பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

தட்பவெப்ப நிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சி, மாதிரி, கூர்ந்து நோக்கும் அமைப்புகள் மற்றும் பணிகள் தொடர்பான விரிவான திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 22 NOV 2018 1:25PM by PIB Chennai

தட்பவெப்ப நிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சி, மாதிரி, கூர்ந்து நோக்கும் அமைப்புகள் மற்றும் பணிகள் தொடர்பான, 9 துணைத் திட்டங்கள் அடங்கிய விரிவான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில்  புதுதில்லியில் இன்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இவை ரூ.1450 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டங்கள் இந்திய வானிலைத் துறை, வெப்பமண்டலம் சார்ந்த வானிலைக்கான இந்திய நிறுவனம், நடுத்தர அளவு வானிலை கணிப்புக்கான தேசிய மையம், கடல்சார் தகவல் சேவைக்கான இந்திய தேசிய மையம் ஆகிய நிறுவனங்கள் வாயிலாக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் இந்தத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளது.

     காற்றின்மூலம் பரவும் நோய்களைப் பற்றிய ஆராய்ச்சி செய்வதற்கான தேசிய அமைப்பை ரூ.130 கோடி செலவில், 2020-2021ஆம் ஆண்டில் நிறுவுவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வானிலை, பருவநிலை மற்றும் பெருங்கடல் தொடர்பான கணிப்புகள், அவைசார்ந்த தகவல்களை அளிக்கும் பணிகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டம் பயன்படும்.

****

வி.கீ/க


(Release ID: 1553435)
Read this release in: Marathi , English , Hindi , Bengali