பிரதமர் அலுவலகம்

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம் (11.02.2018)

Posted On: 12 FEB 2018 4:00PM by PIB Chennai

இங்கே  பெருந்திரளாக கூடியிருக்கும் எனது அன்பான இந்திய குடிமக்களே,

உங்களை வாழ்த்த நான், நமது நாட்டில் பேசப்படும் பல மொழிகளைப் பயன்படுத்தினால் அதற்கு பல மணிநேரம் ஆகும். இதுபோன்ற பன்முகத்தன்மை உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லை. இந்தியாவுக்கு வெளியே ஓமன் மண்ணில் ஒரு சிறிய இந்தியாவை பார்க்கிறேன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கே பல்வேறு துறைகளில் பணியாற்றுகிறார்கள். அவர்களின் பிரம்மாண்ட கூட்டத்தை நான் காண்கிறேன்.

உரத்த குரலில் என்னோடு சேர்ந்து பாடுங்கள்…. பாரத் மாதாவுக்கே வெற்றி …. பாரத் மாதாவுக்கே வெற்றி … வந்தே மாதரம் …. வந்தே மாதரம் …. வந்தே மாதரம் …. வந்தே மாதரம் …. வந்தே மாதரம் …. வந்தே மாதரம் ….

சகோதர, சகோதரிகளே,

ஓமன் நாட்டிற்கு நான் வந்திருப்பது எனது முதல் பயணமாகும்.  துபாயிலிருந்து 2 மணி நேரத்திற்கு முன்புதான் நான் இங்கு வந்து தொழில்நுட்ப மேம்பாடு குறித்த உலக அரசு உச்சிமாநாட்டில் முதன்மை விருந்தினராக நான் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைப்பதற்கான வாய்ப்பை பெற்றேன்.   ஒரு நிகழ்வில் உரையாற்றியதோடு மட்டும் எனது தொடர்பு நின்றுவிடாது.

இந்த நிகழ்வு இந்தியாவின் மேம்பாட்டுக்காக உலக அரங்கில் இன்று உங்களுகுகு வழங்கப்படும் கவுரமாகும்.

தற்போது நான் இங்கு வந்திருப்பது எனது அதிகாரப்பூர்வ பயணமாகும்.  ஆனால், நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, 10 ஆண்டுகளுக்கு முன்பே, ஓமன் நாட்டிற்கு வந்திருக்கிறேன்.  அப்போது ஆப்பிரிக்காவுக்கும் சென்று வந்தேன்.  அந்தப் பயணத்தின்போது, சலாலா வழியாக சென்றேன். அங்கே நான் சிறிதுநேரம் தங்கினேன். அப்போது நான் சந்தித்த உங்கள் அனைவரையும் இன்று சந்திக்கும் அதிர்ஷ்டத்தை பெற்றிருக்கிறேன்.  ஒமன் நாட்டிற்கு வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் இப்போது உங்களுடன் இருக்கிறேன். இன்றைக்கு இந்த வாய்ப்பு இங்கே கிடைத்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள ஓமன் நாட்டு அரசுக்கும் நிர்வாகத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, இந்தியாவுக்கும், ஓமன் நாட்டுக்கும் இடையே உள்ள உறவு ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.  ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, மரத்தினால் கட்டப்பட்ட கப்பல்கள் குஜராத்தில் லோத்தல் துறைமுகத்தில் இருந்து ஓமன் நாட்டுக்கு வந்துள்ளன. அந்தப் பயணத்தின்போது இந்த கப்பல்கள் இலங்கைக்கும் சென்று வந்துள்ளன.  இந்த நடைமுறை ஆயிரம் ஆண்டுகளில் மாறியுள்ளது.  அப்போது இந்தியாவில் அடிமைத்தனம் வேரூன்றி இருந்தது.  ஆனால், நூற்றாண்டுகள் பழமையான நமது வணிகம் மற்றும் சுமுகமான நட்புறவு இன்றைக்கும் அதேபோல் நிலைத்துள்ளது.

இந்திய சுதந்திரத்திற்கு பின்னர், இருநாடுகளுக்கும் இடையே வணிகம், பொருளாதாரம் மற்றும் சமூக உறவுகளை பலப்படுத்திக் கொள்ள பல நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டன.  மத்தியப் பிரதேசத்தில்  அமைந்துள்ள பினா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், ஓமன் நாட்டு உதவியுடன் இயங்கி வருகிறது.  அதேநேரத்தில் ஓமன் நாட்டில் 1,500 இந்திய ஓமன் கூட்டு நிறவனங்கள் இயங்கி வருகின்றன.   இந்தியாவும், இந்திய திறனாளிகளும் ஓமன் நாட்டு முன்னெற்றத்தின் தூதர்களாக பணியாற்றி வருகின்றனர்.  சாதாரணமாக ஒரு நாட்டிலிருந்து  அரசு சார்பில் ஒரு தூதர்தான் நியமிக்கப்படுவார். ஆனால். நாட்டின் நூற்றுக்கணக்கான தூதர்களாக நியமிக்கப்படுவார். ஆனால், நாட்டின் நூற்றுக்கணக்கான தூதர்களாக நீங்கள் இங்கே பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கிறீர்கள்.  இந்தியாவின் பழமையான நட்புறவுக்கு நாம் தற்போது புதிய வடிவத்தை கொடுத்து வருகிறோம். வளைகுடா நாடுகளின் உதவியோடு கடந்த 3 ஆண்டுகளாக தேவைப்படும் கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறோம்.  இந்த உறவை புதிய உச்சத்திற்கும் பல்வேறு பரிமாணங்களுக்கும் நாம் முன்னெடுத்துச் செல்கிறோம்.

வளர்ந்து வரும் இந்தியாவின் மேம்பாட்டுக்கு வளைகுடா நாடுகள் செலுத்திவரும் ஆர்வம் அதிகரித்து வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் இதை உன்னிப்பாக வரவில்லையா? இதன் அதிர்வுகள் எல்லா மட்டத்தில் இருந்தும் வருவதை நாம் உணர முடியும். எரிசக்தி, வணிகம் அல்லது முதலீடு என்ற ஒவ்வொரு துறையிலும் வளைகுடா நாடுகளுடன் இந்தியாவின் உறவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. புதிய உத்வேகம், புதிய சக்தி ஆகியவை ஓமன் நாட்டுடனான இந்தியாவின் உறவு இயற்கையானது. புவியியலின்படி வளைகுடா பகுதியில் ஓமன் இந்தியாவுக்கு அருகே உள்ள அண்டை நாடாக உள்ளது. ஓமன் அரசு குடும்பத்தினருடன் இந்தியா நீண்டகாலமாக நட்புறவு வைத்திருப்பது, நமக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும். மேலும், மன்னர் சுல்தான் இந்தியாவுடன் பிரிக்க முடியாத பந்தத்துடன் இருக்கிறார்.

மன்னர் சுல்தானின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு அரங்கத்திற்கு நான் வந்திருப்பதும் உங்களையெல்லாம் சந்தித்து பேசுவதும், சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  மன்னர் சுல்தான் இந்திய மக்களுடனும் வைத்திருந்த அன்பை இது பிரதிபலிக்கிறது.  அவர்களது இந்த நல்ல எண்ணத்திற்கு நாம் பெரிதும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

