி மேம்பாலத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது ஏற்கனவே உள்ள எம்.ஜி. சேதுவிலிருந்து 38 மீட்டர் தொலைவில் உள்ளது. பீகார் மாநிலத்தின் பட்னாவில் உள்ள என்.எச்.
19-ல் அமைக்கப்பட உள்ள இந்த மேம்பாலத்தின் கட்டமைப்புக்கான மூலதன செலவு ரூ.2926.42 கோடியாகும். இந்த திட்டத்தின் கட்டுமான காலம் மூன்றரை ஆண்டுகள் ஆகும். ஜனவரி 2023 ஆம் ஆண்டு இந்த பணி நிறைவு பெறும். 14.500 கிலோ மீட்டர் தூரம் கொண்டுள்ள இந்த மெகா திட்டம் பீகார் மாநிலத்தின் பட்னா, சரன் மற்றும் வைஷாலி மாவட்டங்களின் வழியாக செல்லும்.

***

வி.கீ/அரவி/ரேவதி 


(रिलीज़ आईडी: 1556416) आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi