நிதி அமைச்சகம்

எதிரி சொத்து பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 08 NOV 2018 8:41PM by PIB Chennai

எதிரி சொத்து பங்குகளை விற்பதற்காக நடைமுறை விதிகள் மற்றும் செயல்முறைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் விவரங்கள்:

  1. எதிரி சொத்து சட்டம், 1968-ன் 8ஏ பிரவின் கீழ் உள்ள உட்பிரிவு 1-ன் படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிகாப்பு/ இந்திய எதிரி சொத்து பாதுகாப்பு பிரிவின் கீழ் உள்ள எதிரி சொத்து பங்குகளை விற்க ‘கொள்கையளவிலான’ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  2. இதனை விற்க முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் எதிரி சொத்து சட்டம், 1968-ன் 8ஏ பிரவின் கீழ் உள்ள உட்பிரிவு 7-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
  3. இந்த விற்பனையில் இருந்து வரும் வருமானம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் அரசாங்க கணக்கில் பங்கு விலக்க வருமானமாக வரவு வைக்கப்படும்.

 


(रिलीज़ आईडी: 1552251) आगंतुक पटल : 273
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Telugu , Kannada