பிரதமர் அலுவலகம்

டெஸ்டிநேஷன் உத்ராகண்ட் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 07 OCT 2018 6:40PM by PIB Chennai

உத்தராகண்ட் ஆளுநர் திருமதி. பேபி ராணி மவுரிய அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்களே, முதல் அமைச்சர் திரிவேந்திர சிங் அவர்களே, உத்தராகண்ட்  மாநில சட்டமன்ற உறுப்பினர்களே, சிங்கப்பூர் நாட்டின் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் திரு. எஸ். ஈஸ்வரன் அவர்களே, ஜப்பான் மற்றும் செக் குடியரசு தூதர்கள், மற்றும் உலகெங்குமிலிருந்து வந்திருக்கும் தொழில் முனைவோர்கள், பெரியோர்களே, தாய்மார்களே.

பாபா கேதார்நாத் மற்றும் சர்  தம் இருக்கும் இந்த புனித தளமான உத்தராகண்டிற்கு நாடு  மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கும் நண்பர்களே அனைவருக்கும் எனது வணக்கங்களை தெரிவித்து வரவேற்கிறேன். பல்லாயிரம் ஆண்டு பழமை பெற்ற கலாச்சாரத்துடன் இந்தியாவின் பொருளாதார சூழ்நிலையை கண்டறிந்து ஒரு புதிய உணர்வுடன் திரும்பவீர்கள் என்று நம்புகிறேன்.

நண்பர்களே,

இந்தியா பெரும் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை சந்தித்து வரும் தருணத்தில் நாம் இங்கு  உத்தராகண்டில் கூடியுள்ளோம். நாடு மிக முக்கிய மாற்றங்களை கண்டு வருகிறது. புதிய இந்தியாவை நோக்கு நாம் நகர்கிறோம். வரும் ஆண்டுகளில் உலகத்தின் வளர்ச்சிக்கு இந்திய முக்கிய உந்துதலாக இருக்கும் என்று அனைத்து முக்கிய சர்வதேச நிறுவனங்களும்  கூறுகின்றன. தற்போது இந்தியாவின் நிலையாகி உள்ளது. நிதி பற்றாக்குறை குறைந்துள்ளது, பணவீக்க விகிதமும் கட்டுப்பாட்டில் உள்ளது. நடுத்தர மக்கள் வேகமாக வளர்கின்றனர். மக்கள்தொகை பங்கீட்டில் உள்ள 80 கோடி இளைஞர்கள் அனைவருமே வெற்றி நம்பிக்கையுடனும், திறன்களுடனும் இருக்கின்றனர்.

நண்பர்களே,

 

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார சீர்திருத்தம் வேகமாகவும் திறனாகவும் நடைபெற்றுவருகிரியாது. கடந்து இரண்டு ஆண்டுகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் 10000 மேற்பட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிகளால்தான் எளிதாக தொழில் செய்யக்கூடிய நாடுகளில் பட்டியலில் இந்திய 42 இடங்கள் முன்னேறியுள்ளது. இந்த சீர்த்திருத்த முயற்சியில், 1400 க்கும் மேற்பட்ட சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது. இதோடு இந்தியாவின் வரி முறையிலும் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரி தொடர்பான தீர்வுகளை எள்ளலும் வெளிப்படையாகவும் சிறப்பிக்கவும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது

        நொடிப்பு மற்றும் கடனை தீர்க்க இயலாத நிலை குறித்த  குறியீடு, வியாபாரம் செய்வதை இலகுவாக்கியுள்ளது. வங்கி  அமைப்பையும் வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு சரக்கு மற்றும் சேவை வரியை அமலுக்கு கொண்டுவந்தது மிகப்பெரிய வரி சீர்த்திருத்த நடவடிக்கையாகும். சரக்கு மற்றும் சேவை வரி நாட்டை ஒரே சந்தையாக மாற்றியுள்ளது. மேலும் வரித்தளத்தையும் விரிவாக்க உதவியுள்ளது.