உங்களுடன் கலந்துரையாடிய பிறகு நான் மன்னருடன் சந்தித்துப் பேசவிருக்கிறேன்.  அவருடைய ஆரோக்கியத்திற்கும், நீண்ட வாழ்விற்கும் இந்திய மக்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்க இருக்கிறேன்.  மேலும் எனது வருகையின் மூலம் இருநாடுகளின் நட்புறவு மேலும் வலுவடையும் என்று அவர்களிடம் தெரிவிப்பேன்.  ஓமனில் நீங்கள் இருப்பது தாய்வீட்டில் இருப்பது போன்ற சூழல் நிலவுகிறது.
ஓமனில் உள்ள எனது 8 லட்சம் சகோதர-சகோதரிகள் இந்தியாவின் நல்லெண்ண தூதர்களாக இருக்கிறீர்கள்.  ஓமன் நாட்டின் முன்னேற்றத்திற்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறீர்கள்.  வியர்வையை சிந்தி உழைக்கிறீர்கள்.  உங்களது கடுமையான உழைப்புக்கு ஓமன் அரசு முழுமையான அளவில் மதிப்பளிப்பது கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.  சகோதர-சகோதரிகளே, ஒவ்வொரு சமூகத்திலும் நமக்கு தகுந்த ஓர் இடத்தை உருவாக்குவதற்கு இந்தியர்களின் கலாச்சாரமும், பண்பாடும் உதவுகின்றன.  உண்மையில் இது நிகழ்கிறதா, இல்லையா? பாலில் சர்க்கரை கரைந்து தித்திப்பாவது போல, நாமும் ஐக்கியமாகி விடுகிறோம்.  இவைதான் நமது பண்புகள்.  இதுதான் நமது இயற்கையான நமது குணம். பாரம்பரியத்திலிருந்து நாம் இதை பெற்றுள்ளோம்.  உலகமே ஒரே குடும்பம் என்ற வசுதேவ குடும்பத்தின் கொள்கையை பின்பற்றுபவர்கள் நாம்.  உலகமே ஒரே குடும்பம்தான் என்பது இதற்கு பொருள், ஒவ்வொருவரையும் மதிப்பது, ஒவ்வொரு பாரம்பரியத்தையும் மதிக்கும் அதே நேரத்தில் நமது நடத்தை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றையும் கட்டிக்காப்பது ஆகியவை இநதியாவின் தனித்தன்மையாகும்.  எனவே, பொதுமக்களின் இதயத்தில் இடம்பெறும் வகையில் நீங்கள் பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது.

உலக வரைபடம் மாறிவந்த போதிலும் இந்தியா வெற்றிக் களிப்போடு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.  உலகின் உயர்ந்த நாடுகள் மறைந்தால் கூட நாம் செல்லும் வழி எவ்வளவு கடினமாக இருந்தாலும் சரி, சூழ்நிலை எவ்வளவு சிக்கலாக இருந்தாலும் சரி, அவற்றையெல்லாம் எப்படி கடநது வருவது என்பது நமக்கு தெரியும்.  நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் ஒவ்வொரு சிக்கலையும் கடந்து வருவது நமது பொறுப்பாகும்.  இந்த பொறுப்புணர்வு, மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற நமது துடிப்பு ஆகியவை நமது உணர்வுகளில் உறுதியாக கலந்துள்ளது.

சகோதர- சகோதரிகளே, ஒவ்வொரு இந்தியனும் நவீன இந்தியாவின் கனவை உண்மையாக்குவதில் தம்மை முழுமையாக அர்ப்பணித்துள்ளனர்.  அவர்கள் இரவு-பகலாக உழைத்து வருகிறார்கள்.  ஓமனில் இருந்தாலும் இந்தியாவில் ஏதாவது நல்லது நடந்தால் நீங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும்.  நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.  ஆனால் மோசமாக ஏதாவது நிகழ்ந்து விட்டால், நீங்கள் பதற்றமான மனநிலையில் இருப்பீர்கள்.  இதுதான் நமது தனித்தன்மையாகும். 

இந்தியாவில் ஏழை-எளியோர்கள் மேம்பாடு அடைவதற்கு சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் செயல்பட்டு வருகிறோம்.  ஏழை எளியோர்கள் கனவு காண்கிறார்கள்.  அந்த கனவை நனவாக்குவதில் அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.  வாய்ப்பு கிடைக்கும் போது கடுமையாக உழைத்து கனவை நனவாக்குகின்றனர்.  புதிய இந்தியாவின் கனவை நனவாக்குவதில் வளர்ச்சியின் பாதையை நோக்கி, 125 கோடி மக்களுடன் இந்தியா வீறுநடைபோட்டு வருகிறது.  சாதாரண மனிதனின் வாழ்வாதாரத்தையே எளிதாக்குவதற்காக நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

நடைமுறையை எளிதாக்குதல், தேவையற்ற சட்டங்களை ரத்து செய்தல், அரசு அலுவலகங்களின் அளவை குறைத்தல், மக்கள் குறைகளை கண்டறிதல், அவற்றுக்கு தீர்வு காண்பதற்கு பணியாற்றுதல் ஆகியவற்றை அரசு கலாச்சாரத்தில் சேர்த்துள்ளோம்.

