மத்திய அமைச்சரவை

வளர்ச்சிக்காக விண்வெளித் தொழில்நுட்பத்தின் அமைதிப் பயன்பாட்டு ஒத்துழைப்புக்கு இந்தியா-தஜிகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 06 DEC 2018 9:31PM by PIB Chennai

வளர்ச்சிக்காக விண்வெளித் தொழில்நுட்பத்தின் அமைதிப் பயன்பாட்டு ஒத்துழைப்புக்கு இந்தியா-தஜிகிஸ்தான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தஜிகிஸ்தானின் துஷான்பே-யில் அக்டோபர் 8, 2018 அன்று கையெழுத்தானது.

விவரங்கள்

      புவியின் தொலையுணர்வு; செயற்கைக்கோள் தகவல் மற்றும் செயற்கைக்கோள் அடிப்படையில் கண்காணிப்பு; விண்வெளி அறிவியல் மற்றும் கோள்கள் கண்டறிதல், விண்கலன், விண்வெளி முறைமைகள், புவி நிலைமைகள் குறித்த ஆய்வுகள்; விண்வெளி தொழில்நுட்பப்  பயன்பாடு உள்ளிட்ட விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றில் ஒத்துழைப்பைத் தொடர்வதற்கு இந்தப் புரிந்துணர்வு  ஒப்பந்தம் வகைசெய்யும்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், தஜிகிஸ்தான் குடியரசின் நில நிர்வாகக் குழு மற்றும் புவியியல் ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு பணிக்குழு அமைக்க இது  வகைசெய்யும். இந்தக்குழு காலவரம்பு உள்ளிட்டவற்றுக்கு திட்டமிடுவதோடு, புரிந்துணர்வு ஒப்பந்த அமலாக்கத்திற்கான வழிவகைகளையும் கண்டறியும். 

******


(வெளியீட்டு அடையாள எண்: 1555087) வருகையாளர் எண்ணிக்கை : 180
இந்த வெளியீட்டை படிக்க: English , Marathi , Assamese , Bengali , Kannada , Malayalam