    நமது அடிப்படை கட்டமைப்புத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு பத்தாயிரம் கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை இந்தியாவில் அமைக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 27 கிலோ மீட்டர் வேகத்தில் இப்பணி மேம்பட்டு வருவதை இது உணர்த்துகிறது. முந்தைய அரசுகளைக் காட்டிலும் இப்போது இந்தப் பணி இருமடங்காகும். ரயில்பாதைகளும், இருமடங்கு வேகத்தில்  அமைக்கப்பட்டு வருகின்றன. புதிய பெருநகர, அதிவேக ரயில்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சரக்கு முனையங்கள் பல நகரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  400 ரயில் நிலையங்களை நவீனமாக்கும் பணியையும் அரசு தொடங்கியுள்ளது.

  இந்திய விமானப்போக்குவரத்துத் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வேகத்தை மேலும் விரைவுப்படுத்த சுமார் நூற்றுக்கும் அதிகமான விமான நிலையங்கள் மற்றும் விமான தளங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களுக்கு உதான் திட்டம் வழியாக விமானப் போக்குவரத்து தொடர்பை மேம்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் அதிகமான தேசிய நீர்வழிகளை உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

நண்பர்களே,

    இது தவிர அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்வசதி, அனைவருக்கும் தூய எரிபொருள், அனைவருக்கும் சுகாதார சேவை, அனைவருக்கும் வங்கி சேவை உள்ளிட்ட பெரிய திட்ட இலக்குகளை அடையவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. முழுமையான மாற்றம் காரணமாக உங்களுக்கும் உலகின் பல பகுதிகளிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கும் சாதகமான சுற்றுச்சூழல் நிலவுகிறது.

   அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் இந்திய மருத்துவத் துறையில் முதலீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் புதிய மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவ மனிதவள மேம்பாட்டு நிலையங்கள் தொடங்கப்படும்.  இதன் மூலம் துணை மருத்துவக் கட்டமைப்பு டயர்-2, டயர்-3 நகரங்களில் வலுப்படுத்தப்படும். 50 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் ரூ.5 லட்சம் வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீட்டு பெறுவார்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும். அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கும் அதிகமான இந்திய மக்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தினால் பலனடைவார்கள். ஐரோப்பிய நாடுகள் மக்கள்  தொகைக்கும் அதிகமான இந்திய மக்கள் இந்த பலனைப் பெறுவார்கள். இந்தப் பயன்களை அளிப்பதற்காக  மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நமக்கு தேவைப்படுகிறார்கள்.  முதலீட்டுக்கும் மருத்துவ சிகிச்சைக்கு நோயாளிகள் கட்டணத்தை அளிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.  முதலீட்டாளர்களுக்கு உரிய பலன் கிடைக்கும் வகையில், உறுதித்தன்மை உள்ளது.  டயர்-2, டயர்-3 நகரங்களில் தரமான மருத்துவமனைகளை அமைப்பதற்கான பெரிய அளவிலான முதலீட்டுக்கு பெரிய வாய்ப்புள்ளது.

நண்பர்களே,

   இன்று கட்டமைப்பு வசதிகளில் செலவிடப்படும் தொகை இதற்கு முன்பு எப்பொதும் இல்லாததாகும். எனவே முதலீட்டுக்கான வாய்ப்புகள் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகளையும் அளிக்கிறது.  முன்னேற்றத்தின் அடையாளம், கொள்கை மற்றும் திறமையாகும். முதலீடு செய்வதற்கு புதிய இந்தியா மிகச் சிறந்த  நாடாகும்.  உத்தராகண்டை நோக்கி (Destination Uttarakhand) என்பது அதில் ஒரு பிரகாசமான பகுதியாகும்.  உத்தராகண்ட் நாட்டின் இதர மாநிலங்களைப் போன்று புதிய இந்தியாவையும் நமது மக்கள் தொகை பிரிவையும் வெளிப்படுத்துகிறது. இளைஞர்கள் மற்றும் அவர்களது ஆர்வத்தை வெளிப்படுத்தும் மாநிலமாக இன்று உத்தராகண்ட் உருவெடுத்துள்ளது. திரு. திருவேந்திர ராவத் தலைமையில் அரசு, இந்த மாநிலத்தில் கிடைக்கும் அளவற்ற வாய்ப்புகளை சந்தர்ப்பங்களாக மாற்றுவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளுக்கு  டெஸ்டிநேஷன் உத்தராகண்ட் நடைமேடையாக அமைந்துள்ளது. தற்போது  விவாதங்கள் நம்பிக்கை, மற்றும் ஆர்வம் ஆகியவற்றை மிக விரைவில் செயலாக்கத்திற்கு கொண்டுவருவது அவசியமாகும். அப்போதுதான் உத்தராகண்ட் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்புக்கான வசதிகள் பெருகும்.