புதிய கடவுச்சீட்டு பெறுவதிலோ, அதனை புதுப்பித்தலிலோ தற்போது எந்த சிக்கலும் இல்லை.  கடவுச்சீட்டு பெறுவதற்கான வசதிகளை அஞ்சல் அலவலகங்களில் ஏற்படுத்தியுள்ளோம்.  15 நாட்களில் கடவுச் சீட்டை பெறுவோமா? இல்லையா? என்பதற்கெல்லாம் இதன்மூலம் தீர்வு காணப்படும்.  அதிகாரங்களை பரவலாக்கி, திறமையை மேம்படுத்துவதன் மூலம் அஞ்சலகங்களிலும், கடவுச்சீட்டு பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம்.  இதனால் கடவுச்சீட்டை ஓரிரு நாட்களில் பெறும் வசதி ஏற்படும்.

சிலர் நம்நாட்டில் இதற்கு முன்பு தொழில் தொடங்க விரும்பினால், புதிய நிறுவனத்தை தொடங்க விரும்பினால், முதலீடு செய்ய விரும்பினால், புதிய நிறுவனத்தை பதிவு செய்ய பல நாட்களாகும்.  தற்போது 24 மணிநேரத்தில் புதிய நிறுவனங்களை பதிவு செய்ய முடியும்.

மத்திய வரவு-செலவு திட்டத்தை கூர்ந்து நோக்கம் போது நாங்கள் அறிவித்த ஒரு திட்டம் உலகை மிகவும் கவர்ந்துள்ளது.  ஆயுஷ்மான் பாரத் என்பதே இந்த திட்டமாகும்.  இந்த திட்டத்தின்கீழ் இந்தியாவில் 10 கோடி ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மருத்துவக் காப்பீடு பெற வகை செய்யும். இதனால் 45 முதல் 50 கோடி பேர் பயன்பெறுவர்.  ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆண்டுக்கு இத்திட்டத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடாக பெறுவர்.

சகோதர-சகோதரிகளே, அரசுகள் வரலாம், போகலாம்.  மக்களும் வருவார்கள், செல்வார்கள்.  ஆனால், எந்த வகையான ஆளுமையை அரசு வழங்கியிருக்கிறது என்பதுதான் முக்கியம்.  இதற்கு முன்னர் ஒருவகையான ஆளுமை இருந்தது.  அதன்கீழ் எந்த திட்டமும் செயலாக்கம் பெறுவதற்கு 30 முதல் 40 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.  நான் அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்தேன்.  சர்தார் சரோவர் என்ற அணைக்கட்டுக்கு முன்னாள் பிரதமர் பண்டிட் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டது.  இந்த பணி கடந்த ஆண்டுதான் நிறைவு பெற்றுள்ளது.  ஒரு அணை கட்டப்பட்டாலும், கால்வாய் அமைப்பதற்கு எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இன்றைக்கு நான்காண்டுகள் நிறைவடைந்து விட்டன.  ஆனால், மோடி என்ன கொண்டு சென்றார் என்று யாரும் கூறமுடியாது.

அன்பான சகோதர-சகோதரிகளே, நான் மிகுந்த மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் தலைவணங்கி இதனை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.  எனக்கு இந்த பொறுப்பை வழங்கியுள்ள மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நான் சிதறடிக்க மாட்டேன்.  ஆனால் தற்போது நிலைமை நேர்மாறாக உள்ளது.  நான் எங்கு சென்றாலும், யாரை சந்தித்தாலும் எனது எதிரிகள் கூட எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களையும் சொல்வதில்லை.  ஆனால் அவர்கள் என்னிடம் என்ன கேட்கிறார்கள்.  மோடிஜி, எவ்வளவு வந்திருக்கிறது என்று சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள்.  ஆனால் முன்பு எவ்வளவு சுரண்டப்பட்டது என்றுதான் மக்கள் கேட்டு வந்தனர்.  இந்த நம்பிக்கை புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதிய இந்தியாவை உருவாக்க இந்த புதிய நம்பிக்கை துணை நிற்கும்.

