மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

யோஜனா மாத இதழின் “டிஜிட்டல் இந்தியா” குறித்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டது

Posted On: 30 NOV 2018 4:39PM by PIB Chennai

யோஜனா மாத இதழின் 2018 டிசம்பருக்கான டிஜிட்டல் இந்தியா குறித்த சிறப்பு மலரை மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், சட்டம், நீதித்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் இன்று (30.11.2018) புதுதில்லியில் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், டிஜிட்டல் இந்தியா திட்டம் அரசியல் எல்லைகளைத் தாண்டி சென்றுள்ளது என்றும், இதனை எந்த மாநில அரசும் எதிர்க்கவில்லை என்றும் கூறினார். அதே சமயம் டிஜிட்டல் ஊடகங்கள் பத்திரமாகவும், பாதுகாப்பானதாகவும் இருந்தால்தான் அதன் பயன்கள் சமமான முறையில் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று கூறினார்.

 

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் வெளியீடான யோஜனா மாத இதழ், சமூக பொருளாதார பிரச்சனைகளை முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வெளிவருகிறது. நாட்டின் சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு விவாத மேடையாகவும் அது அமைந்துள்ளது.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம், இந்தியாவை அறிவுசார் பொருளாதாரமாகவும் டிஜிட்டல் முறையில் அதிகாரம் பெற்ற சமுதாயமாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டது.  டிஜிட்டல் வசதிகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது, இதனை அனைவரையும் உள்ளடக்கியதாக செய்வது, டிஜிட்டல் அதிகாரமளித்தல், டிஜிட்டல் இடைவெளியை நீக்குதல் போன்றவற்றை நோக்கமாக கொண்டது டிஜிட்டல் இந்தியா திட்டமாகும்.

யோஜனாவின் டிஜிட்டல் இந்தியா பற்றிய டிசம்பர் மாத சிறப்பிதழ் இத்திட்டத்தை பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கியது. இந்த கட்டுரைகள் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அம்சங்களை தெளிவாக்கும் வகையில் அமைந்துள்ளன.

*****

எம்.ஆர்.வி. /



(Release ID: 1554333) Visitor Counter : 594


Read this release in: English , Marathi