நண்பர்களே,

   மறைந்த திரு.அடல் பிஹாரி வாஜ்பேயி, உத்தராகண்டை உருவாக்கியபோது, அப்போதைய சந்தர்ப்பங்கள் சாதகமாக இல்லை. அரசியல் ஸ்தரதன்மை இல்லாதபோது சிறந்த எதிர்காலத்திற்கான இலக்கு நம்மிடம் இருந்தது. எனினும் இன்று முன்னேற்ற பாதையை நோக்கி உத்தராகண்ட் அதிவேகத்தில் நகர்ந்து வருகிறது.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்கும், அதிகாரமாக்குதலுக்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுதொழில்களுக்கு அதிகக் கடன்வசதி, மூலதன ஆதரவு, வட்டி மானியம், குறைந்தவரி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அண்மையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு  வழங்கப்படும் கடன் தொகையில் ரூபாய் ஒரு கோடி வரை குறுகிய காலத்தில் ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    தற்போது ஆன்-லைனில் பல வசதிகள் உள்ளன. எந்தவொரு முதலீட்டாளரும் தங்களது திட்டத்திற்கு அனுமதி பெற அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்பதற்காக இந்த ஏற்பாடு.  ஆன்-லைன் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிமுறைகளை எளிமையாக்கியதோடு அதற்கென  பரிவேஷ் (Parivesh)   என்ற ஒரு வெப் முகப்பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. 

    உத்தராகண்டுடனான  தொடர்பை  விரிவுப்படுத்துவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை, ரயில்போக்குவரத்து. விமானப் போக்குவரத்து ஆகியவற்றுடன் உத்தராகண்ட் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும், உறுதியான சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சார் அணைக்கட்டு, அனைத்து பருவநிலைக்கான சாலை வசதி மற்றும் ரிஷிகேஷ் மற்றும் கர்ணபிரயாக் ரயில் பாதைத் திட்டப்பணிகளும், விரைவாக முன்னேற்றம் கண்டு வருகின்றன.

நண்பர்களே,

  குறிப்பாக சுற்றுலாத்துறை மூலம், இணைப்பு வசதி சிறந்த பலனைத் தரும். இயற்கை வளம் இந்த மாநிலத்தில் அதிகமாக உள்ளது.  அதே நேரத்தில் பக்தியும். கலாச்சாரமும் அதிகமாக உள்ளது. இயற்கை வீரதீரச் செயல், கலாச்சாரம், யோகா மற்றும் தியானம் ஆகியவை உத்தராகண்ட் சுற்றுலாவின் முழுமையான அம்சங்களாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாதளம்.   சுற்றுலாவுக்கான தனிக்கொள்கை மூலம், சுற்றுலாவுக்கு ஒரு தொழில் அந்தஸ்த்தை உத்தராகண்ட் அரசு வழங்கியுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் முதல் முறையாக 13 புதிய சுற்றுலாத் தளங்கள், 13 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. இம்மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கும்.