மக்களை நட்புறவோடு வளர்ச்சிப் பாதையை நோக்கி, நிர்வாக சீரமைப்பை நோக்கி பார்க்க வேண்டும் என்ற  எண்ணத்தில் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

சாலைகளை அமைப்பது, ரயில்பாதைகளை அமைப்பது, ரயில் பாதைகளை மின்மயமாக்குவதை விரைவுப்படுத்துவது, புதிய விமான நிலையங்களை கட்டுவ்து, ஏழைகளுக்கு வீட்டு வசதிகளை விரைவாக ஏற்படுத்துவது, வங்கிக் கணக்குகளை விரைவாக தொடங்குவது, எரிவாயு இணைப்பை ஏற்படுத்துவது, இந்தப் பணிகள் எல்லாம் முன்பு இருந்ததை விட, தற்போது விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

நாட்டின் முதல் 20 ஆண்டுகளை நாம் உற்றுநோக்கிப் பார்ப்போமானால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.  பல அரசுகள் ஆட்சிக்கு வந்து அதன் பின் பதவியை இழந்துள்ளனர்.  உலகமே மாறியிருக்கும் வேளையில் இந்தியாவிற்கென்று விமானப் போக்குவரத்து கொள்கை இல்லாமல் இருந்தது.  நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, விமானப் போக்குவரத்துக் கொள்கையை உருவாக்கியிருக்கிறோம்.  சிறிய நகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலம் இருந்த விமான தளங்களை இயக்கத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம்.  புதிய விமான நிலைய கட்டுமானப் பணிகளை தொடங்கியிருக்கிறோம்.

எனதருமை நண்பர்களே, நாட்டில் தற்போது பொதுத்துறை மற்றும் தனியார் துறையிடம் 450 விமானங்களை போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளன என்பதை நீங்கள் அறிந்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்.  கடந்த 70 ஆண்டுகளில் 450 விமானங்களைத்தான் நாம் வாங்க முடிந்தது என்பதுதான் இதன் பொருள்.  இந்த ஓராண்டில் தனியார் நிறுவனங்கள் தனியார் துறை மூலம் 900 புதிய விமானங்களை வாங்குவதற்கு பதிவு செய்துள்ளனர். 70 ஆண்டுகளில் 450 விமானங்களை வாங்க முடிந்த நிலையில் தற்போது ஓராண்டில் மட்டும் 900 விமானங்களை வாங்க பதிவு செய்திருப்பதை பார்க்கலாம்.  ஏனென்றால் சாதாரண மனிதரும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதே நமது கொள்கையாகும்.

அன்பர்களே, அடிமட்டத்திலிருந்து நாம் முன்னேறவில்லை என்றால், எந்தவொரு வளர்ச்சியையும் நாம் காண முடியாது.  பெரிய அளவிலான நீண்டகாலம் நிலைத்திருக்கும் மாற்றங்களை எளிதாக கொண்டு வர முடியாது.  முழு அமைப்பும் மாறியாக வேண்டும்.  அப்படியானால்தான் நாடு வேகமாக முன்னேற்றத்தை காண முடியும் இதனால்தான், உலக வங்கியில் எளிதான வர்த்தகம் எந்த பட்டியலில் இந்தியா 142 ஆவது இடத்திலிருந்து 100 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சகோதர-சகோதரிகளே, நாட்டின் 21 ஆம் நூற்றாண்டுக்கான தேவைகளை கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் துறையையும் மேம்படுத்தி வருகிறோம்.  தேசிய நெடுஞ்சாலை, வான்வெளி, ரயில்பாதை, நீர்வழி ஆகியவை ஒன்றுக்கொன்று துணை நிற்கும் வகையில், தேவைகளை அறிந்து அவற்றை ஒருங்கிணைத்து வருகிறோம்.  பாரத் மாலா திட்டத்தின்கீழ், 53 ஆயிரம் கிலோமீட்டர் தூர நெடுஞ்சாலைப் பணிகளை அரசு தொடங்கியுள்ளது.  நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் பாதை இணைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.  மெட்ரோ ரயில் போக்குவரத்து 11 நகரங்களில் விரிவாக்கப்பட்டுள்ளன.  கொச்சி மெட்ரோ ரயில் போக்குவரத்தை கடந்த ஆண்டு பொது மக்களுக்கு அர்ப்பணித்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.  சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்து விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வரவு-செலவுத் திட்டத்தில் பெங்களுரு மெட்ரோ ரயில் போக்குவரத்தில் பெரிய அளவில் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.  நாட்டின் கடலோர பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக சாகர்மாலா திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். 

மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர-சகோதரிகளுக்கு நீலப் புரட்சி திட்டத்தை தொடங்கியிருக்கிறோம்.  நவீன விசைப் படகுகளை வாங்குவதற்காக அவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.  100 நீர்வழித்  தடயங்களையும் அரசு மேம்படுத்தி வருகிறது.  ஆறுகளை போக்குவரத்துக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். 110 நீர்வழிகளைக் கண்டறிந்துள்ளோம்.  சுற்றுப்புறச் சூழலை அவை பாதுகாப்பது மட்டுமல்லாமல் போக்குவரத்துச் செலவையும் குறைக்க வழி செய்துள்ளது.  சகோதர-சகோதரிகளே, 2022-23 ஆம் ஆண்டில் நீங்கள் இந்தியாவுக்கு வரும் போது பெரிய அளவிலான மாற்றத்தை காண்பீர்கள்.  அதுதான் புல்லட் ரயில்.  மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் போக்குவரத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியுள்ளன.  இந்த ரயிலில் பயணித்தால் அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு 2 முதல் இரண்டேகால் மணிநேரத்தில் சென்றடையலாம்.

தவறான கைகளுக்கு செல்லவிருந்த 57,000 கோடி பணம் தொழில்நுட்ப உதவியுடன் பயனாளிகளுக்கு நேரடியாக சென்றடைந்துள்ளது.  மானிய உதவி, ஓய்வூதியம் அல்லது கல்வி உதவித் தொகை, ஊதியம் ஆகியவை தற்போது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக சென்று சேர வகை செய்யப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு இந்த பணத்தை போலியான பெயர்கள் மூலம் இடைத்தரகர்கள் சுரண்டி வந்துள்ளனர்.  உஜாலா திட்டத்தின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணம் சென்று சேர்வதால், நாட்டு மக்கள் குறிப்பாக நடுத்தர வர்த்தகத்தினரின் பணம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

சகோதர-சகோதரிகளே,

நம்நாட்டில் எல்.ஈ.டி. மின்விளக்கு ஒன்று 350 ரூபாய்க்கு மேல் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் விற்கப்பட்டது.  அதே எல்.ஈ.டி. மின்விளக்கு ரூ.40 முதல் ரூ.45 வரையிலான விலையில் தற்போது கிடைக்கிறது.  நியாயமான விலையில் எல்.ஈ.டி. மின்விளக்குகளை வாங்குவதன் மூலம் வீடுகளுக்கான மின்கட்டணம் ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே,

மின்உற்பத்திக்கு 45,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படவிருந்ததையும் அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.  எல்.ஈ.டி. மின்விளக்குகள் பயன்படுத்தப்படுவதன் மூலம் இந்தப் பணம் சேமிக்கப்பட்டுள்ளது.  இந்த இரண்டு இலக்கங்களையும் ஒன்று சேர்த்தால் – மக்களின் சேமிப்பு மற்றும் நாட்டின் சேமிப்பு ஆகியவை ரூ.60,000 கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

