நித்தி ஆயோக்

தொற்றா நோய்களுக்கு அரசு தனியார் பங்களிப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாதிரி சலுகை ஒப்பந்தத்தை நிதி ஆயோக் வெளியிட்டது

Posted On: 17 OCT 2018 3:45PM by PIB Chennai

தொற்றா நோய்களுக்கு அரசு தனியார் பங்களிப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாதிரி சலுகை ஒப்பந்தத்தை நிதி ஆயோக் இன்று (17.10.2018) வெளியிட்டது. மாவட்ட மருத்துவமனைகளில் குறிப்பாக, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருதய அறிவியல், புற்றுநோய் இயல், நுரையீரல் சார்ந்த அறிவியல் தொடர்பான தொற்றா நோய்களைத் தடுப்பது மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான கூடுதல் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த ஆவணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய அம்சங்கள்:

  1. மாவட்ட மருத்துவமனைகளில் அரசு – தனியார் பங்களிப்புப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.
  2. இதய நோய், புற்றுநோய், நுரையீரல் நோய் ஆகிய மூன்று தொற்றா நோய்களைத் தடுப்பது மற்றும் சிகிச்சை அளிப்பது.
  3. சேவைகளுக்கான வாய்ப்பு:

அ)  புற்று நோய் இயல்: நோய்த் தடுப்பு, மருத்துவ ரீதியான /

    பழைய    முறையிலான நிர்வாகம் (ஹீமோதெராஃபி, வளர்ச்சிக்   

    குறைப்பு மற்றும் ஹார்மோன்தெராஃபி).

ஆ) நுரையீரல் நோய் இயல்: நோய் அதிகரித்த நிலையில், அவசர

    நிர்வாகம், சி.ஓ.பி.டி., ப்ராங்காய்ல் ஆஸ்த்மா, ப்ராங்காஸ்கோபி

    ஆகியவற்றுக்கு மருத்துவ ரீதியான / பழைய முறையிலான

    நிர்வாகம்.

இ)  இதய நோய் இயல்:  முற்றிய நோய்க்கு அவசர நிர்வாகம்

    மருத்துவ ரீதியான / பழைய முறையிலான மற்றும்

    ஆஞ்சியோகிராஃபி / ஆஞ்சியோப்ளாஸ்டி.

iv)  அரசு  - தனியார் பங்களிப்பின்கீழ், இந்த சேவைகள் அனைத்தும் ஒரு

    பங்களிப்பாளர் அல்லது தனியார் பங்களிப்பாளர்களில் ஒரு குழுவினர்

    மூலம் வழங்கப்படும்.

v)   இத்தகைய வசதிகளை  மேம்படுத்துதல் / கட்டமைத்தல் மற்றும்

    உபகரணங்களுக்கு முதலீடு செய்வதற்கும், செயல்முறை

    நிர்வாகத்திற்கும் சேவை வழங்குவதற்கும் தனியார் பங்களிப்பாளரே

    பொறுப்பாவார்.

vi)  அரசு இடம் மற்றும் பிற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை

    வழங்கும். தேவையான உதவிகளையும் மருத்துவமனை

    வசதிகளையும் செய்து கொடுக்கும்.

vii)  மாநிலங்கள் / மத்திய காப்பீட்டு திட்டங்களின் மூலம் அவ்வப்போது

    பயன்பாட்டாளருக்கான கட்டண விகிதம் நிர்ணயிக்கப்படும்.

    மாநிலங்களில் காப்பீட்டுத் திட்டங்கள் இல்லாதபோது, மத்திய அரசின்

    பொது சுகாதார சேவைத் திட்டத்தின், காப்பீட்டு விகிதங்களைப்

    பயன்படுத்திக் கொள்ளலாம்.

viii)  இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள அரசால் வழங்கப்படும்

    சாத்திய இடைவெளி நிதியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

******



(Release ID: 1549983) Visitor Counter : 281


Read this release in: English , Hindi