நண்பர்களே,

      உத்தராகண்ட் இயற்கை வளம்கொழிக்கும் மாநிலமாக உருவாகும் தகுதியைப் பெற்றுள்ளது. இயற்கை விவசாயத்திற்கான உத்திகள் இம்மாநிலத்தை மேலும் ஊக்குவிக்கும். இயற்கை விவசாயத்திற்கான சந்தையை ஏற்படுத்த மத்திய அரசும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    அத்துடன் உணவுப்பதப்படுத்தலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. உணவுப் பதப்படுத்தும் துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உணவுப்பதப்படுத்தும் துறையில் ஈடுபட்டுள்ள முன்னோடி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உணவு தானியங்களின் உற்பத்தி, பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் ஆகியவை பதப்படுத்தும் தொழிலில் அடங்கும். இந்த எல்லா துறைகளிலும் இந்தியா முதல் 3 இடங்களில் உள்ளது. விவசாய உற்பத்தியில் எதுவும் வீணாகக்கூடாது என்பதில் பதப்படுத்தும் துறையை வலுப்படுத்துவதே நமது நோக்கம். இத்துறையில் உத்தராகண்டுக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது.

   விவசாயம், மற்றும் விவசாயம் தொடர்பான தொழில்களில் அதிக அளவு முதலீடு செய்யுமாறு  உங்கள் அனைவருக்கும் சிறப்பு வேண்டுகோள் விடுக்க நான் விரும்புகிறேன்.  விவசாயத்தில் மறைந்திருக்கும் அதன் கூடுதல் மதிப்பு விவசாயிகளுக்கு அதிக வருவாயை ஈட்டித்தருவதில் முக்கிய பங்காற்றும். எனவே, விவசாயத்துறையில், உணவுப்பதப்படுத்துதல். மதிப்புக்கூட்டுதல்,  குளிர்பதனக் கிடங்கு, சரக்கு பெட்டக மையம், போக்குவரத்து ஆகிய துறைகளில் அதிக அளவில் தனியார் முதலீடு செய்வதன் மூலம். கிராமப்புற பொருளாதாரம் மேம்படும்.

   புதுப்பிக்கத்தக்க  எரிசக்தித் துறையில் இந்தியா இன்று உலக அளவில் தலைமையிடத்தில் உள்ளது. உலக நாடுகளை வழிநடத்திச் செல்லும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது. 2030-ஆம் ஆண்டில்  40 சதவீத மின் உற்பத்தி, புதைந்து கிடக்கும் எரிபொருள் அல்லாத வளங்களிலிருந்து திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும். 2022-ம் ஆண்டில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தன்று 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கில் சூரியசக்தி முக்கிய இடத்தைப் பெறுகிறது.  சர்வதேச சூரிய கூட்டணியின் பின்னணி நோக்கமும் இதுதான். உலக நாடுகளின் எரிசக்தித் தேவையை நிறைவு செய்வதை உறுதி செய்வதற்கும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், நமக்கு ஒரே மந்திரம் தான் உள்ளது – “ஒன்றே உலகம், ஒன்றே சூரியன், ஒன்றே மின் தொகுப்பு”       உத்தராகண்ட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதற்கு அரசும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.  நீர்மின்சாரம் இந்த மாநிலத்தின் முக்கிய வலுவாகும். உத்தராகண்ட், சூரியசக்தியுடன்  மின்சக்தியும் அதிகமாக உள்ள மாநிலமாகும். இந்தியாவை எரிசக்தி வளமிக்க மாநிலமான உருவாக்கும் சக்தி உத்தராகண்டுக்கு உள்ளது.

நண்பர்களே,

    கடந்த நான்கு ஆண்டுகளில் “இந்தியாவில் தயாரிப்போம்” என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் பொதுவாக உள்ளது. நமது அழைப்பை உலக நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. தற்போது தகவல் தொழில்நுட்பத்தில் மட்டுமல்லாது மின்னணு உற்பத்தியிலும் இந்தியா ஒரு சிறந்த மையமாக உருவாகியுள்ளது. இன்று உலகின் மிகப்பெரிய கைபேசி தயாரிப்பு நிறுவனம் 120-க்கும் மேற்பட்ட  ஆலைகளுடன் இயங்கி வருகிறது.  உலகின் பல பிரபலமான பொருட்கள் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது.