உர உற்பத்தித் துறையில் மற்றொரு எடுத்துக்காட்டு உள்ளது.  சகோதர-சகோதரிகளே, நமது கொள்கைகளின் காரணமாக, புதிய உர ஆலை இல்லாமலேயே யூரியா உர உற்பத்தி 18-லிருந்து 20 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.  20 லட்சம் டன் யூரியா உர உற்பத்திக்கு அரசு கிட்டதட்ட ரூ.8,000 கோடி வரை செலவிட வேண்டியிருந்தது.  அந்தப் பணம் சேமிக்கப்பட்டு யூரியா உரம் விவசாயிகளுக்கு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

சகோதர-சகோதரிகளே,

பெட்ரோலியம், எரிவாயு ஆகியவை தொடர்பாக, நாம் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்து மறு ஆய்வு செய்யத் தொடங்கினோம்.  இந்த ஒப்பந்தங்கள் 30 ஆண்டுகளுக்கு கையெழுத்திடப்பட்டன.  இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளுடன் நாம் விவாதித்தோம்.  கத்தார் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து மீண்டும் சமரசம் செய்யப்பட்டன.  அந்த ஒப்பந்தங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன.  இந்த மாற்றத்தின் விளைவாக நாம் செலுத்த வேண்டிய பணம் ரூ.12,000 கோடி மட்டுமே. இந்த தொகை இதற்கு முன்பு செலுத்தியதை விட குறைவானதாகும்.  இதன்மூலம் நாட்டுக்கு ரூ.12,000 கோடி வரை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

சகோதர-சகோதரிகளே,

இந்த அரசு ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை அமல்படுத்தியது.  கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்தும், அரசுக்கு வரி செலுத்தாதவர்கள், மற்றவர் பெயரில் பணத்தை சுருட்டியவர்கள், போலியான நிறுவனங்களை தொடங்கியவர்கள், கறுப்புப் பணத்தின் மூலம் பேரம் பேசியவர்கள் ஆகிய திமிங்கலங்கள் குறித்து அரசு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த ஓராண்டில் பதிவு செய்யப்பட்ட 3.5 லட்சம் போலி நிறுவனங்கள் அரசு நடவடிக்கையின் காரணமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

நண்பர்களே, வெளிநாடுகளில் நமது நாட்டு மக்கள் உழைத்து சம்பாதிக்கும் பணம் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்கிறது.

நண்பர்களே, இங்கே நீங்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் குறித்து, நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம்.  ஓமன் அரசுடன் நாங்கள் தொடர்ந்து உங்கள் பிரச்சினைகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறோம்.  உங்கள் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண நாங்கள் முயற்சி மேற்கொள்வோம்.  “குடிபெயர்தல் அமைப்பு” (Migrade System) “மதாத் தலைவாயில்” (Madad Portal) ஆகியவற்றின் மூலமாக உங்கள் குறைகளுக்கு தீர்வு காணப்படும்.

நண்பர்களே, அனைவரும்  இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற நமது அணுகுமுறை உலகம் முழுவதும் மறுசிந்தனையை ஏற்படுத்துவது உறுதி.  ஐக்கிய நாடுகள் நிறுவனம், சர்வதேச யோகா தினத்தை அறிவித்திருப்பது, இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேச சூரிய ஒளி கூட்டணி அமைக்கப்பட்டிருப்பது ஆகியவை இந்திய மக்களின் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.  உங்கள் அனுபவத்தின் பலனாக இந்தியா பயனடைந்து வருகிறது.  உங்கள் ஆதரவுக்காக இந்தியா உங்களுக்கு கடன்பட்டுள்ளது.  நாட்டின் மேம்பாட்டிலும் உருவாக்கத்திற்கும் நீங்கள் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள்.  நவீன இந்தியாவை உருவாக்குவதில் உங்கள் கனவை நனவாக்குவதில் நீங்கள் கொண்டுள்ள உறுதியின் வளைவு இந்தியாவில் உணரப்பட்டு வருகிறது.  நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கிறேன்.  உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

***



(Release ID: 1554448) Visitor Counter : 932


Read this release in: Assamese , English