பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

நிர்பயா நிதியத்தின் கீழ் 3 புதிய திட்டங்கள் : மத்திய மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல்

Posted On: 16 NOV 2018 4:58PM by PIB Chennai

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நிர்பயா நிதியத்தின் கீழ் மூன்று முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அமைச்சகத்தின் செயலர் தலைமையிலான அலுவலர் குழு இந்த ஒப்புதலை வழங்கியது. இந்தத் திட்டங்களின் விவரங்கள் வருமாறு :

 

  1. நாடெங்கிலும் நிலுவையில் உள்ள வன்புணர்வு மற்றும் போக்ஸோ சட்டம் தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்கு 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறைக்கு ரூ.767.25 கோடி அளிப்பதற்கான திட்டம். முதல்கட்டத்தில் 9 மாநிலங்களில் 777 விரைவு சிறப்பு நீதிமன்றங்களும், இரண்டாம் கட்டத்தில் 246 நீதிமன்றங்களும் அமைக்கப்படும்.
  2. மத்திய உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ள ரூ.107.19 கோடி செலவில், பாலியல் பலாத்கார வழக்குகளில் தடயவியல் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளை கொள்முதல் செய்து, இத்தகைய வழக்குகளில் பயன்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம்.
  3. கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் முன்மொழிந்துள்ள ரூ.17.64 கோடி செலவில், 50 ரயில் நிலையங்களில் வீடியோ கண்காணிப்பு முறைகள் அமைக்கும் திட்டம்.

*****

வி.கீ/கோ



(Release ID: 1552991) Visitor Counter : 359


Read this release in: English , Marathi