|
பிரதமர் அலுவலகம்
ஜப்பான் புறப்படுவதற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
प्रविष्टि तिथि:
26 OCT 2018 6:37PM by PIB Chennai
ஜப்பானில் 28-29 அக்டோபர் 2018 நடைபெறவுள்ள வருடாந்தர உச்சிமாநாட்டுக்காக நான் செல்லவிருக்கிறேன். ஜப்பான் பிரதமர் திரு. ஸின்ஷோ அபே-உடனான எனது 12வது சந்திப்பாகும் இது. செப்டம்பர் 2014-லில் ஜப்பானுக்கு முதல்முறையாக பயணம் மேற்கொண்டேன். அதன் பிறகு 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற உச்சிமாநாட்டுக்காக நான் ஜப்பான் சென்றேன்.
கடந்த ஆண்டு பிரதமர் திரு. அபே மற்றும் திருமதி. ஹகி அபே ஆகியோருக்கு எனது சொந்த மாநிலமான குஜராத்தில் வரவேற்பு அளித்ததை மகிழ்ச்சியாக கருதினேன். ஜப்பான் இந்தியாவின் மதிப்புமிக்க நாடாகும். சிறப்பு பயனளிக்கும் வகையிலும், உலக அளவிலும் ஜப்பானுடன் நாம் பங்குதாரராக உள்ளோம். ஜப்பானுடனான பொருளாதார மற்றும் பயனுள்ள வகையிலான நமது உறவு அண்மைக் காலங்களில் முழுமையாகவும், வெளிப்படையாகவும் அமைந்துள்ளது.
ஜனநாயக ரீதியில் மதிப்புகளை நாம் பகிர்ந்துள்ளோம். எல்லோருக்கும் அமைதி மற்றும் வளம் ஆகியவை கிடைக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவும், ஜப்பானும் வெற்றிப் பாதையை நோக்கி நடைபோடுகின்றன. இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திலும், முதலீட்டிலும் ஜப்பான் முக்கியப் பங்காற்றுகிறது. மும்பை-ஐதராபாத் அதிவேக ரயில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சரக்கு ரயில்போக்குவரத்து உள்ளிட்டத் திட்டங்கள் ஆகியவை வலுவையும், நமது பொருளாதார நிலையையும் பிரதிபலிக்கிறது. நமது தேசிய முயற்சிகளான இந்தியாவில் தயாரிப்போம், திறன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, எழுமின் இந்தியா ஆகியவற்றில் ஜப்பான் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்திலும், வாய்ப்புகளிலும் ஜப்பான் முதலீட்டாளர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நடைமுறைகளில் ஜப்பானின் உலக அளவிலான தலைமையை நாம் மதிக்கின்றோம். எனது பயணத்தின்போது ஜப்பானின் உயர் தொழில்நுட்ப தகுதிமிக்க ரோபோட்டிக்சை காணும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.
பிரதமர் திரு. ஸின்ஷோ அபே-வுடன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து நான் பேச்சுவார்த்தை நடத்துவேன். இருநாடுகளின் வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் நான் கலந்துரையாடுவேன். இந்திய சமூகத்தினரிடமும் நான் உரையாற்றுவேன்.
இந்த உரையாடல்கள் ஜப்பானுடனான நமது வர்த்தகம், முதலீட்டுக்கான உறவு மேலும் வலுப்படும். புதியத் துறைகளில் ஒத்துழைப்பு, குறிப்பாக சுகாதார சேவை, டிஜிட்டல் தொழில்நுட்பம், விவசாயம், உணவுப்பதப்படுத்துதல், பேரிடர் ஆபத்து தடுப்பு மற்றும் பேரிடர் தடுப்புக்கான உள்கட்டமைப்பு ஆகியவை குறித்தும் நான் பேச்சுவார்த்தை நடத்துவேன்.
வளர்ந்து வரும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவு, மாநிலங்களுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பெறும். இந்திய-ஜப்பான் மக்களுக்கு இடையேயான நமது நேரடியான உறவு மேலும் வலுப்பெறும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. கல்வி, திறன் மேம்பாடு, கலாசாரம், மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றில் இருநாடுகளும் கலந்துரையாடுவதன் மூலம் இது சாத்தியமாகும்.
எனது பயணம் வரலாற்றில் ஆழமாக பதிந்துள்ள நமதுபாரம்பரிய நட்புறவு மற்றும் பங்களிப்பையும் எதிர்காலத்தை மேலும் வளமாக்குவதில் மேம்பாட்டை உருவாக்கும்.
***********
(रिलीज़ आईडी: 1550940)
|