குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இன்று இந்தியாவில் நடைபெறும் அற்புத வளர்ச்சிக்கு நீங்களும் பங்களியுங்கள்: போட்ஸ்வானாவில் உள்ள இந்தியர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு
प्रविष्टि तिथि:
02 NOV 2018 9:21AM by PIB Chennai
இன்று இந்தியாவில் நடைபெறும் அற்புத வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களும் பங்களிக்கலாம் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு தெரிவித்தார். போட்ஸ்வானாவில் உள்ள இந்தியர்களிடம் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், போட்ஸ்வானாவின் பன்முகத்தன்மை கொண்ட, பரந்த மற்றும் ஜனநாயக சமுதாயத்துடன் மட்டும் போட்ஸ்வானாவில் உள்ள இந்தியர்கள் ஒருங்கிணையவில்லை, கூடுதலாக, போட்ஸ்வானாவின் பொருளாதாரத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளனர் என்று கூறினார்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசு பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், அவர்களை இந்தியாவின் கலாச்சார தூதர்கள் என்று குறிப்பிட்டார். ‘உலகம் உங்களை இந்திய நன்மதிப்புகள் மற்றும் வாழ்க்கை முறையின் பிரதிநிதிகளாக பார்க்கிறது’ என்று அவர் கூறினார்.
இந்தியாவில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனிக்குமாறு போட்ஸ்வானாவில் வாழும் இந்தியர்களை கேட்டுக்கொண்ட குடியரசுத் துணைத் தலைவர், இந்தியா வேகமாக மாறுகிறது, மேலும் இந்தியாவின் வர்த்தக சூழல் நாளுக்கு நாள் சிறப்பாக மேம்படுகிறது என்று கூறினார். மேலும், ‘இன்று இந்தியாவில் நடைபெறும் அற்புத வளர்ச்சிக்கு நீங்களும் எவ்வாறு பங்களிக்கலாம் என்று சிந்தியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் தகவலை உலகுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் அங்குள்ள சிறந்தவற்றை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும், அப்போதுதான் நமது நாடு வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தால் துறை இணை அமைச்சர் திரு. கிருஷ்ணன் பால் குர்ஜர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
குடியரசுத் துணைத் தலைவரின் முழு உரையை www.pib.nic.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
***
(रिलीज़ आईडी: 1551728)
आगंतुक पटल : 263