    அதே நேரத்தில்  தானியங்கி வாகனத்துறையிலும் இந்தியா பெரிய அளவிலான சாதனைகளை படைத்து வருகிறது. இதில் உத்தராகண்டுடன் ஜப்பான் பங்குதாரராக சேர்ந்துள்ளது. ஜப்பானின் பொருட்கள், அதன் கார்கள்  தற்போது  இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை  ஜப்பான் இறக்குமதி செய்கிறது.

நண்பர்களே,

   இன்று இந்த நிகழ்வின் மூலம், பல்வேறு துறைகளில் முதலீடு செய்யுமாறு உங்களை நான் அழைக்கிறேன்.  உத்தராகண்ட் மற்றும் புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கதையில்  நீங்களும் பங்கு பெற வேண்டும்.

   அடுத்த இரண்டு நாட்களில் கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்  கையெழுத்தாக உள்ளன. இந்தியாவின் வளர்ச்சியையும், வளர்ச்சிக் கதையையும் யாராலும் நிறுத்த முடியாது. மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி தற்போது ஏற்பட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலத்தை முந்திச் செல்ல விரும்புவதுடன் புதிய கண்டுபிடிப்பிலும் கவனம் செலுத்துகிறது.   தங்களது தகுதிக்கு ஏற்ப செயல்படவும் விரும்புகிறது.  தங்களது தகுதிக்கு ஏற்ப ஒரு மாநிலம் முன்னேற்றம் அடையும் போது அந்த மாநிலம் நீண்ட காலம் பின்தங்கியிருக்காது என்று நான் கருதுகிறேன்.

   நமது மாநிலங்களின் பலம் உலகின் பெரும்பாலான நாடுகளைக் காட்டிலும் பெரிதாகும். நமது மாநிலங்களின் திறமை, உலகின் பல சிறு நாடுகளைக் காட்டிலும் சிறந்ததாகும்.

    ஒவ்வொரு மாநிலமும் பெரிய அளவில் கனவு காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ஒன்றை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். அது அக்டோபர் 7-ம் தேதியாகும். அந்த ஆண்டு 2001-ஆகும். எனக்கு எந்த அனுபவமும் இல்லை. அரசு எப்படி செயல்படுகிறது என்பது எனக்கு தெரியாது. எந்த அலுவலகத்தையும் நான் பார்க்கவில்லை. நான் முற்றிலுமாக புதியவன். பத்திரிகையாளர்கள் வந்துபோது பல கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள். அவர்கள் கடுமையாக முயன்றனர். அப்போதுதான் நான் தவறாக பேசுவேன் என்று கருதினார்கள். முதல் கட்டத்தில் எனது பதவியை நான் முன்னெடுத்துச் செல்லாத வகையில், ஏதோ சொல்வேன் என்று எதிர்பார்த்தார்கள். குஜராத்தை மேம்படுத்த விரும்புகிறீர்களா என்று ஒருவர் வினவினார்.  உங்களது வழிதோன்றல் யார்? குஜராத்தை மேம்படுத்த யாரை பின்பற்றப் போகிறீர்கள் ?  சாதாரணமாக இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, சிலர் அமெரிக்காவையோ இங்கிலாந்தையோ பின்பற்றப்போவதாக சொல்வார்கள் நான் வித்தியாசமாக பதில் அளித்தேன். தென்கொரியாவைப் போல உருவாக்க வேண்டும் என்று பதில் கூறினேன். நான் அவர்களது கேமராக்களை மூடிவிடுமாறு கேட்டுக் கொண்டேன். உங்களுக்கு நான் விளக்கம் அளிக்கிறேன். நீங்கள் எந்த கஷ்டத்தையும் எதிர்நோக்கக் கூடாது. குஜராத்தின் மக்கள் தொகை அளவுதான் தென்கொரியாவிலும் உள்ளது இரண்டுக்கும் கடல் எல்லை உள்ளது. வளர்ச்சிக்கான அவர்களது பயணம் ஒன்றுதான். நான் சொன்னேன் “ விரிவாக படித்திருக்கிறேன் அந்தப் பாதையை நான் பின்பற்றினால் நிச்சயமாக நாம் முன்னோக்கி நகர்வோம். எப்போதும் அதனை நாங்கள் நிறுத்திவிட மாட்டோம்”

    ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு ஆற்றல் இருக்கிறது. நான் போட்டியிட்டு மற்ற நாடுகளை பின்னுக்கு தள்ளுவேன். நம் நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் இந்தத் தகுதியுடன் முன்னேறிச் செல்லலாம். நமது இளைஞர்களுக்கு அந்த வலுவும், ஆற்றலும் தகுதிகளும் உள்ளன.  

