வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழில்கள் தொடங்க உலகளாவிய மையமாகி வருகிறது இந்தியா

Posted On: 16 NOV 2018 12:40PM by PIB Chennai

[தொழில் தொடங்க உகந்த சூழல் குறித்த 2018ம் ஆண்டு அறிக்கையை மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிடுகிறார்]

புதிதாகத் தொழில்கள் தொடங்குவோரின் திறமையால் இந்தியாவின் வளர்ச்சியில் மகத்தான மாற்றங்கள் ஏற்பட உள்ளன என்று மத்திய வர்த்தகம் – தொழில் துறை அமைச்சர் திரு சுரேஷ் பிரபு குறிப்பிட்டார்.

இந்தியாவில் புதிதாகத் தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழல் குறித்த 2018ம் ஆண்டு அறிக்கையை (State of the Indian Startup Ecosystem-2018) அவர் புது தில்லியில் இன்று (நவம்பர் 16) வெளியிட்டார். இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சூழல் குறித்த விவரங்களைத் திரட்டி தொகுத்து அளித்து வரும் (Inc 42) என்ற இந்திய தகவல் தளம் (Indian information platform) இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் புதிதாகத் தொழில் தொடங்க சாதகமான சூழலை விரைவாக உருவாக்குவதற்காக மத்திய வர்த்தக அமைச்சகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்டார். “இதையடுத்து, பல நீண்டகாலமாக இயங்கும் தொழில்களுக்காக வகுக்கப்பட்ட பல விதிமுறைகளை மறு ஆய்வு செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதிதாகத் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் அந்த விதிகள் மாற்றப்படும், தேவையில்லாதவை நீக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய முதலீட்டாளர்களின் மாநாடு அடுத்த மாதம் டிசம்பரில் நடத்தப்படும். அதிக அளவில் முதலீடுகளை வரவேற்கும் வகையில் பல தொழில் நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கும் என்றும் அவர் அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

 

***



(Release ID: 1552975) Visitor Counter : 172


Read this release in: English , Urdu , Hindi , Marathi