குடியரசுத் தலைவர் செயலகம்

இந்திய குடியரசுத்தலைவர் வியட்நாம் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்; பிரதிநிதிகள் அளவில் பேச்சுவார்த்தை இந்தியாவின் “எளிதாக செயல்படு” கொள்கைக்கு வியட்நாம் முக்கியம்

Posted On: 20 NOV 2018 12:00PM by PIB Chennai

வியட்நாமில் மூன்று நாள் அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், தமது பயணத்தின் கடைசி நாளான இன்று (20.11.2018) ஹனாய் நகரில் உள்ள தேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

  இருதரப்பு உறவாக வியட்நாம் அதிபரைச் சந்தித்து பேசியதுடன் பிரநிதிகள் குழு நிலையிலும் குடியரசுத் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.  அப்போது இருநாடுகளுக்கு இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்பட்டன:

  • வியட்நாம் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு இடையேயான ஒப்பந்தம்.
  • வியட்நாம் வெளியுறவு விவகார அமைச்சகம், மாகாணங்களுக்கான வெளியுறவு விவகாரத்துறை மற்றும் வியட்நாம் இந்திய வர்த்தக சங்கம் இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
  • ஹோ சி மின் தேசிய அரசியல் அகடமி, ஹனாய் மற்றும் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இடையிலான கல்வி தொடர்பான ஒப்பந்தம்.
  • இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் வியட்நாம் வணிகம், தொழில் வர்த்தக சபை  இடையிலான ஒப்பந்தம்.

 

 

 

 இன்று காலை நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர், வியட்நாமின் தேசிய தலைவர்கள், தியாகிகள் ஆகியோரின் நினைவுச் சின்னத்திற்கும் மற்றும் ஹோ சி மின்  கல்லறைக்கும் சென்று மரியாதை செலுத்தினார்.  பின்னர் அதிபர் மாளிகைக்குச் சென்ற குடியரசுத் தலைவரை வியட்நாம் அதிபர் திரு. குயென் பு ட்ராங் வரவேற்றார். குடியரசுத் தலைவருக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

----

வி.கீ/நைனா/கீதா 

 

 



(Release ID: 1553322) Visitor Counter : 197


Read this release in: English , Hindi , Marathi