   ரஷ்ய அதிபர் நேற்று முன்தினம் இந்தியா வந்திருந்தார். முதலில் நாங்கள் வித்தியாசனமான நிகழ்வில் பங்கேற்றோம்.
ரஷ்ய கல்வி நிறுவனம் ஒன்றின் மீது அவர் தனது விருப்பத்தை தெரிவித்தார். அந்த இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். அங்குள்ள மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும்படி நான் கேட்டுக் கொண்டேன். இந்தியாவில் உள்ள சில மாணவர்களையும் ரஷ்யாவுக்கு அனுப்ப நான் விருப்பம் தெரிவித்தேன். எனவே இம்முறை 20 மாணவர்களை அழைத்து வந்திருந்தார். அந்த இருபது ரஷ்ய மாணவர்களும் 20 இந்திய மாணவர்களுடன் ஐந்தாறு நாட்கள் பணியாற்றினர். அந்த மாணவர்கள் ஆச்சரியமிக்க பணியை செய்திருந்தனர். நானும், ரஷ்ய அதிபரும், அதைக் கண்டு மதிமயங்கிவிட்டோம். நமது குழந்தைகளிடம் அளவற்ற ஆற்றல் உள்ளது அவற்றை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்க வேண்டும். உத்தராகண்ட் இந்தத் துறையில் இன்று முதல் படியை எடுத்து வைத்துள்ளது.   18-வது வருடம் மிகவும் சிறப்பு வாய்ந்த்தாகும். உத்தராகண்ட் மிகப் பழமையானது, ஆனால் உத்தராகண்ட் அரசு அமைந்து 18 ஆண்டுகள் ஆகின்றன. 18 ஆண்டின் ஆர்வமும், கனவுகளும் புதிதாக ஏதேனும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் வியக்கத்தக்கது. தனது 18-வது ஆண்டில் உத்தராகண்ட் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அதனை வீணடிக்கக்  கூடாது. இது மிகவும் முக்கியமான தருணம்.

   பொருளாதார மேம்பாட்டிற்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்பதை பல ஆண்டுகளாக நாம் கேள்விபடுகிறோம். எனினும் உத்தராகண்டில் வேறுபட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளது. ரிஷிக்கள், சாதுக்கள், மதர் கங்கா, தேவாதி தேவா இமாலயாஸ். ஆகியோரைக் கொண்ட மண்டலமாக பல நூற்றாண்டுகளாக இது செயல்பட்டு வருகிறது. இது மிகவும் அரிதான ஆன்மீக பசுமை மண்டலமாகும்.  ஆன்மீக பசுமை மண்டலத்தின் பலம் சிறப்பு பொருளாதார மண்டலத்தைக் காட்டிலும் பல லட்சம் மடங்கு அதிகமாகும். உத்தராகண்ட் மாநிலத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை மேலும் விரிவுப்படுத்த வேண்டும். திரு. ராவத் தலைமையின் கீழ் 18 ஆண்டு பழமையான ஆர்வமிக்க அரசு, இந்த மாநிலத்தை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உதவும் என நம்புகிறேன். நீங்கள் 25 ஆண்டுகளை எட்டும் போது உங்களது பல கனவுகள் ஏற்கனவே நனவாகிவிட்டதைப் பார்ப்பீர்கள். இந்த நீண்ட நெடிய முயற்சி சிறப்புவாய்ந்த தொடக்கமாகும். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.  மத்திய அரசிடமிருந்து நீங்கள் முழு ஆதரவை பெறுவீர்கள் என்பதை உங்களுக்கு உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

மிக்க நன்றி……..

---------------



(Release ID: 1552824) Visitor Counter : 286