தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ஊடகம் & பொழுது போக்கு நிறுவனங்களை கட்டுப்படுத்த சுய கட்டுப்பாட்டு முறையே சிறந்த அணுகுமுறையாக இருக்கும் : தகவல் ஒலிபரப்புத்துறைச் செயலாளர்

Posted On: 06 DEC 2018 2:34PM by PIB Chennai

ஊடகம் & பொழுது போக்கு நிறுவனங்களை கட்டுப்படுத்த, சுய கட்டுப்பாட்டு முறையே சிறந்த அணுகுமுறையாக இருக்கும் என  தகவல் ஒலிபரப்புத்துறைச் செயலாளர் திரு. அமித் கரே தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பங்களின் வருகை மற்றும் முன்னேற்றங்கள் காரணமாக, ஊடகங்களை கண்காணிக்கும் பணியில் அரசு ஈடுபடுவதைவிட, அவர்களே சுய கட்டுப்பாட்டை பின்பற்றுவதே சிறப்பானதாக இருக்கும் என்று அரசு கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். பல்வேறு அலைவரிசைகள் வழியாக ஒரு செய்தி தெரிவிக்கப்படும்போது, அதுவே நிர்வாக ரீதியாகவும் சாத்தியமான வாய்ப்பாக அமையும். சக அழுத்தம்தான், சுய கட்டுப்பாட்டை வலுவானதாகவும், நெறிமுறை சார்ந்த வகையிலும் நிறைவேற்ற வழிவகுக்கும். மும்பையில் இன்று தொடங்கிய ஊடக மாநாட்டின் ஒரு பகுதியாக,   “கொள்கை வகுப்பாளர்களுடன் ஒரு கலந்துரையாடல்: புதிய கொள்கைகளுக்கு வழிவகுக்கும் புதிய அமைப்புகள் – புதிய மற்றும் வளர்ந்து வரும் ஊடகங்களுக்கு சாதகமான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை இணைந்து உருவாக்குதல்” என்ற தலைப்பிலான  குழு விவாதத்தில் பங்கேற்று பேசிய திரு. அமித் கரே இதனை தெரிவித்துள்ளார்.

 

சிஸ்கோ நிறுவனத்தின் தென்கிழக்காசியா & இந்தியாவுக்கான நிர்வாக இயக்குநர் திரு.அலோக் ஸ்ரீவஸ்தவா; நிஷித் தேசாய் கூட்டமைப்பின் மூத்த பங்குதாரர் திருமதி கவுரி கோகலே; சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. விவேக் கிருஷ்ணானி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தை கே.பி.எம்.ஜி. இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர் திரு சைதன்யா கோகினேனி தொகுத்து வழங்கினார்.

---------

 

 

எம்எம்/கோ



(Release ID: 1554916) Visitor Counter : 179


Read this release in: English , Marathi , Hindi